Tuesday, August 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (28/08)

எனக்கு வயது 20. நான் ஏழைக் குடும்பத்துப் பெண். எனக்கு ஒரு அக்கா; இரண்டு தங்கைகள் என, நாங்கள் நான்கு பேர். என் அக்காவை, அம்மா வின் தம்பி (தாய் மாமன் )க்கே திரு மணம் செய்து வைத்தனர். அவளுக்கு, ஒரு குழந்தை பிறந்து, இரண்டாவதாக கர்ப்ப மாக இருக்கும் சமயத் தில், அடுத்து, இவளுக்கு குழந்தை பிறந்து விட் டால், வீட்டு வேலை பார் ப்ப தற்காகவும், உடல் நிலை சரியில்லாத என் அக்காவின் மாமி யாரை கவனிப்பதற்காகவும் ஒரு பெண் வேண்டும் என்பதற் காக, என்னை அம்மாவின், இரண்டாவது தம்பி (தாய்மா மன்) க்கு வரதட்சனை எதுவும் வாங்காமல், என்னை மணம் செய்து வைத்தார் என் மாமி யார். இப்போது, எல்லாரும் ஒரே கூட்டுக் குடும்பமாக வசிக் கிறோம். எனக்கு திருமணமாகி, இரண்டு வருடங்கள் ஆகி ன்றன. என் கணவர் , யாரிடமும் அதிகம் பேச மாட்டார். என்னிடம் கூட. சாப்பாடு போட்டால், போடு, போதும் இப் படித்தான் இருக்கும் இவரது பதில்; அதிக கூச்ச சுபாவம் உள் ளவர்.

இபோது என் பிரச்னை க்கு வருகிறேன் அம்மா … என் கண வர், எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துக் கூடப் பார்க்க மாட் டார்; என்னையும் கூட. ஆம் அம்மா… என் கையைத் தொட் டுக் கூட பேசியதில்லை; என்னை எங்கும் அழைத்துச் சென் றதும் இல்லை. என் அம்மாவின் வீட்டிற்கு கூட. இது மட்டும் அல்ல, மணமானதிலிருந்து நான் விழித்திருக்கும் போது, என்னிடம் தாம்பத்யத்திற்கு முயற்சி செய்ததில்லை; தூங் கும் போது தான் முயற்சி செய்கிறார். அதுவும் நடக்காமல் திரும்பிப் படுத்து விடுகிறார். ஒரு சில நாட்கள், நானே வலிய போனாலும், என்னை தடுத்து விடுகிறார். என் மாமி யார், என் கணவரிடம் கேட்டதற்கு, “நான் ஒன்றும் காரணமி ல்லை. அவள் தான் தடுத்து விடுகிறாள்; என்னை பாடாய் படுத்தி எடுக்கிறாள்…’ என்று சொல்லி இருக்கிறார். இது போன்ற பல பிரச்னைகளுக்குப் பின், மருத்துவப் பரிசோத னைக்கு சென்றார். அங்கு, அவருக்கு ஆண்மை இல்லை என் று கூறி விட்டனர். சத்துள்ள உணவுகளை சாப்பிட்டால், இக் குறைபாடு நீங்கி விடும் என்றனராம். இப்போது, அவருக்கு எந்தெந்த உண வை சாப்பிட கொடுக்க வேண்டும் என்பதை யும் மற்றும் அவர் என்னிடம் சகஜமாக பேசவும், பழக வும் அவரது கூச்சத்தை யும், பயத்தையும் போக்க வும் நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு ஆலோசனை கூறுங்கள் அம்மா.
— இப்படிக்கு,
உங்கள் மகள்.

அன்புள்ள மகளுக்கு —
உன் கணவனின் வயது, கல்வித் தகுதி, பணி பற்றி நீ குறிப் பிடவில்லை. ஒடிசலாக இருப்பாரா, சராசரி உடல்வாகுடன் இருப்பாரா? பருமனாக இருப்பாரா, அவருக்கு குடிப்பழக்கம் உண்டா? மிதமிஞ்சிய சுய இன்பம் கண்டு சோர்ந்து போனவ ரா? 6 – 19 வயதில் பெண்களால் பாதிக்கப்பட்டவரா? போன்ற தகவல்களும் உன் கடிதத்தில் இல்லை.

கூட்டுக் குடும்பத்தில் ஏகப்பட்ட பிளஸ் பாயின்ட்கள் இருந் தாலும், ஒரு சில மைனஸ் பாயின்ட்கள் உள்ளன. இளம் தம்பதியர் நினைத்த நேரத்தில், செக்ஸ் வைத்துக் கொள்ள முடியாது. எல்லாரும் தூங்கிய நள்ளிரவில் பதுங்கி, பதுங்கி எழுந்து, சப்தமில்லாமல் கோழி உறவுதான் வைத்துக் கொள் ள முடியும். இக்காரணமே கூட சில ஆண்களின் இயலாமை க்கு அடிப்படையாக இருக்கும். தாம்பத்யம் வைத்து கொள் வதை யாரும் இல்லா பகல் பொழுதுக்கு மாற்று.

உன் கணவர் திருமணமாவதற்கு முன், பத்து ஆண்டுகள் குடிப் பழக்கம் உள்ளவராக இருந்தால், அவருக்கு விந்தணு எண்ணிக்கை குறைவாகவும், விந்தணுவின் நகர்ச்சி திறன் குறைவாகவும் இரு க்கும். குடிப் பழக்கத்தை மூன்றாண்டு களுக்கு நி றுத்தி, மருத்துவர் எழுதி கொடுத்த மருந்துகளை சாப்பிட்டு வருவாரேயா னால், அவரின் தாம்பத் ய திறன் அதிகமாகி, தாம்பத்யத்தில் ஈடுபட் டு, குழந்தையும் பிறக்கு ம்.

வீட்டு வேலைகளை கவ னிக்க பணிப் பெண் அம ர்த்தாமல், ஒரு பெண் ணை வரதட்சணை வாங் காமல் நமக்கு கட்டி வை த்து விட்டனரோ என்ற ஆங்காரம் கூட உன் கணவருக்கு இருக்கலாம்.

வீட்டு வேலைகளை செய்து, வியர்வை நாற்றத்துடன், அழு க்கு புடவையுடன், கலைந்த தலைகேசத்துடன் கணவரின் அருகில் வந்து படுக்காதே. தூங்கப் போவதற்கு முன் குளி. துவைத்த ஆடை மாற்றிக் கொள். பல் துலக்கு. அவரையும் குளித்து, துவைத்த ஆடை உடுத்தி பல் துலக்கச் சொல். முழு வயிறு சாப்பிடாமல், அரை வயிறு சாப்பிடுங்கள். இரு வருக்கும் தாம்பத்ய மூடு வரும்.

விழித்திருக்கும் போது உன்னிடம் தாம்பத்யத்திற்கு முயற் சிக்காத உன் கணவர், நீ தூங்கும் போது முயற்சிக்கிறார் என் பதே மனக் குறைபாடுதான்; இதை, நீதான் பேசி, பேசிக ளைய வேண்டும்.

மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு ஆண்மை இல்லை என்றிருக்கிறாய். இதுபற்றி, ஓமியோபதி மருத்துவர் ஒருவ ரிடம் கேட்ட போது, அவர் உன் கணவருக்கு ஓமியோ சார்ந்த ஆலோசனையும், இரண்டு மாத உள் மருந்தும் அளித்தால் குணமாகி விடுவார் என்கிறார்.

உணர்வை தூண்டும் உணவு கேட்டிருந்தாய். தேனில் ஊறிய பேரீச்சம்பழத்தை சாப்பிடக் கொடுக்கலாம். உன் கணவரு க்கு வைட்டமின் ஈ குறைபாடு இருக்கிறது. தினமும், முப் பது மில்லி கிராம் வைட்டமின் ஈ கொடுக்கலாம். முட்டை, மீன், ஈரல், சிக்கன், ஓட்ஸ், சோயா பீன்ஸ், பாதாம், உருளைக்கிழங்கு, மக்காச்சோள எண்ணெய் குறைபாடு நீக்கும் உணவுகளாகும்.

நீயும், உன் கணவரும் சினிமா, மினி சுற்றுலா, இரவு வாக் கிங், ஷாப்பிங், ஓட்டல் செல்லலாம்.

நீ, உன் கணவரிடம் என்ன குறை கண்டாலும், அதை வெளி யில், அடுத்தவரிடம் சொல்லிக் கொடுத்து, இழிவு படுத்த மாட்டாய் என்ற நம்பிக்கையை உன் கணவனுக்கு ஏற் படுத்து. உலகிலேயே நம்பகமான பெண்ணாக, ரகசிய தோழி யாக கணவனின் மன, உடல் பிரச்னைகளை தீர்க்கும் தாதியாக மாறு. ஆண்மைக் குறைவு என்பது, 99 சதவீதம் மனம் சம்பந்தப்பட்டது. அனுசரணையான மனைவி, ஆயி ரம் மருந்துக்கு சமம்.

உன் கணவன், தன் முயற்சிகளில் தோற்கும் போது, சில மணிநேரம் இடைவெளிவிட்டு மீண்டும் முயற்சிக்கச் சொல் . வீட்டுச் சுவர்களில் குழந்தைகள், “புளோ-அப்’களை மாட்டு. பக்கத்து வீட்டு குழந்தைகளை கொண்டு வந்து, உன் கண வரிடம் கொடுத்து கொஞ்ச விடு.

—என்றென்றும்
 தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.
 (தினமலர் வாரமலர் நாளிதழுக்கு நன்றி)

 தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: