Sunday, February 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்று “அவனது” அம்மா சொன்னது பிற்காலத்தில் உண்மையாயிற்று

அந்தச் சிறுவன் மேடைப் பாடகியான தன் அம்மாவுடன் இசை நிகழ்ச்சிக்குச் சென்றான். மேடையில் பாடத் தொடங் கிய அவன் அம்மாவின் குரல் திடீரெ ன்று கரகரப்பாகி விட்டது. தொ டர்ந்து பாடமுடியாமல் கீழே இற ங்கிவிட்டாள். சட்டென்று அந்தச் சிறு வன் மேடையில் ஏறி தனக்குத் தெரிந்த பாடலை இனி மையாகப்பாடினான். அவனை உற்சாகப் படுத்த சில்லரைகளை மேடையை நோக்கிப் பார்வையாளர்கள் வீசினார் கள். உடனே பாடுவதை நிறுத்திய அவ ன், ‘கொ ஞ்சம் பொறுங்கள்’ என்றபடி மேடையில் வீசப்பட்ட பணத்தைச் சேகரிக்கத் தொடங்கினான். சுட்டியின் இந்தச் செயல், பார்வையாளர்களை மேலும் உற்சாகப்படுத்தியது. பணத் தையும் சில்லரை களையும் சேகரித்து முடி த்துவிட்டு மீண்டும் விட்ட இடத்தில் இருந்து பாட்டைத் தொடர்ந் தான்! அவன் அம்மா ஹென் னா ஹில், ”மகனே! நீதான் உலகத்தி லேயே நம்பர் ஒன் கலை ஞன். உன்னைப் பார்க் க மக்கள் போட்டி போட்டு வரு வார்கள்!” என்றாள். ஆ ம்! அன்று அவனது அம்மா சொ ன்னது பிற்காலத்தில் உண்மையாயிற்று. அந்தச் சிறுவ ன்தா ன் சார்லி சாப்ளின்.

லண்டனில் 1889 ஏப்ரல் 16-ல் பிறந்த சார்லிக்கு ஒரு வயதான போது, அம்மாவை விட்டு அப் பா பிரிந்துவிட்டார். அம் மா தனது சொற்ப வரு மானம் மூலம் சார்லி யையும் அவனது அண் ணன் சிட்னியையும் கஷ்டப்பட்டு வளர்த்தா ர். வீட்டில் எந்நேரமும் வறுமைதான். பேப்பர் போடுவது, முடி வெட்டுவது, பொம் மை செய்வது என சார்லி செய்யாத வேலையே இல்லை.  தாய்க்கு மன நிலை பாதிப்பு ஏற்பட்டபோது,  வீதியில் பாட் டுப்பாடி, நடன மாடி காசு தேற்றினான்.

‘எட்டுப் பொடியன்கள்’ என்ற நடனக்குழுவில்  மேடையேறிய சார்லி, தன் தனித்தன்மையை நிரூபித்தான். மொழி தெரியா தவர்களையும் சிரிக்க வைக்கும் சிந்த னையில்… வெறும் நடை, உடை, பாவனை களால் சிரிக்க வைத்து, மக்களிடம் வரவேற்பைப் பெற்றான். பிறகு, ‘கார் னோ’ என்ற நாடகக் குழுவில் இணைந்து, அமெரிக்கா சென்றார் சார்லி. மாக்செ ன்னட் என்பவர், தனது கி லிவீஸ் வீஸீரீ’ என்ற திரைப் படத்தில் நடிக்க வா ய்ப்பளித்தார். அது வெற்றிடைய வில்லை. மனம் தளராத சாப்ளின், மக்களைக் கவரும் வகையில் புது மையாக செய்ய நினைத்தார். அப் போது தோன்றியதுதான் இன்றை க்கும் உலகமே ரசிக்கும் (நாடோ டி) கேரக்டர்.

தொளதொள கால்சட்டை, இறுக்க மான மேல் சட்டை, ஒரு  தொப்பி, கையில் பிரம்பு, சிறிய மீசை, மிக ப் பெரிய வலது கால் ஷூவை இடது காலிலும், இடது கால் ஷூவை வலது காலிலும் அணிந்து, கால்களை அகட்டி தத் தக்கா பித்தக்கா என்று நடந்  தார். ‘கிட்ஸ் ஆட்டோ ரேஸ் அட் வெனிஸ்’  சார்லி சாப்ளின் நா டோடி வேடத்தில் நடித்த முதல் படம். சுட்டி கள் முதல் பாட்டிகள் வரை அதனைப் பார்த்து குலுங்க குலுங் கச் சிரித்தனர். பின்னர், அவரே இயக்கி நடித்த பல மௌ னப் படங்கள் வெற்றி பெற்றன. ஒரு காலத்தில் வறுமையால் வாடி ய  சாப்ளின், உலகில் மிக அதிகம் சம்பாதிக்கும் கலை ஞர்களில் ஒரு வரானார்.

அவர் அமெரிக்காவுக்கு எதிராகச் செயல்படுகிறார் என குற்ற ச் சாட்டு எழுந்தது. அப்போது வெளியூருக்குச் சுற்றுலா சென் றார். அவர் மீண்டும் அமெரிக்கா திரும்ப வேண்டுமெ னில், விசாரணைக்குழு முன் ஆஜ ராகி பதிலளிக்க வேண்டும் என அமெரிக்க அரசு நிபந்தனை விதித் தது. அதனை ஏற்க மறுத்து, ஸ்வி ட்சர்லாந்தில் குடியேறினார். அங்கு தன்வாழ்க்கை அனுபவ ங்களை சுய சரிதையாக எழுதி வெளி யிட்டார்.

1972-ல் அவரது 83-வது வயதில்  திரைப்படத்துறையில் ஆற்றிய அற்புத பங்களிப்பைக் கௌரவி க்கும் வகையில் சிறப்பு ஆஸ் கார் விருது அறிவிக்கப் பட்டது. 20 ஆண்டுகளுக்கு முன் அவரை வெளி யேற்றிய அமெரிக்கா, திருவிழாபோல் அலங்காரங்க ள், வாண வேடிக்கைகள், வர வேற்பு நிகழ்ச்சிகள் என உற்சா கமாக அவரை வரவேற்றது. 1975-ல் இங்கிலாந்து அரசு அவ ருக்கு ‘சர்’ என்ற உயரிய பட்டத்தை அளித்து பெருமைப்ப டுத்தியது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

most viewed articles

Leave a Reply

%d bloggers like this: