என்னை கடவுளுடன் ஒப்பிட்டு போஸ்டர் ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று நடிகர் விஜய் தனது ரசிகர் களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொட ர்பாக அவர் வெளியிட்டு ள்ள அறிக்கையில், முடிந் து போன விஷயத்தை சி லர் விஷமாக்க முயற்சிக் கிறார்கள்; அது நடக்காது, என்றும் கூறியுள்ளார். நடி கர் விஜய் விடுத்துள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:
சமீபத்தில் மக்கள் இயக்கம் சார்பில் நற்பணி விழாவும், “வேலாயுதம்” படத்தின் இசை வெளியீட்டு விழாவும் மதுரை யில் நடந்தது. அப்போது எனது ரசிகர்களில் சிலர் என் மீதுள்ள அன்பின் மிகு தியால், என்ன கடவுளாக சித்தரித்து சுவரொ ட்டிகள் ஒட்டியிருந்தார்கள். அதை ப்பார்த்த அடுத்த வினாடி யே ரசிகர்களை அழைத்து, இப்படியெல்லாம் போஸ்ட ர்கள் ஒட்டக் கூடாது. அதை அகற்றி விடுங்கள் என்று கண்டிப்புடன் கூறினேன். என் வார்த்தைக்கு கட்டுப்பட்டு ரசிகர்கள் உடனே அதனை அகற்றி விட்டனர். இனி இப்படி செய்
ய மாட்டோம் என்றும் உத்தரவாதம் தந்தார் கள்.
முடிந்து போன இந்த விஷயத்தை சிலர் விஷ மாக்க முயற்சிக்கிறார்க ள். நாங்கள் இதயத்தால் ஒன்றிணைந்தவர்கள். எங்களிடையே சாதி, மதம், இனம் போன்ற பேதங்களை உருவாக்கி, எங்களை பிரிக்க வோ, பிளவுபடுத்தவோ யாராலும் முடியாது. நான், சாதி, மத, இனத்துக்கு அப்பாற் பட்டு மனிதர்களை மனிதர் களாக பார்ப் பவன். ஆயிரம் பேர்க ளை படிக்க வைத்துக் கொண்டிருக்கி றேன். அவர்கள் என்ன சாதி -மதம் என்று எனக்கு தெரி யாது. என்னிடம் ஐம்பது பேர் வேலை பார்க்கிறார்கள். எனக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆயிரக்கணக் கில் நற்பணி இயக்கம் மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் இருக்கிறார்கள். இவர்கள்
எல்லோரும் என்ன சாதி – மதம் என்று எனக்கு தெரி யாது. எனக்கு தெரிந்ததெ ல்லாம் தமிழ், தமிழினம் ஒன்றேதான்.
ஒரு மனிதரை கடவுளாக சித்தரிப்பதில் எனக்கு உட ன் பாடு கிடையாது. அப்படி ஆர்வம் மிகுதியால் என் ரசிகர்கள் செய்த அந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என் ரசிகர் களுக்கு ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். இனி, வருங் காலங்களில் கடவுளோடு ஒப்பிட்டு சுவரொட்டிகளோ, நோட் டீசுகளோ வெளியிட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் கூறியுள்ளார்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
most viewed articles
- இலங்கை கொலைக்களம் பற்றி சீமானுடன் விவாதம் – வீடியோ(vidhai2virutcham.wordpress.com)
- வீட்டுமனைகள் விற்பனை (vidhai2virutcham.wordpress.com)