Friday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஹெல்மட் அணிவதால் ஆண்களின் தலை முடி உதிருமா?

ஆண்களின் தலைமுடி உதிர்வதற்கு ஹெல்மெட் அணிவ தும் காரணமாக இருக்க லாம். ஏராளமான ஆண் கள் இதை முழுமையாக நம்பு கிறார்கள். ஆனால் அறிவியல் பூர்வமாக இந்த நம்பிக்கை நிரூபிக் கப்பட வில்லை. இன்றை ய கால கட்டத்தில் ஆண் களுக்கு முடி கொட்டு வது ஒரு பிரச்சனையாக வே பார்க் கப்படுகிறது. ஏனெனில் முடி உதிர்வைக் கொண்டு சில நேரங்களில் ஆண் களின் வயதைக் கணி்க்கிறார்கள்.

முன்பெல்லாம் தலைமுடி உதிர்வதற்கும், பரம்பரைக்கும் தொட ர்பு உண்டு என்று கூறப் பட்டது. அதாவது ஒருவருடைய தந்தை க்கு முடி உதிர்ந்தால், அவரது மகனுக்கும் இருக்கும் என்று மன தைத் தேற்றிக் கொண் டிருந்தனர். ஆனால் அ ந்த சிந்தனை இப்போது மாறிவிட்டது. ஏனெனி ல் இப்போது பல ஆண்களின் தந்தைகளுக்கு முடி உதிர்ந்திரு ந்தாலும், அவர்களுக்கு நன்றாக முடி வளர்ந்திருக்கிறது. மே லும் இந்த தலைமுடி பிரச்சனை பல ஆண்களின் தன்னம்பி கையை சீர்குலைத்துவிடுகிறது.

ஆண்களின் தலைமுடி உதிர்விற்கு பல காரணங்கள் உள் ளன. அவற்றில் சில,

1. மாறிவரும் வாழ்க்கை முறை

2. தேவையில்லாத மன அழுத் தங்கள்

3. நேரமின்மை. அதாவது முடி யை பராமரிக்க நேரம் ஒதுக்கா மை. ஓடி, ஓடி உழைக்கையில் தலைக்கு ஷா ம்பூ போட்டு குளிக்கவே நேரம் இல்லை. இதி ல் எண்ணெய் தேய் த்து குளிக்க ஏது நேரம்?

4. பொடுகுப் பிரச்சனை. பெண்களை விட ஆண்களுக்கு தான் பொடுகு பிர ச்சனை அதிகம் ஏற்படுகிறது என்று நிபுணர்கள் நம்பு கின்றனர்.

ஹெல்மெட்டும், முடி உதிர்வும்:

1. பொதுவாக ஹெல்மெட் தலைமுடி உதிர்வுக்குக் காரணமாக இருப்பதில்லை. ஆனால் மிக அரி தாக மேற்கூரிய பிரச்சனை களோடு, வேறு சில பிரத்யேகக் காரண ங்களும் சேர்ந்து முடி உதி ர்வை ஏற்படுத்துகின்றன.

2. நமது சருமம் எவ்வாறு சுவா சிக்கிறதோ அதுபோல் நமது முடியும் சுவாசிக்க வே ண்டும். ஒரு சில நேரங்களில் ஹெல் மெட் நம து உரோமக் கால்களை சுவாசிக்க விடா மல் செய்யலாம். அதனால் உரோம கால்கள் மூச்சு விட வாய்ப்பில்லாமல் முடி உதிர்வு எற்பட வாய்ப் பிருக்கிறது.

3. ஹெல்மெட் அணிந்திருக்கும் போது நமது தலை வியர்க்க வாய் ப்பிருக்கிறது. மேலும் அந்த விய ர்வையை வழியவிடாமல் ஹெல்மெட் தடுத்து விடுகிறது. அதனால் வியர்வை ரோமக் கால் களிலே தங்கி அவற்றைப் பல வீனப்படுத்துகிறது. இதனால் கூட முடி உதிரும் வாய்ப்பு உள்ளது.

4. ஒரு சில ஆண்களுக்கு பொடுகுப் பிரச்சினை இருக்கும் போது, ஹெல்மெட் அணிந்தால் அதுவும் முடி உதிர்வுக்குக் காரணமாக இருந்து விடுகிறது.

பிரச்சனையைத் தீர்க்க வழி:

ஹெல்மெட் முடி உதிர்வுக்குக் கா ரணமாக இருந்தாலும், ஆப த்து காலங்களில் நமது உயரைக் காக்கிறது. அதனால் ஹெல் மெட் அணிவதை தவிர்க்க முடியாது.

அப்படியானால் தலைமுடி உதிர் வதை எப்படித் தவிர்ப்பது?

1. ஒழுங்காக தலைமுடியை கழுவுங்கள். முடிந்தால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலைக்கு குளிக்க வேண்டும்.

2. ஹெல்மெட் அணியும் முன் தலையில் கைக்குட்டை அல்லது ஸ்கார்ப் கட்டிக் கொள்ளலாம்.

3. நீண்ட தூரம் பயணம் செய்கையில் அவ்வப்போது இளை ப்பாறலாம். அதனால் முடி சுவாசிக்க முடியும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

most viewed articles

Leave a Reply