Monday, August 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மாதவிலக்கையே தள்ளிப்போட முடியுமே??

தோழியின் திருமணம், குழந்தையின் பள்ளி விழா, குலதெய்வக் கோயில் உற்சவம், பக்கத்து வீட்டுக் கிர ஹப்பிர வேசம்… இப்படி முக்கியமான நாட்கள் வரும் போது எல்லாம், ‘அந்த நாளி ல் மாதவிலக்கு வந்து விட்டால்…’ என்னா வது என்கிற பதற்ற மும் பெண்களுக்குப் பற்றிக் கொள்வது அந்தக் காலம்.

இதுவோ…. ”மாதவிலக்கைத் தள்ளிப் போ ட க்கூடிய மாத்திரைகள் மார்க்கெட்டில் நிறைய கிடைக்கின்றன. அவற்றைப் போட் டுக்கொண்டால்… மாதவிலக்கையே தள்ளிப்போட முடியுமே! விசேஷ நாட்களையும் ஜாலியாகக் கொண்டாட முடியுமே!” என்று குஷியாகும் பெண் களின் காலம்!

இவர்களில் பலரும், ‘இப்படி மாத்திரைகளை இஷ்டத்துக்குப் பயன் படுத்துவது ஆபத்தானது’ என்கிற அறிவுரைகளையெ ல்லாம் தெரிந் தோ… தெரியாமலோ கடந்து போய்க் கொண்டே இருக்க… கடைசியில் அதுவே பேராபத் தாக வந்து படுத்தி எடுக்க ஆரம்பித்து விடுகிறது என் பதுதான் உண்மை.

‘மாதவிலக்கைத் தள்ளிப்போட மாத்திரைகளைப் பய ன்படுத்துவது எந்த அளவுக்கு சரி?’ என்றபடி மகப் பேறு மருத்துவர் ஜெயம் கண்ணனிடம் பேசினோம்.

”மாதவிடாயைத் தள்ளிப்போட நினைப்பவர்கள்… மருத்துவர்களி ன் ஆலோசனைகளைப் பெறாமல் மாத்திரைகளின் பெயரைச் சொல்லி வாங்கிக் கொள்கிறார்கள். இது உடலைப் பெரிய அளவில் பாதி க்கச் செய்யும். பீரியட்ஸ் வருவதே தெரியாத அளவுக்கு பாது காப்பான நாப்கின்ஸ் இப்போது கிடைக்கிறது. அப்படியிருக்க, மாத்திரைகளைப் பயன்படுத்தி மாதவிலக்கை ஏன் தள் ளிப்போட வேண்டும்? இயற்கைக்கு மாறாக நாம் நிகழ்த்தும் எந்தச் செ யலுமே தவறானதுதான்” என்ற டா க்டர்,

”விசேஷமான நாட்களில் மாதவி லக்கு ஏற்பட்டால், சங்கோஜமாக த்தான் இருக்கும். ஆனால், அதை த் தள்ளிப்போடும் எண்ணத்தில் மாத்திரை களைச் சாப்பிடும்போது உடலுக்குத் தேவையற்ற சங்கடமாகிவிடும். மாதவிடாய் விஷயத்தில் மட்டும் அல்ல… எதற்காகவும் மாத்திரைகளைப் பயன்படுத்து ம் போது டாக்டரின் அறிவுரையை அவசியம் கேட்க வேண்டும்” என்று அழுத்தமாகச் சொ ன்னவர், மாத்திரைகளைப் பயன் படுத்துவது பற்றிய விஷயத்துக்கு வந்தார்.

