Monday, August 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிவதாத்தா கதை – இதயமே இல்லாதவர் –

அன்பானவன் எடுத்த அவதாரங்கள் ஏராளம். இந்த சிவ தாத் தாவும் அதிலொன்றாக, “எல்லாம் சிவன் செயல்!” வாசகர் களுக்காக, என் சிவன் எடு க்கும் அவதாரம்.

கொல்லிமலைக்கு அரு கில் இருக்கும் பசுமை கொஞ்சும் கிராமம் அது. மலையிலிருந்து இறங் கிய சிவதாத்தா தன் தாடியை வருடிய படி கிராமத்திற்குள் நுழைந் தார். உழைத்து உழைத் தே உறுதியான உடல், எட்டடிக்கு முன்னால் வருகின்றவ ரையே அளந்துவிடும் பார்வை, முகத்தை மறைத்து நிற்கும் தாடி மீசைக்குள் எப்போதும் சிறு புன்னகை. இதுதான் சிவ தாத்தா.

சிவதாத்தாவை கிராமத்தின் நுழைவுவாயிலில் கம்பீனமா ன தோற்றத்துடன் முனீஸ்வரன் வரவேற்றான். எல்லை காவல் தெய்வமா ன அவன் அனுமதி யின்றி கிரமத்திற் குள் யாரும் நுழை ய முடியாது. சிவ தாத்தா அவனை வணங்கி விட்டு, சாம்பலை எடுத்துப் பூசினார்.

இனி இந்த கிராமத் தில் தான் வேலை என மனதுக்குள் சொல்லிக்கொண் டு, அருகில் யாரே னும் தென்படுகின்றார் களா என பார்வை யை செலுத்தினார். ஆடுகளை மேய்த் துக் கொ ண்டிருந்த பரமனைக் கண் டார். மெதுவாக அவனை நோக்கி அடியெடுத்து வைக்களானார். அவருடைய வருகையை கவ ணித்த பரமன், அவரிடம் ஓடினான்.

“தம்பி, உன்னுடைய முதலாளியை சந்திப்பதற்காக கொல் லி மலையில் இருந்து வருகிறேன். வா என்னுடன்” என்றார்.

“ஐயா ஆடுகள் மேய்கிற தே, அவைகளை விட்டுவிட்டு எப் படி வருவது”

“இதோ இங்கே இருக்கானே முனி, அவன் பார்த்துக் கொள்வான். வா என்னு டன் ” என்று சொல்ல, பரம னுக்கும் நம்பிக்கை ஏற்ப ட்டது. அவன் சிவதாத்தா வை முதலாளியிடம் கூட் டிச் சென்றான்.

கொல்லிமலைச் சித்தர் ஒருவர் முதலாளியை காப்பாற்ற வந்திருக்கின்றார் என தெரிந்து கொண்டு, வழியிலேயே அவ ரை மக்கள் தடுத்தனர்.

“உயிர் வலியோடு துடித்துக் கொண்டிருக்கும் எதிரிக்கும் அருள் செய்வதே, அவனுக்கு தரும் பெரும் தண்டனை. அதைக் கொடுக்கவே நான் வந்துள்ளேன். ” என்றார் சிவ தாத்தா.

சித்தரே, அவனுக்கு இதயமே இல் லை. அவனைக் காப்பா ற்றி எங்களு க்கு தீமை செய்து வீடாதீர்கள் ” என் றார் கூட்டத்திலிருந்த ஒரு முதிய வர்.

“இதயமில்லாதவன் என்றால் என்றோ அவன் இறந்து விட்டான். அந்தப் பிணத்திற்கு புது உயிர் கொடுக்கவே வந்துள்ளேன். நோயுற்றிருப்பது ஒரு உயிர் என் பதை மறந்து, நீங்களும் பாவத்தினை சேர்த்துக் கொள்ளாதா ர்கள் ” என்று சித்தர் சொல்லவும், எல்லோரும் அமைதியாக வழிவிட்டார் கள்.

முதலாளியின் மனைவி அவரை வரவேற்றாள். பரமன் அவளிடம் முதலாளியை காண வந்திருப்பதாக சொல்லவும், அவளுக்கு முதலில் புரியவில்லை. கொல்லிமலையிலிரு ந்து வந்திருக்கிறார் என்றவுடனே, அவளுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

சாந்தம் தவழும் சிவதாத்தாவை வணங்கி “ஐயனே, தங்க ளைப் பார்த்தால் சித்தர் போல இரு்கிறது. என் கணவன் பல மாதங்களாய் கடும் நோயால் அவதிப்படுகின்றார். தாங்கள் தான் தயவு செய்து காப்பாற்ற வேண்டும் ” என மன்றா டினாள்.

“பெண்ணே, கணவன் வழிதவறும் போது, கண்டிப்பதற்கான உரிமை உன்னிடம் இருக்கிறது என்பதை மறவாதே!. இத்த னை துன்பங்களுக்கும் தீர்வு உன் எண்ண வெளிபாடுக லிருந்தே கிடைக்கிறது” என்றபடி சிவதாத்தா முதாலாளி யின் அறைக்கு சென்றார்.

“உன்னைச் சுற்றி இருப்பவர்கள் வாழ்த்தினால், நீ இன்பமாக இருக்கலாம். உன்னைச் சுற்றி இருப்பவர்களின் உள்ளம் நோக நீ நடந்து கொண்டாய் அதனால் அவர்கள் உன்னை சபித்தார்கள். அந்தப் பலனை இப்போது அனுபவிக்கின் றாய்!”

முதலாளியின் கைகளில் சாம்பலைக் கொடுத்து, “தினமும் இதை இடு, அப்போதெல்லாம் இதைப் போல நானும் சாம் பலாக போயிருக்க வேண்டியவன். இனிப் போகப் போகிற வன். வாழும் குறைந்த நாட்களிலாவது உடனிருப்பவர்களு க்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் உனக்குள் இருக்கட்டும்.” என்று சொல்லி வெளியேறினார்.

thanks Mr. jagdeeswaran

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

most viewed articles

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: