Saturday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வெப் மெயில் பேக் அப்

மின்னஞ்சல் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள், இணைய தளங்களில் தரப்படும் மெயில் அக்கவுண்ட்களை யே பயன்படுத்தி வருகின்றனர். Web based email என அழை க்கப்படும் இந்த வசதியை, அந்த தளங்களுக்குச் சென்றால் தான் பயன்படுத்த முடியும். இவை அனைத்துமே இலவச மாகவே கிடைக்கின்றன. எடுத்துக் காட்டாக, பிரபலமான ஜிமெயில், யாஹூ மெயில், ஹா ட் மெயில் போன்றவ ற்றைக் கூறலாம். இந் த தளங்கள் தரும் இல வச அளவினை மீறு கையில், நம் முந்தை ய மெயில்கள் அழிக் கப்படும். ஏன், இந்த வசதியினை இந்த தளங்கள் என்ன கார ணத்தினாலோ, தருவதற்கு மறுத்தால், அல்லது அதன் சர் வர்கள் கெடுக்கப்பட்டால், நம் மின்னஞ்சல்கள் என்ன ஆகும்?

பெரும்பாலானவர்கள், நமக்குத் தேவையான முக்கிய தகவ ல்களை, இத்தகைய மின்னஞ்சல்களில் தான் வைத்து ள்ளனர். அப்ப டியானால், இவற்றுக்கு பேக் அப் தான் எடுத்து வைத்துக் கொள்ள வே ண்டும். இவற்றுக்கு எப்படி பேக் அப் எடுப்பது என்ற வழிகளை இங்கு காண லாம். ஜிமெயில், யாஹூ மற்றும் ஹாட் மெயில் தளங்களில் உள்ள மின்னஞ்ச ல்களுக்கான பேக் அப் வழிகள் இங்கு தரப்படு கின்றன.

1.ஜிமெயில்: கூகுள் நமக்குத் தந்துள்ள மிகப் பெரிய சே வை அதன் இலவச ஜிமெ யில் ஆகும். ஏறத்தாழ 7.5 கிகா பைட்ஸ் அளவில் ஒவ் வொருவருக்கும் இடம் தந்து, நம் மின்னஞ்சல் கணக்கை வைத்துக் கையாள வசதி செய்துள்ளது. இதற்காக, நம் குப்பை மெயில்கள் அனைத் தையும் இதில் தேக்கி வைப் பது நியாயமாகாது. தேவையற்ற வற்றை நீக்கலாம். நமக்கு முக்கியமான மெயில்களைக் குறித்து வைக்கலாம். அவ ற்றை பேக் அப் செய்திடலாம். அதிர்ஷ்டவசமாக, இதற்கென ஜிமெயில் பேக் அப் என்று ஒரு புரோகிராம் நமக்குக் கிடை க்கிறது.

ஜிமெயில் பேக் அப், விண்  டோஸ் மற்றும் லினக்ஸ் சிஸ்ட ங்களில் இயங்குகிறது. இந்த புரோகிராமினைப் பயன் படுத்தி, ஒரு சில நிமிடங் களில் நம் ஜிமெயில் அக்க வுண்ட்டை பேக் அப் செய் திடலாம்.

1.1 முதலில் ஜிமெயில் பேக் அப் புரோகிராமினை http://www.gmailbackup.com/download என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்திடவும். மிக எளிதாக இதனை மேற்கொண்டவுடன், நம் ஸ்டார்ட் மெனுவில் ஒரு ஷார்ட் கட் மற்றும் டெஸ் க்டாப்பில் ஐகானாக இந்த புரோகிராம் நமக்குக் கிடை க்கிறது.

1.2 ஜிமெயில் பேக் அப் புரோகிராமினைத் திறக்கவும். உங்கள் முழு ஜிமெயில் முகவரியினையும் பாஸ்வேர் டையும் தரவும். எந்த போல்டரில் பேக் அப் சேவ் செய்திட என்பதைத் தேர்ந்தெடுக்கவும். மாறா நிலையில் தரப்படும் ஜிமெயில் பேக் அப் போல்டரையும் வைத்துக் கொள்ளலாம்.

1.3 எந்த எந்த மின்னஞ்சல் செய்திகளை பேக் அப் செய்திட வேண்டும் எனத் தேர்ந்தெடுக்கவும். இதனைத் தேதி வாரியாகவும் தேர்ந்தெடுக்கலாம்.

1.4. அடுத்து Backup பட்டனை அழுத்தி, பேக் அப் வேலை யைத் தொடங்கலாம். நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள அஞ்சல் களின் எண்ணிக்கைக்கேற்ப, நேரம் எடுத்துக் கொள்ளப்படும். பேக் அப் வேலை நடக்கையில், மற்ற பணிகளை நீங்கள் கம்ப்யூட்டரில் மேற்கொள்ளலாம். எவ்வளவு பேக் அப் ஆகி யுள்ளது என்பதுவும் உங்களுக்குக் காட்டப்படும். மொத்த மாக அனைத்தையும் ஒரே நேரத்தில் பேக் அப் செய்தி டாமல், குறிப்பிட்ட அளவில், நமக்கு வசதியான நேரத் திலும் பேக் அப் செய்திடலாம். அடுத்தடுத்து பேக் அப் செய்கையில், ஏற்கனவே பேக் அப் செய்த மெயில்களை ஜிமெயில் பேக் அப் விட்டுவிடும்.

1.5. பேக் அப் செய்த மெயில்களை, பின்னர் மீண்டும் அக் கவுண்ட்டிற்குக் கொண்டு செல்லலாம். மின்னஞ்சல் முக வரி, பாஸ்வேர்ட், பேக் அப் செய்து வைத்துள்ள போல்டர் ஆகிய தகவல்களை அளித்து மீண்டும் கொண்டு வரலாம். ஒரு அக்கவுண்ட் டிலிருந்து பேக் அப் செய்ததை, இன்னொரு அக்கவுண்ட்டிற்கும் மாற்றலாம்.

ஜிமெயில் பேக் அப் செய்து பார்த்தபோது, மிக அருமையாக இருந்தது. நம் இன்பாக்ஸ், சென்ட் போல்டர், லேபில் என அனைத்தும் பேக் அப் செய்யப்பட்டு மீண்டும் கிடைக்கி ன்றன.

ஜிமெயில் பேக் அப் பைல்கள் .EML என்ற பார்மட்டில் ஏற் படுத்தப்படுகின்றன. இவற்றை எந்த இமெயில் கிளையண்ட் புரோகிராமிலும் திறந்து பார்க்கலாம்.

இந்த பேக் அப்பில் ஒரே ஒரு குறை உள்ளது. ஜிமெயில் தொகுப்பில் நாம் ஏற்படுத்தும் சேட் லாக் (chat logs) பைல்கள் பேக் அப் செய்யப்படுவது இல்லை.

2.ஹாட் மெயில்: ஹாட் மெயிலுக்கென பேக் அப் புரோகிராம் எதுவும் அதன் தளத்தில் இல்லை. ஆனால், மற்றவர்கள் வடிவமைத்துக் கொடுத்துள்ள புரோகிராம்கள் இலவசமாகவே கிடைக்கின்றன. இதில் Mail Store Home என்ற புரோகிராம் மிக நன்றாகச் செயல்படுகிறது.

2.1. இந்த Mail Store Home புரோகிராமினை http://www.mailstore.com/en/mailstoreserver.aspx?keyword=awensucheallemailstore என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்திடவும்.

2.2. புரோகிராமினை இயக்கி Archive email என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். POP3 Mailbox என்பதனைத் தேர்ந்தெ டுத்து, உங்கள் மின்னஞ்சல் முகவரியினைத் தரவும். அடு த்து கேட்கப்பட்டுள்ள இடத்தில் பாஸ்வேர்டி னையும் அமை க்கவும். ‘Access via’ ட்ராப் டவுண் மெனுவில், POP 3SSL என அமைத்து, அடுத்து நெக்ஸ்ட் பட்டனில் கிளிக் செய்திடவும்.

2.3. அடுத்து உங்கள் விருப்பத்தினைத் தர வேண்டும். பேக் அப் செய்த பின்னர், உங்கள் மெயில் தளத்தில் உள்ள மெயி ல்களை அழித்துவிடவா என்று கேட்கப்படும். அழிக்காமல் வைப்பதே நல்லது. இதன் பின்னர், நீங்கள் POP3 அக்கவுண்ட் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். இது எளிதான வேலை தான். பின்னர் உங்கள் மெயில்களை பேக் அப் செய்திடலாம். இதனை உங்கள் சிடி, டிவிடி அல்லது யு.எஸ்.பி. ட்ரைவில் கூட மேற்கொள்ளலாம். மெயில் ஸ்டோர், நீங்கள் உருவாக் கிய போல்டர்கள் உட்பட அனைத்தையும் பேக் அப் செய் கிறது. இங்கும் பல நிலைகளாக பேக் அப் செய்திடும் வழி தரப்படுகிறது.

இந்த புரோகிராம் குறித்து இன்னொன்றையும் சொல்ல வே ண்டும். ஜிமெயில் பேக் அப் புரோகிராமைக் காட்டிலும் வேகமாக இது செயல்படுகிறது.

3. யாஹூ மெயில்: நீங்கள் யாஹூ இலவச மெயில் அக்கவுண்ட் வைத்திருக்கிறீர்களா? உங்களுக்கு அதனை பேக் அப் செய்திடும் வசதியை யாஹூ தரவில்லை. பி.ஓ. பி.3 மெயில் வகை வசதியினை, கட்டணம் ( ஆண்டுக்கு 20 டாலர்) பெற்றுக் கொண்டு தான் யாஹூ தருகிறது. இருப் பினும் பேக் அப் செய்திட ஒரு வழி உள்ளது.

3.1. Zimbra Desktop என்ற புரோகிராம் இதற்கு உதவுகிறது. இதனை http://www.zimbra.com/ downloads/zddownloads.html என்ற முகவரியிலிருந்து தரவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்திடவும். இதனை மேலே சொல்லப்பட்டுள்ள மூன்று மெ யில் அக்கவுண்ட்களை பேக் அப் செய்திடவும் பயன்ப டுத்தலாம்.

3.2. Zimbra Desktop புரோகிராமைத் திறந்து கொள்ளவும். Add New Account என்பதில் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் Yahoo என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். மின்னஞ்சல் முக வரி, பாஸ்வேர்ட் மற்றும் கேட்கப்பட்டுள்ள தகவல்களைத் தரவும். விரும்பினால், calendars, contacts, and group ஆகிய வற்றையும் ஒருங்கிணைக்கலாம்.

3.3. Validate and Save என்பதில் கிளிக் செய்திடவும். Zimbra தன்னை யாஹூவுடன் இணைக்கும். இதற்குச் சற்று நேரம் ஆகலாம். இணைத்த பின்னர், Launch Desktop என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர் Preferences டேப் தேர்ந்தெடுக் கவும். இடது பக்கம் கிடைக்கும் மெனுவில், Import/Export என்பதில் கிளிக் செய்திடவும்.

3.4. ‘Export’ என்பதில், Account என்பது செக் செய்யப்பட் டிருப்பதனை உறுதி செய்திடவும். அடுத்து, Advanced Settings பாக்ஸில் செக் செய்திடவும். இங்கு எவை எல்லாம் உங் களுக்குத் தேவையில்லை என்று எண்ணுகிறீர்களோ, அவற் றிற்கு எதிரே உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடலாம். ஆனால் Mail என்ற பாக்ஸிற்கு எதிரே உள்ள கட்டத்தில் டிக் அடையாளம் கட்டாயம் இருக்க வேண்டும். இவற்றை முடி த்த பின்னர், Export என்பதில் கிளிக் செய்திடவும்.

3.5. பேக் அப் பைலாக, (.TGZ) என்ற துணைப் பெயருடன் உங்களுக்கு ஒரு ஸிப் செய்யப்பட்ட பைல் கிடைக்கும். இத னை விண் ஆர்.ஏ.ஆர். மூலம் திறந்து பார்க்கலாம். உங்கள் இமெயில் மெசேஜ் அனைத்தும் .EML என்ற துணைப் பெயர் கொண்ட பைலாகக் கிடைக்கும். இவற்றை அவுட்லுக், தண் டர்பேர்ட், இடோரா போன்ற எந்த ஒரு டெஸ்க் டாப் இமெயில் புரோகிராம் மூலமும் திறந்து பார்க்கலாம்.

ஸிம்ப்ரா புரோகிராம், மேலே சொன்ன இரண்டு புரோகிராம் போல இயக்குவதற்கு எளிதானதல்ல. ஆனால் பயன் அதிகம் உள்ளது.

மேலே காட்டப்பட்டுள்ள வழிகளின்படி, உங்களின் முக்கிய மெயில் மெசேஜ் களையும், இணைப்பு பைல்களையும் பேக் அப் எடுத்து சிடி, டிவிடி, எக்ஸ்ட்ரா ஹார்ட் ட்ரைவ், ப்ளாஷ் ட்ரைவ் என ஏதாவது ஒன்றில் பேக் அப் பைலாக வைத்துக் கொள்ளவும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளு ங்கள்

most viewed articles

Leave a Reply