”கடைகளில், ‘புரஜெஸ்ட்டரோன்’ (progesterone) கலந்த மாத்தி ரைகள் கிடைக்கின்றன. மூன்று முதல் ஐந்து நாட்கள்வரை அதனை எடுத்துக் கொள்ளலாம். எந்தவித பக்க வி ளைவும் இருக்காது. இருந்தும், ஒவ்வொரு வரின் உடலும் ஏற்றுக்கொள்ளும் விதமாக மாத் திரைகளின் செயல்பாடு அமைவது இல்லை. இதனால், மாத விலக்கு தள்ளிப் போக மாத்திரை போடுபவர்கள், முதலில் கர்ப்பப்பையை ஸ்கேன் செய்து கொள்ள வேண்டியது அவசியம். யூட்ரஸின் நிலை, ஏதேனும் பிரச்னை இருக்கிறதா, வயிற்று வலி, அல்சர், மாதவிடாய் கோளாறு, கர்ப்பப்பை கேன்சர் பாதிப்பு என எது வேண்டுமானாலும் நம்மை தாக்கி இருக்கலாம். அது குறித்து தெரியாமல் மாத்திரைகளைச் சாப்பிட்டால்… அத்தகைய பாதிப்புகள் பன்மடங்காகி, உடலை வரு த்திவிடும் வாய்ப்பு இருக் கிறது. டாக்டரி ன் அட்வைஸ் இல்லாமல் மாதவிலக்கு மாத்திரை களை உட்கொள்வதால் உடல் எடை கூடுவது, வயிற்றுப் புரட்டல், வா ந்தி, வாய்க்கசப்பு உள்ளிட்ட பல பாதிப் புகள் ஏற்படலாம். சிலருக்கு ‘மைக்ரேன்’ எனப்படும் ஒற்றைத் தலை வலியும் வர வாய்ப்பு இருக்கிறது.

இப்படி மாத்திரைகளைச் சாப்பிடும் போ து… மாதவிடாய் சுழற்சியும் மாறுபடும். அடுத்த மாத சுழற்சியை உடம்பு டேக் ஓவர் பண்ணாது. 100 மீட்டர் ரிலே ரேஸ் போகும்போது, குறிப்பிட்ட இடத்தில் அந்த ஸ்டிக்கை இன்னொருவர் வாங்க வேண்டும். இல்லை என்றால், ஓடியவர் நின்று கொண் டேதான் இருக்கவேண்டும். அதேபோல்தான் அடுத்த மாதவிடாய் சுழற்சி யை உடல் ஏற்றுக் கொள்ளாமல் போகும்போது… ரத்தப்போக்கு அதிகரிக்கும். நம் உடம்பின் உஷ்ணமும் அதிகமாகும்!” என விளக்க மாகச் சொன்ன ஜெயம் கண்ணன்,

”இந்தியாவில் வலி நிவாரணிக்கும், வைரஸ் பாதிப்பு உள்ளிட்டவ ற்றுக்கும் சேர்த்தே மாத்திரைகளைத் தயாரிக்கும் வழக்கம் இருக்கிறது. கடைகளிலும் தாராளமாகக் கிடைக்கிறது. இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் அதிகம். வெளிநாடுகளில் வலி நிவாரணி, ஹார்மோன் மாத்தி ரைகள் என எது கேட்டாலும், கடைகளில் கொடுக்க மாட்டா ர்கள். டாக்டரின் சிபாரிசு இருந் தால் மட்டுமே வாங்க முடியும். ஆனால், இங்கே மாத விலக் கைத் தள்ளிப்போட நினைக்கும் ஒரு பெண் சர்வசாதாரணமாக அதற்கான மாத்திரைகளின் பெ யரைச் சொல்லி மெடிக்கல் ஸ் டோரில் வாங்கிச் செல்கிறார். தா ன் செய்வது எவ்வளவு அபாயமா னது என்பது பற்றி அவர்களுக்குத் தெரிய வில்லை” என்று கவ லையை வெளிப்படுத்தியதோடு, தலைகோதும் தாயாகவும் மாறி இப்படிச் சொன்னார்-

 ‘‘மாதவிடாய் மாத்திரை, கருத்தடை மாத்திரை அளவு க்கு ஆபத்தை விளைவிக்க கூடியது இல்லை. ஆனாலும், சிறு பாதிப்புகள்கூட ஏற்ப டாத அளவுக்கு நம் உடலைப் பாதுகாப்பது அவசியம். பெ ண்ணின் உடல் பூவுக்குச் சம மானது. மாத்திரைகளின் வீரியம் தெரியாமல், அவற் றைப் பயன்படுத்தும்போது அந்தப் பூ எத்தகைய அவ திக்கு உள்ளாகும் என்ப தை உணரவேண்டும். முடிந்த மட்டும் இயற்கைக்கு மாறாக மாத சுழற்சியைத் தள்ளிப்போடுவதைத் தவிர்க்க வேண்டும். இக்கட் டான சூழலில் மாத்திரைகளைப் பயன்படுத்தும்போது மருத்துவ ரின் உரிய அறிவுரை யைப் பெற்றே பயன்படுத்த வேண்டும்!”

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

most viewed articles

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: