Tuesday, February 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“இதில் நான் தலையிட முடியாது” – முதல்வர்

ராஜி்வ் கொலையாளிகள் 3 பேரை, வரும் 9 ம் தேதி தூக்கில் போட ஏற்பாடுகள் து ரித கதியாக நடந்து வருவதை அடுத்து தமிழகத்தில் பல்வே று அரசியல் கட்சிகள் தூக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுப ட்டு வருகின்றன. தமிழக முதல்வர் தனது சிறப்பு அதிகார த்தை பயன்படுத்தி 3 பேரை யும் காப்பாற்ற வேண் டும் என கோரிக்கை குரல் எழுந்தது. ஆனால் இந்த விஷயத்தில் தலையிட முதல் வருக்கு அதிகாரம் இல்லை என சட்டசபை யில் முதல்வர் ஜெ., அறிவித்தார்.

ஜனாதிபதியின் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து ராஜிவ் கொலையாளிகள் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண் டனையை நிறைவேற்ற சிறை துறை அதிகாரிகள் நட வடிக்கை எடு த்து வருகி ன்றனர். இந்நிலையி ல் முதல்வர் ஜெ., சட்டசபை யில் இது தொடர்பான விஷ யத்திற்கு விளக்கம் அளித்து இவர்களை காப்பாற்றும் அதி காரம் தமக்கு இல்லை , இதில் தான் தலையிட முடி யாது. என முற்றுப்புள்ளி வை த்தார்.

தற்கொலை செய்ய வேண்டாம் முதல்வர் ஜெ., : இது தொடர்பாக சபையில் அவர் பேசியதா வது: ராஜிவ் கொலை யாளிகளுக்கான கருணை மனு நிராகரிக்கப் பட்டதை அடுத்து இதில் நான் தலையிட முடியாது. 3 பேரும் மீண்டும் ஜனாதிபதியை அணுக வேண்டும். தூக்கு தண்டனை யை

Hon'ble President

நிறைவேற்ற கூடாது என வலி யுறுத்தி தீக்குளித்து தற் கொலை செய்த செங்கொடி சம்பவம் வரு த்தமளிக்கிறது. யாரும் தற்கொ லை முடிவுக்கு செல்ல வேண் டாம்.

கபட நாடகம் ஆடுகிறார் கருணா நிதி ஜெ., தாக்கு: ராஜிவ் கொலை வழக்கில் குற்றவாளிகளான 3 பேர் பிரச்னையை அப் போதைய கருணாநிதி தலைமையி லான அரசு அமைச்சரவை யை கூட்டி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதாவது கடந்த 2000 ஆண்டு ஏப்ரல் மாதம் 19ம் தேதி கருணாநிதி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது .இதில் நளினி ஒரு பெண் குழந் தைக்கு தாயாக இருப்பதால் இவரது தண்டனையை ஆயுள் தண்ட னையாக குறைக்கலாம், ஏனைய 3 பேருக்கு தூக்கு தண்ட னையை உறுதி செய்யலாம் என்றும், தீர்மானம் நிறைவே ற்றி கடிதம் ஒன்றை கவர்னருக்கு எழுதியது. பின்னர் கவர் னர் அந்த கடிதத்தை ஏப்ரல் 28 ம் தேதி ஜனாதிபதிக்கு அனு ப்பி வைத்தது. மத்தியஅரசும் ஜனாதிபதியும் கருணை மனு வை 2011 ஆக., 12 ம் தேதி நிராகரித்து விட்டது.

வ்வாறு மரணத்தண்ட னையை உறுதி செய்து விட்டு, செய்ததையெல்லா ம் செய்து விட்டு ஒன்றும் தெரியாதது போல கரு ணாநிதி தற்போது காப்பா ற்ற கோரிக்கை வைக்கிறா ர். இதனை பித்த லாட்டம், கபட நாடகம், இரட்டை வே டம் என்று சொல்லாமல் எப்படி சொல்வது? எனக்கு ரத்து செய்யும் அதிகாரம் உள்ளது போல அரசியல் கட்சிகள் கூறி வருகின்றன. இதனை நிறுத்திக் கொள்ள வேண்டும். உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்து, ஜனாதிபதி கருணை மனு நிராக ரித்த பின்னர் முதல்வராக எனக்கு இதில் குறுக்கிட எந்த வித அதிகாரமும் கிடையாது. இவ்வாறு அவர் தெரிவித் தார்.

தி.மு.க., ம.தி.மு.க,. பா.ம.க., உள்ளிட்ட அரசியல் கட்சிகள் 3 பேரை காப்பாற்ற வேண்டும் என கோரி வந்த நிலையில் முதல் வர் அறிவிப்பின் மூலம் தூக்கு நிறைவேற்றுவதில் எதுவும் பிரச்னை இருக்கா து என தெரிகிறது.தி.மு.க., தலைவர் கருணாநிதி காங். தலைவர் சோனியா வுக்கு கடிதம் எழுதி காப் பாற்ற கோரியுள்ளார். ம. தி.மு.க., பொது செயலர் வைகோ இந்த விஷயத்தி ற்காக முதல்வரை சந்திக்க தயங்க மாட்டேன் என்றும் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

ராஜிவ் இருந்திருந்தால் காப்பாற்றி இருப்பார் என்கிறார் கருணாநிதி: 3 பேரின் தூக்கை ரத்து செய்ய வேண்டும் என தி.மு.க., தலைவர் கருணாநிதி மீண்டும் கோரிக்கை விடுத் துள்ளார். இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கருணா நிதி; மரணப்பிடியில் இருந்து இவர்களை காப்பாற்ற வேண் டும். பலரது விடுதலைக்கு காரணமாக இருந்தவன் என்ற முறையில், கேட் கிறேன். தூக்குமேடையில் இருந்தவ ர்கள் அன்று முதல் எத்தகை ய தூய வாழ்வில் ஈடுபட்டு வரு கின்றனர் என்பதை அறிந்த வன். குற்றவாளிகளுக்கு தூக் கு தண்டனை எவ்வித பய னும், விளைவும் ஏற்பட போ வ தில்லை. குற்றத்தை எண் ணி வாழ்நாள் முழு வதும் வருந் துவது தான் தூக்கை விட கடின மானதாக இருக்கும். ராஜிவ் உயிரோடு இருந்திருந் தால் 3 பேரின் உயிரை காப்பாற்றி இருப்பார். இவ்வாறு கூறியுள்ளார். இலங்கைக்கு எதிராக தீர்மா னம் போட்டவர் கள் தூக்கு தண்டனைக்கு எதிராக தீர்மானம் போட இப் போதைய தமிழக அரசால் முடியாதா என மு.க., ஸ்டா லின் கூறியுள்ளார்.

19 பேர் விடுதலையாயினர்: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய புலிகள் இயக்கம் இவர்களது ஆதரவாளர்கள் 26 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த சிறப்பு கோர்ட் 4 பேருக்கு தூக்கு தண்டனையும், 3 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்தது. 19 பேர் விடுதலை செய்யப் பட்டனர். இதில் கர்ப்பிணியாக இருந்த நளினி என்பவருக் கான தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்ட னையாக குறைக்கப்பட்டது. தூக்கு விதிக்கப் பட்ட பேரறி வாளன், முருகன், சாந்தன் ஆகியோர் ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனு நிராகரிக்கப்பட்டது.

சென்னை ஐகோர்ட்டில் நாளை விசாரணை: இந்நிலையில் 3 பேர் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரும் மனு சென் னை ஐகோர்ட்டில் நாளை விசாரணைக்கு வருகிறது. 11 வருட நிலுவை யில் இருந்த கருணைமனு தள்ளுபடியை ஏற்க முடியாது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் டில்லியில் பிரபல கிரிமினல் வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி ஆஜராவார் என தெரிகிறது.தூக்கில் போடப்படுவது குறித்து கைதிகள் 3 பேர் குடும்பத்தினருக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து , இவர்களுடைய குடும்பத்தினர் இன்று வேலூர் சிறை யில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை பார்த்து பேசவுள்ளனர்.

வேலூர் சிறை முற்றுகையிட அழைப்பு: பா.ம.க., கட்சி சார்பில் வரும் 8 ம்‌ தேதி வேலூர் சிறையை முற்றுகையிட அழைப்பு விடுத்துள்ளார். சேலம், மதுரை , தஞ்சாவூர் கோர் ட்டை வக்கீல்கள் புறக்கணி்த்துள்ளனர். சேலம் சட்ட க்கல் லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வக்கீ ல்கள் 3 பேர் உண்ணா விரதம் துவக்கியுள்ளனர்.

ராம்ஜெத்மலானியின் ஜூனியர்கள் கைதிகளுடன் சந்திப்பு : பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானியின் ஜூனியர் வக்கீல்கள் , டில் லியை சேர்ந்த வக்கீல் ராமசுப்பிரமணியம் ஆகியோர் கைதிகளை சந்தித்து சில விவரங்கள் கேட்டறிந்தனர். நாளை ஐகோர்ட் விசா ரணைக்கு இன்றைய தகவல்கள் பயன் அளிக்கும் என வக்கீல்கள் நம்புகின்றனர். திருப்பூரில் ரயில் மறியல் செய்ய முயற்சித்த தலித் விடுதலை கூட் டமைப்பை சேர்ந்த 3 பேர் போலீசாரால் கைது செய்யப் பட்டனர்.

news in dinamalar

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

most viewed articles

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: