Monday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் – கேரளா முதலிடம்

இந்தியாவில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமுள்ள மாநிலங்களில் கேரளா முதலிடத்தில் இருக்கிறது. தேசிய அளவில் 2 சதவீதம் பேர் மன நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார் கள் என்றால் கேரளாவில் 5.86 சத வீதம் பேர் மனநலம் பாதிக்கப் பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

கேரளாவில் 3 அரசு மனநல மருத்துவமனைகளும், 3 அரசு மருத் துவ கல்லூரிகளில் உளவியல் துறைகளும், அவற்றில் 1,800 உளவியல் நோயாளிகளுக்கான படுக்கை வசதிகளும் இருக்கின்றன. இது தவிர 143 தனியார் மனநல மருத்துவம னைகளும் செயல்படுகின்றன. மற்ற மாநில ங்களை ஒப்பிடும் போது மனநல மருத்துவ மனைகள் போதிய அளவில் இருந்து ம் பிரச்சினைகளும் ஏராளமா கவே இருக்கி ன்றன.

மாநில மனநல ஆணையத்தின் புள் ளி விவரத்தின் படி கேரள மக்கள் தொகையில் 10 சதவீதம் பேருக்கு உளவியல் பிரச்சினைகள் இருக்கி றது. இதில் 2 சதவீதம் பேருக்கு மன ச்சிதைவு மற்றும் மனச்சோர்வு பிரச் சினைகள் உள்ளன. 2-3 சதவீதம் பேருக்கு உடல் பிரச்சினையால் ஏற்ப டும் கடும் உளவியல் குறைபாடுகள் உள்ளன. 6 வயதுக்குட்பட்டவர்களில் நூற்றில் ஒரு குழந்தை மன நலம் பாதிக்கப்பட்டதாக உள்ளது.”

மனநல பாதிப்புகள் அதிகரிப்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறப் படுகிறது. மத்திய அரசிடம் இருந்து பெறப்படும் சுகாதார நிதி முழுமை யாக பயன்படுத்தப்ப டாதது. மாநில அரசு மனநல பாதி ப்பு குறித்து ஆய்வு நடத்தாதது, கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஊழியர் பற்றாக்குறை தீர்க்கப்படா தது போன்றவை முக்கிய காரணங்களாகும். தனியார் மன நல மருத்துவமனைகளில் அதிகப்படியான கட்டணம் வசூ லிக்கப்படுவதும் பாதிப்புகள் கட்டுப் படுத்தப்படா ததற்கு காரணமாக இருக்கின்றன.

இந்திய அளவில் தனிநபர் மது அருந்தும் அளவு 0.75 லிட்டர் ஆகும். ஆனால் கேரளாவில் தனிநபர் ஒருவர் சராசரியாக 8.3 லிட் டர் மது அருந்துகிறாராம். அதேபோல கேரளாவில் லட்சம் பே ருக்கு 25.3 பேர் தற் கொலை செய்கிறார்கள். இது இந்தி ய அளவில் 10.5 பேராக உள்ளது.

இந்திய அளவில் விவாகரத்து அள வு 1.1 சதவீதமாக இருக்கும் போது கேர ளாவில் இந்த அளவு 3.3. சத வீதமாக உள்ளது. கேர ளாவில் மொத்தம் பதிவாகும் குற்றங்களில் 11.8 சதவீதம் குடும்ப வன்முறை வழக்குகளாக உள்ளன. ஆனால் இந்திய அளவில் 5.3 சத வீதம் வழக்குகள்தான் குடும்ப வன்முறை வழக்காகும்.

மேற்கண்ட புள்ளி விவரங்கள் மனநல பிரச்சினைகளோடு நேரடியாக சம்பந்தப்ப ட்டவை என்பது நிபுண ர்களின் கரு த்து. “மது, தற்கொலை, விவாகர த்துகள், குடும்ப வன் முறை போன்றவற்றி ல் மாநிலம் முன்னி லை வகிப்பது நிலை மை மோசமடைவதற் கான காரணங்கள். இது முன்னேறிய சமூகத்தை பாதிக்கும் பிரச்சினை” என் கிறார்கள் நிபுணர்கள்.

கேரளாவில் ஆண்களைவிட 1.5 முதல் 2 சதவீத பெண்கள் கூடு தலாக மனநல பாதிப்புக்கு உள்ளாகிறார்களாம். அங்கு பெண்களின் எண்ணிக்கை அதிகம் என்பதும் அவர்கள் தங்களின் பா திப்பை வெளியில் காட்டிக் கொள் ளாததும் அதிகமாக மனநலம் பாதிக்க காரண மாகிறது.

வளைகுடா நாடுகளில் இருக்கும் 25 லட்சம் கேரளவாசிகளில் 90 சத வீதம் பேர் ஆண்கள். அவர்களின் பணி குடும்பத்திற்கு அதிக வருவா யைத் தந்திருந்தாலும் வேறுவகையில் பிரச்சினைகளை யும் தருகிறது. வளைகுடா நாடுகளில் இருப்பவர்களின் மனைவிகளை வளைகுடா விதவை என்று அழைக்கிறா ர்கள். இவர்கள் உணர்வு ரீதியான பிரச்சினைகளுக்கு ஆளா வதாக ஆய்வுகள் கூறுகின்றன. கேரளாவில் நடக்கும் தற் கொலைகளில் 19 சதவீதத்திற்கு மனநல பாதிப்புதான் காரணம் என்ற மாநில குற்ற ஆவணங்கள் பிரிவு அறிக் கைகள் சொல்கிறது.

நன்றி-தினத்தந்தி

Leave a Reply