Monday, August 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உருத்திராட்சத்தின் பெருமைகள்

உருத்திராட்சத்தை அக்குமணி என்றும் குறிப்பிடுவர். பெண் களுக்கு மாங்கல்யம் போல ச் சிவத்தொண்டர்களுக்கு அணி கலனாகத் திகழ்வது இந்த உருத்திராட்சம் தான். இதைக் கண்டிகை என்றும், தாழ்வடம் என்றும் கூறுவ ர்.
உருத்திராட்சத்தை தாசித் தால் லட்சம் மடங்கு புண் ணியம். தொட்டால் கோடி மடங் கு புண்ணியம். அணிந்தால் நூறு கோடி புண்ணியம். ஜெபித்தால் நூறுகோடி மடங்கு புண் ணியம் அடைவதாகப் புராணங்கள் கூறுகின்றன. நெல்லிக் காய் அளவுள்ள உருத்திராட்சம் உத்தமம்.
இலந்தைப்பழ அளவு மத்திப ம். கடலை அளவு அதமம். பு ழுக்கள் குடைந்ததும், நசுக்கி யதும், நோயுற்றதும் அணிய க்கூடாத உருத் திராட்சங்கள் ஆகும். ஒரே அளவுள்ளதும், உறுதியா னதும், பெரியதும், சம முத்துகள் போன்றுள்ளது மான உருத்திராட்சங் களைப் பட்டுக் கயிற்றில் கோத்து பின் உடலில் அணிய வே ண்டும்.
உருத்திராட்சத்தின் முகம் மற்றும் அதன் அதிதேவதை:::.
*இருமுக உருத்திராட்சம் அர்த்தநாரிஸ்வரர் உருவம் உடையது. இதனை அணிந்தால் எப்போதும் இன்பம் உண்டாகும்.
*மும்முக உருத்திராட்சம் மூன்று அக்னியின் சொரூபம் கொண்டது. இதனை அணிவது அக்னி தேவர்க்கு இன்பமூட்டும்.
*நான்கு முக உருத்திராட்சம் பிரம்மனின் சொரூபம். இதை அணிந்தால் பிரம்ம தேவன் இன்பமடைகிறான்.
*ஐந்து முக உருத்திராட்சம் பிரம்ம சொரூபம் கொண்டது. இதனை அணிவதால் நரஹத்தி அழிகிறது.
*ஆறுமுக உருத்திராட்சம் அதிதேவதை சுப்ரமண்யர். இதை அணிந்தால் அதிக செல்வமும் ஆரோக்கியமும் கிடைப்பதுடன், பக்தியும், அறிவும், செல்வமும், கிடைக்கும்.
*அறுமுக உருத்திராட்சத்திற்கு விநாயகரை அதிதேவதை என்றும் சொல்வார்கள்.
*ஏழு முக உருத்திராட்சத் திற்கு அதிதேவதை சப்த மாதா. இதனை அணிந்தால் ஞானமும், ஆரோக்கியமும், செல்வமும் கிடைக்கும்.
*எட்டு முக உருத்திராட்சம் அணிந்தால் அஷ்ட வசுக்க ளும், கங்கையும் ப்ரிதி அடையும். அதிதேவதை அஷ்டவசு.
*இன்பது முக உருத்திராட்சத்தை அணிந்தால் நவசக்திகளும் இன்ப மடையும். இதன் அதிதேவதை நவசக்தி.
*பத்துமுக உருத்திராட்சத்திற்கு அதிதேவதை எமன். இதனை அணிந்தால் பாவங்களுக்கெல்லாம் பரிகாரம் ஏற்படும்.
*பதினொரு முக உருத்திராட்சத்திற்கு அதிதெய்வம் பதினொரு உருத்திரர். இது சகல செளபாக்கியங்களையும் விருத்தியடையச் செய்கிறது.
*பன்னிரண்டு முக உருத்திராட்சம் மகாவிஷ்ணுவின் சொரூபம். இது பன்னிரு ஆதித்ய சொரூபம் என்று அழைக்கப்படுகிறது.
*பதின்மூன்று உருத்திராட்சம் போக த்தையும், சித்தியையும், சுகத்தையும் கொடுக்கிறது. இதனை அணிந்தால் காமதேவன் மகிழ்ச்சியடைகிறான்.
*உருத்திர நேத்திரத்தில் உண்டாகிய பதினான்கு முக உருத் திராட்சம் சகலவிதமான நோய்க ளையும் நீக்கி என்றும் ஆரோக்கியத் தைக் கொடுக்கிறது.
* 108 உருத்திராட்சம் கொண்ட மா லையை எப்போதும் மார்பில் அணிந் திருப்பவன் அடுத்தடுத்து செய்த அஸ்வமேதயாக பலத்தை அடைகி றான்.
* உருத்திராட்சத்தின் அடி பிரம் மா. நாளம் விஷ்ணு. முகம் உருத் திரர். பிந்து சமஸ்தேவர்கள்.
அர்ச்சனை, ஹோமம் முதலியவற்றின்போது இதனை அணி ந்தால் அஸ்வமேத யாகத்தின் பலனைக் கொடுப்பதோடு, எல்லா பாவங்களிலிருந்தும் விடுதலை கிடைக்கிறது. உருத் திராட்ச மாலையைக்கொண்டு ஜெபித்தால் அதிக பலம், அதிக புண் ணியம்.
தலையில் அணிந்து குளித் தால் கங்கையில் நீராடிய பலன் கிட்டும். குறிப்பாகச் சிவனடியார் களால் போற்ற ப்படும் இரு முகம், ஐந்து முகம், பதினொரு முகம், பதினான்கு முகம் கொண்ட உருத்திராட்சங்களை அன் போடு பூஜித்து அணிகின்ற மானிடர்கள் எல்லாரையும் விட அவரே செல்வம் நிரம்ப உடையவராகிறார்.
தீட்சை பெற்ற பெண்களும் உருத்திராட்சத்தை அணியலாம். உருத்திராட்ச தரிசனம் பாவத்தைப் போக்கும். தொட்டால் சகல வெற்றிகளையும் கொடுக்கும். குவிக்கும். பிறப்பு – இறப்பு தீட்டு க்காலங்களில் உருத்திராட்சம் கண்டிப்பாக அணியக்கூடாது. சிவன் நாமத்தை இடைவிடாமல் உச்சரிப் போரும், புனிதம் மிக்க உருத்திராட்சத்தை அணிந்திருப் போரும் சிவ பக்தர்களில் தலை சிறந்தோர் என்று கூறு கின்றனர்.
‘ஆயமாமணி ஆயிரம் புனைந்திடில் அவரை
மாலயன் நான்முகன் புரந்தரன் வானவர் முதலோர்
பாயுமால் விடைப் பரமெனப் பணிகுவர் என்றால்
தூயமாமணி மிலைந்தவர் மனிதரோ சொல்வீர்’

-என்று உருத்திராட்சத்தின் மேன்மையைப் பிரம்மோத்தர காண்டம் சிறப்பித்துக் கூறுகின்றது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

most viewed articles

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: