Friday, January 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நினைவாற்றலுடன் பேசுவதற்கான வழிமுறைகள்

பலரின் மத்தியில் உரையாற்றும்போது (எழுதிவைத்து பேசி னால் கூட), நினைவுத்திறன் என்பது முக்கியம்.

நமது நினைவுத்திறன் எந்தளவிற்கு இருக்கிறது என்பதைப் பொறுத்தே, நமது உரையானது, தெளிவாகவும், தொடர்ச்சியானதாகவும், பொருள் பொதிந்ததாகவும், கேட்போரை கவ ரும் விதத்திலும் இருக்கும். எனவே, அதுதொடர்பான பல ஆலோசனைகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.

*உங்களைவிட தகுதியில் குறைந்த வர்கள், ஏன், கல்வியறிவே இல்லாதவர்கள் ஒரு விஷயத் தை செய்ய முடியும்போது, அதை உங்களாலும் நிச்சயம் செய்ய முடியும் என்று நம்ப வேண்டும்.

* ஒரு அலுவலகத்தில் நீங்கள் உயரதிகாரியாக இருக்கலாம். ஒரு முக்கியமான கூட்டத்தில் நீங்கள் பேச வேண்டியிருக்க லாம். இந்த சம யத்தில் உங்களுக்கு எந்த பதட்டமும் வேண் டாம். ஏனெனில், உங்களுக்கு கீ ழான பதவியில் இருப்பவர் கள்(பதவி ரீதியாகவாவது) உங்களை மட்டம் தட்டும் நிலையில் இருக்க மாட்டா ர்கள். மேலும், தேவைப்பட்டால், அவ ர்கள் அனைவருமே முட்டாள்கள் என் று கூட நீங்கள் கற்பனை செய்து கொள் ளுங்கள்.

* நீங்கள் உங்களது அனுபவத்தில் கேட் ட பலவித உரைகளையும், பேச்சுக்களையும் நினைவுப் படு த்திப் பார்க்கவும். அவற்றில் ஏதாவது உங்களை மிகவும் கவர்ந்திருக்கிறதா? அல்லது உலகை வென்றிருக்கிறதா? அல்லது அந்த உரை யை வழ ங்கிய நபரிடம் நீங்கள் புதிதா க எதையேனும் கண்டீர்களா ? உலகில் எவருமே பேசாத ஒன்றை அவர் பேசி விட்டா ரா? இத்தகைய கேள்விகளு க்கு, பொதுவாக, நீங்கள் தரு ம் விடை இல்லை என்பதே. இதே மாதிரிதான் உங்களின் நிலையும். உங்கள் பேச்சைக் கேட்பவர்கள், உங்களை நுணுகி கவனிக்கப் போவதில்லை. உங்களால் முடிந்ததை, பதட்டப்படாமல் பேசிவிட்டு வந் தாலே அது சிறந்த உரையாக இருக்கும்.

* எங்காவது பேசப்போகும் போது, படபடப்புடன் இரு க்க வேண்டாம். உங்களின் பெயர் வாசிக்கப்படப்போ கும் சூழல், மேடையின் பிர மாண்டம், கேட்பவர்களின் கண்கள் என்ற எதை நினை த்தும் பரபரப்படைய வேண் டாம். அந்த நேரத் தில் ஒரு மகிழ்ச்சியான சம்பவத்தை நினைத்து, ரிலாக்சாக இரு க்கவும். முடிந்தளவு, கேட்ப வர்களின் கண்களைப் பார்ப் பதை தவிர்க்கவும். அதன்மூலம் உங்களின் சூழ்நிலை இன்னும் இயல்புநிலைக்குத் திரும்பும்.

*ஒரு விஷயத்தின் மையக்கரு வைப் பற்றி நேரடியாக பேச வே ண்டிய அவசியம் இருக்காதவரை, வழக்கமான விமர்சனக் கருத்துக் கள் அல்லது சம்பவக் குறிப்புகள் ஆகியவற்றைப் பயன்படுத்தியே பேசத் தொடங்கவும். ஏனெனில், சம்பவக்குறிப்பு முறையில் நாம் எதையும் எளிதாக மறக்க மாட்டோம்.

* நீங்கள் பேசத் தொடங்கும் முன்பாக, மதிப்பிற்குறிய தலைவர் அவர்களே/அன்பார்ந்த நண்பர்களே, தோழர்களே/ பெரியோர்களே, தாய்மார்களே/மாணவச் செல்வங்களே/ அன்பார்ந்த ஊழியர்களே, என்ற வகையில் தொடங்கினால், மேடையில் உங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள சில நொடி கள் அவகாசம் கிடைக்கும். அதன்மூலம் பிறவற்றை நீங்கள் நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

most viewed articles

Leave a Reply