Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அமெரிக்காவின் இராணுவத் தினர் நிகழ்த்திய படுகொலை – விக்கிலீக்ஸ் -வீடியோ

அமெரிக்காவின் இராணுவத் தினர் நிகழ்த்திய படுகொலை ஒன்றின் வீடியோவை தற்போ து விக்கிலீக்ஸ் வெளியிட்டு ள்ளது. இந்த வீடியோ ஏற்க னவே வெளியாகியிருந்தது என்றாலும் அது அமெரிக்க இராணுவத்தால் எடிட் செய்யப் பட்டு அவர்களுக்குச் சாதகமா ன முறையில் வெளியானது.

ஆனால் இந்த எடிட் செய்யாத வீடியோவை தற்போது விக்கி லீக்ஸ் வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது.

உலகில் நடக்கும் அனைத்து மனித உரிமை மீறல்களுக்கும் தாம் குரல்கொடுப்போம் என்று கூறிவரும் அமெரிக்கா சமீப காலமாக போர் குற் றங்களுக்கும் எதிரா கக் குரல்கொடுத்து வருவதாகவும் தன் னை உலகிற்கு காட் டி வரும் நிலையில் அமெரிக்க இராணு வத்தினர் நிகழ்த்தியு ள்ள போர் குற்றங்க ளை யார் கேட்ப்பது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

17 நிமிடங்கள் நீடிக்கும் இந்த அதிர்ச்சிக் வீடியோவைப் பொறு மையாகப் பாருங்கள்.

12ம் திகதி ஜூலை மாதம் 2007ம் ஆ ண்டு ஈராக் தலை நகர் பக்த்தாத்துக்கு அருகாமையில் உ ள்ள கிராமம் ஒன் றின் மேல் பறந்த அமெரிக்க அப்பா ச்சி ரக ஹெலிகாப் டர், அங்கே நின்றிருந்த 12 பொதுமக்களை சுட்டுப்படு கொலை செய்து ள்ளது.

இதில் ரொய்டர்ஸ் செய்திச் சேவையின் ஊடகவியலாளர் இருவர் அடங்குவர். அவர்கள் தங்கள் கைகளில் கமெராக்க ளை வைத்திருந்தது கூட தெள்ளத் தெளிவாக அமெ ரிக்க ஹெலிகாப்டரில் இரு ந்த பாதுகாப்பு கமராவில் பதிவாகியி ருக்கிறது.

கழுகு போலப் பறந்து ஒவ் வொருவராகச் சுட்டுத் தள் ளி, பின்னர் குற்றுயிரும் கு லையுமாக இருக்கும் மற் றவர்கள் நிலத்தில் இருந்து எழும்போது குறிவைத்து தாக் குகிறது அமெரி க்க ஹெலிகாப்ட்டர்.

இதுமட்டுமட்டுமா? தரையில் இருப்பவர்கள் கைகளில் எவ் வித ஆயுதங்களும் இல்லாத நிலை யில், காயப்பட்டவர் எழு ந்து தப்பி ஓடப்பார்க்கும்போது, அவர்கள் ஆயுத ங்களை எடுக்கவே ஓடுவதாக அமெரி க்க ஹெலிகாப்ட்டரில் இருக்கும் வி மானி கட்டுப்பாட்டு அறைக்கு அறி விக்கிறார்.

இதனை அடுத்து அவர்கள் மீது தாக்குதல் நடத்துமாறு கட்டு ப்பாட்டு அறை அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கிறது. இத னை அடுத்து அவர்கள் தொடர்ந்தும் தாக்குதலை நடத்து கிறார்கள்.

இறுதியில் தரைப் படையினர் அவ்விடத்துக்கு வரும் வே ளை அங்கே 2 சிறுமிகள் காயப்பட்டு இருக்க அவர்களை அருகில் உள்ள அமெரிக்க இராணுவ வைத்தியசாலைக்கு எடுத்துச் சென் று சிகிச்சை கொடுக்க ஒரு இராணு வ வீரர் அனுமதி கேட்க்கிறார்.

ஆனால் அவர் மேலதிகாரி இல்லை என மறுத்து, அச் சிறுமிகளை ஈரா க் பொலிசாரிடம் கொடுங்கள் என்று இரக்கமற்று தெரிவிப்பதும் பதிவா கியுள்ளது.

அமெரிக்க இராணுவத்தினர் தாக்குதல் நடத்தும் வேளையி ல் பாவிக்கும் சொற்பதங்கள் மிகுந்த இனவெறி கொண்ட தாக இருப்பதோடு, பல தகாத வார்த்தைகளையும் உபயோ கிக்கின்றனர்.

ஹெலிகாப்ட்டரில் பொருத்தப்பட்ட கமரா மூலம் எடுக்கப் பட்ட இந்த வீடியோவை ஒரு இராணுவ அதிகாரி ஈராக்கில் இருந்து களவாடி வந்து வெளியிட்டுள்ளார்.

அவரை அமெரிக்க இராணுவப் பொலிசார் கைது செய்துள்ள னர். இந்த 17 நிமிட வீடியோவை முழுமையாகப் பார்த்தால் அமெரிக்க இராணுவத்தின் கோரமுகம் தெரியும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளு ங்கள்

most viewed articles

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: