Saturday, January 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கண்தானம் செய்வது எப்படி?

இந்தியாவில் கண் தானத்துக்கு கண்களுக்கு பற்றாக்குறை இருப்பதால், ஒருவர் தானம் செய்யும் இரு கண்கள், பார்வை யற்ற இரு நபர்களுக்கு பார்வை கொடுக்கிறது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி முதல் செப்டம்பர் 8-ம் தேதி வரை – தேசிய கண்தான இரு வார விழா (National Eye Donation Fortnight) அனுசரிக்கப்படுகிறது.

அன்றைய தினம் கண் தானம் செய்வது புனிதமான மற்றும் அவசியமான செயல் என்று அனைவருக்கும் எடுத்து சொல் லப்படுகிறது. பார்வையின்மையை கட்டுப்படுத்தும் தேசிய வார விழாவாக இது அனுசரிக்கப்படு கிறது.

கண் பார்வை இழப்பு என்பது இந்தியா வில் அதிகம். சுமார் ஒன்றரை கோடி பேர் பார்வை குறைபாட்டினால் பாதிக் கப்பட்டுள்ளனர். இவர்களில், 60 சதவி கிதம் பேர் 12 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

 மதங்களும் ஆதரிக்கின்றன..!

அனைத்து ஜாதிகளும் மதங்களும் கண் தானத்தை உயர் வான காரிய மாகவே கருதுகின்றன.

இறந்த பிறகு, மண்ணால் அரிக்கப் பட்டோ அல்லது தீயினால் எரிக்கப் பட்டோ, எவ்வித பலனும் இல்லா மல் போகக்கூடிய  கண்கள் தான மாக கொடுக்கப்பட்டால் இறந்த பிறகு அவரின் கண்கள் மூலம் மற் றவர்கள் வாழ்வார்கள்.

எந்த வயதுள்ளவரும் கண்தானம் செய்யலாம். ஒரு வயது நிரம்பிய குழந்தை முதல், எவ்வளவு வயதா னவராக இருந் தாலும், அவரது கண்கள் தானமாக ஏற்றுக் கொள்ளப்படும். 

கண்ணாடி அணிந்தவர்களும் கண்ணில் கண் புரை நீக்க அறுவை சிகிச்சை (காட் ராக்ட்) செய்துக் கொண்டவர்களும் கூட தா னம் அளிக்கலாம்.

எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, வெறிநாய்க்கடி, பாம்பு கடி போன்றவற்றால் இறந்தவர் களின் கண்கள் தானமாக பெ ற மாட்டார்கள்.

இறந்தவரின் கண்களை அப்ப டியே மற்றவர்களுக்கு பொரு த்தமாட்டார்கள். கண்ணிலுள் ள கார்னியா என்ற கருவிழி யை மட்டும் எடுத்து பார்வை யிழந்தவருக்கு பொருத்துகி றார்கள். கண்களை எடுத்த பின் இமைகளை மூடி தைத்து விடுவதால், முகம் விகாரமா க தோன்றாது.

 எப்படி தானம் செய்வது?

* கண்தானம் செய்வது எளிது. உயிருடன் இருக்கும் போதே இதற்கான உறுதிமொ ழி படிவத்தை அருகில் உள்ள கண் வங்கியில் கொடுத்து வைத்து வி டலாம். இத்தகவலை குடும்ப உறுப்பினர்க ள் மற்றும் நண்பர்களி டம் தெரிவித்து கண் வங்கியின் தொலை பேசி எண்ணையும் கொடுத்து வைத்திருந்தால், இறந்த பிறகு கண் தானம் செய் வதற்கு ஏதுவாக இருக்கும்.

 * கண்களை ஏற்கனவே உறுதி மொழி கொடுக்காவிட்டாலும் தானம் செய்யலாம். கண்களை விலைக்கு வாங்குவதோ, விற்பதோ சட்டப்படி குற்றம்.

 * ஒரு மனிதன் இறந்தபிறகு மட்டும் கண்களை தானம் செய்ய முடியும்.

* இறந்த  சுமார் 6 மணி நேர த்திற்குள் இறந்தவரின் கண்க ளை எடுத்து பாதுகாத்துவிட் டால், பார்வையற்றவருக்கு அதை பொறுத்த முடியும்..

* கண் வங்கி குழுவினர் வந்து இறந்தவர் உடலிருந்து கண் களை எடுக்கும் வரை அந்தக் கண்களை பாதுகாப்பது மிக முக்கியம். கண்களில் சுத்த மான தண்ணீர் விட்டு கண் இமைகளை மூடி வைக்க வேண்டும். அல்லது கண்களை மூடி அதன் மீது சுத்தமான ஈர த் துணியை போட்டு மூடி வைக்க வேண்டும்.

* இறந்தவர் உடலிருந்து கண்க ளை எடுக்க 15-20 நிமிட நேரமே ஆகும்.

* கண்களை எடுப்பதால் எடுத்தற்கான அறிகுறியோ, இறந் தவரின் முகம் விவகாரமாகவோ ஆகாது என்பது உறுதி. தேவைப்பட்டால் செயற்கை கண் களை கூட பொருத்தி விடலாம். 

 இலங்கையின் உதவி..!

 மக்கள் தொகையின் அடிப்படையில் இந்தியாவை விட இலங்கை பல மடங்கு குறைவு. ஆனால், இந்தியாவிற்கு தேவையான கண்கள் அதிகம் இலங்கையில் இருந்தே தானமாக பெறப்படுகிறது. இதற்கு காரணம், இலங் கையில் கண் தானம் என்பது கட்டாயமாக்கப்பட்டிருக் கிற து. நம் நாட்டிலும் அதற்கான முழு விழிப்புணர்வு வந்து, நாமும் அனைஅவ்வாறு கண் தானம் செய்யும்பட்சத்தில் தேவைக்கு போக, மற்ற நாட்டில் உள்ள கண் பார்வை இழந்தோருக்கு கூட தானம் செய்ய முடியும்.

கண் பார்வையை பாதுகாக்க டிப்ஸ்..

* போதிய வெளிச்சத்தில் எழுதுதல் மற்றும் படித்தல்

* கண்களில் தூசி விழுந்தால் கைகளால் கசக்க கூடாது. தண்ணீரால் கண்களை சுத்தம் செய்யவும்

* கம்ப்யூட்டரில் பணி செய்யும் போது டிவி பார்க்கும் போது அடிக்கடி கண்களை மூடி திறக்கவும். அதாவது கண்களை சிமிட்டவும்.

* பால், முட்டை, கீரை, பழங்கள் போதுமான அளவு சாப்பிடவும்.

*வாகனம் ஓட்டும் போ து (கண்ணாடி அணி யாதவர்கள்) பவர்லெ ஸ் கண்ணாடி அணியு ங்கள்.

* 40 வயதுக்கு உட்பட்டவர்கள் ஓராண்டுக்கு ஒரு முறையும், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆறு மாதத்துக்கு ஒரு முறை யும் கண்களை பரி சோதனை செய்துக் கொள்ளுங்கள்

 *நீரிழிவு பாதிப்பு உள் ளவர்கள் ஆறு மாத த்துக்கு ஒரு முறை கட்டாயம் கண்களை பரிசோதனை செய்ய வும்.

 இரு யோசனைகள்..!

*நம் நாட்டை பொறுத்த வரையில் பெரும்பாலான மர ணங்கள் மருத்துவமனைகளில் நடக்கின்றன. அப்படி ஏறப் டும் போது இறந்த நபரின் கண்களை பெறும் முயற்சியை மருத்துவ மனை மேற்கொள்ளலாம். ஒப்பு தல்  படிவங்களில் கணவன் / மனைவி /மகன்/மகள் அல்லது பொறுப்பான உறவினரின் கைய ப்பத்தை பெற்று கண்களை எடுத்து,  தேவைப்படுவருக்காக வைத்துக் கொள்ளலாம்.

* உங்களுக்கு தெரிந்தவர்கள் அல்லது நெருக்கமானவர்கள் யாராவது திடீரென மரணமடை ந்து விட்டால் கண்களை ஆறு மணி நேரத்திற்குள், அருகில் உ ள்ள கண் மருத்துவ மனை வங்கி க்கு சேரும்படி செய்தால் கோடி புண்ணியம் கிடைக்கும். இறந்த வர்களின் உறவினர் சம்மதம் பெற்றே கண் தானம் செய்ய முடி யும். ஆகவே, உறவுக்காரர்களிடம் கண் தானத்தின் மகத்து வத்தை விளக்கி, கண் தானம் செய்ய சம்மதம் பெறவே ண்டும். சம்மதம் கிடைத்ததும், அருகில் உள்ள கண் மருத் துவ மனைக்கு, தொலைபேசியில் தகவ ல் கொடுத்தால் போ தும். மருத்து வமனையில் இருந்து நேரில் வந்து, கண்களை எடுத்துச்சென்று விடுவா ர்கள்.

கண்தானம் செய்ய விரும்புவோர் கீழே உள்ள‍ லிங்கை கிளிக் செய்திட வேண்டுகிறோம்

இந்தியாவில் உள்ள‍ கண் வங்கிகளின் முகவரிகளும் தொடர்பு எண்களும்


இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

most viewed articles

2 Comments

Leave a Reply