Friday, August 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சித்தமெல்லாம் சிவமயம் (அகத்தியர் கதை)

அகத்தியர் தோற்றம் பற்றி பல விதமாகக் கூறப்படுகிறது. தாரகன் முதலிய அரக்கர்கள் உல கை வருத்த, அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்கினி ஆகி யோர் பூமிக்கு வந்தனர். இவர்க ளைக் கண்ட அசுரர்கள் கடலு க்குள் ஒளிந்தார்கள். இந்திரனின் யோசனைப்படி அக்கினி வாயுவுட ன் கூடி பூமியில் விழுந்து அகத்தி யராய் அவதரித்தார் என்றும், மிர் திரர் குடத்திலிட்ட வீரியத்திலிரு ந்து அகத்தியரும், வருணன் தண் ணீரி லிட்ட வீரியத்திலிருந்து வசி ஷ்டரும் அவதரித்தனர் என்றும், மிர்திரர் குடத்திலிருந்து தோன்றி யமையால் அகத்தியர் குடமுனி, கும்பயோகி என்னும் பெயர்களைப் பெற்றார் என்றும் பலவாரான கருத்துகள் நிலவுகின்றன.

முன்பு தேவர்களை வருத்திய அசுரர் இப்போதும் வருத்த ஆரம்பித்தனர். இந்திரன் அவர்களை அழிக்க வரும் போது அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்து கொண்டனர். தே வேந்திரன் வேண்டுகோளு க்கிணங்க அகத்தியர் சமுத் திர நீர் முழுவதையும்  குடித்து விட, இந்திரன் அசுரர்களை அழித்தார். அதன்பின் நீரை  மீண்டும் கடலுள் விடுவித்தார் அகத்தியர். அகத்தியர் நீரின் மேல் படுத்தபடியே பன்னிரெ ண்டாண்டுகள் கடுந்தவமியற்றி அரிய சக்திகளை பெற்றார். கைலையில் நடந்த சிவபெருமான் திருமணத்தின் போது வட திசை தா ழ்ந்து தெந்திசை உயர்ந்தது. அதனால் அகத்தியரை தென் திசைக்கு செல் லுமாறு சிவபெருமான் கட்டளையி ட்டார்.

மேருமலைக்கு செல்ல வழிவிடாமல் நின்ற விந்தியமலை, அகத்தியரைக் க ண்டதும் பணிந்து தாழ்ந்து நின்றது. தான் தென் திசை சென்று வரும் வரையில் பணிந்து இருப்பாயாக என்று கூறி ச் சென்ற அகத் தியர் மீண்டும் வடதிசை செல்லாததால் விந்திய மலையும்
உயரவில்லை.

இராமபிரானுக்கு சிவகீதையை போதித்துள்ளார் அகத்தியர். சுவேதன் என்பவன் பிண ந்தின்னுமாறு பெற்றிரு ந்த சாபத்தை போக்கினா ர். தமக்கு வழிபாடு செய் யாது யோகத்தில் அமர் ந்திருந்த இந்திரத் துய் மன் என்பவனை யானை யாகுமாறு சபித்தார். அக த்தியர்தம் முன்னோ ர்களுக்காக விதர்ப்ப நாட் டை அடைந்து அவ்வ ரசன் மகள்

உலோபமுத்திரையை மணந்து தென்புலத்தார் கடனை தீர்த்தார்.

தென் திசைக்கு வந்த அகத்தியர் பொதிகை மலையில் தங்கி முருகக் கடவுளின் ஆணைப்படி *அகத்தியம்*என்னும் நூலை இயற் றினார்.

அகத்தியர் இந்திரன் சபைக்கு சென்றபோது இந்திரன் ஊர்வசியை நடனமாட செய் தான். ஊர்வசி இந்திரன் மகன் சயந்தனிடம் கொண்ட காதலால் தன்னிலை மறந்தாள். அதனால் அகத்தியர் சயந்தனையும் ஊர்வ சியையும் பூமியில் பிறக்கும்படி சபித்தார்.

வாதாபி, வில்வளவன் என்னும் அரக்கர் இருவரில் வில்வளவன் வேதியர் உருக்கொண்டு வழியில் செல்லும் வேதியர், முனிவர் முதலானோரை விருந்திற்கு அழைத்து வாதா பியைக் கறி சமைத்து படைத்து வாதா பியை திரும்ப அழைக்க; அவன் அவர்கள் வயிற்றைக் கிழி த்து வெளியே வருவதால் அவ ர்கள் இறந்து போவார்கள். முனிவர் இதனை அகத்தியரி டம் முறையிட்டனர். அகத்தியர் அவர்க ளிடம் விருந்து உண்ண சென்றார். வில் வளவன் உணவு படைத்துவிட்டு அகத்தியர் வயிற்றி லிருக்கும் வாதாபியை கூப்பிட அகத் தியர் “வாதாபே ஜீர்ணோ பவ” என்று வயிற் றைத் தடவ வாதாபி இறந்தான். நிலமையை அறிந்த வில்வளவன் அகத்தியரிடம் மன்னிப்பு கோரினான்.

சிவ பூசை செய்வதற்காக கமண்டலத்தில் அகத்தியர் கொ ண்டு வந்த கங்கை நீரை விநாயகர் ‘காக உரு’ கொண்டு சாய்த்துவிட கமண்டலத்திலிருந்து வழிந்து ஓடிய நீரே காவிரி ஆறு ஆனது. இலங்கை மன்னர் இராவ ணனை தம் இசை திறத்தால் வென்றார் அகத்தியர். தூங்கெயிலெறிந்த தொடி த்தோட் செம்பியன் காலத்தில் காவிரி பூம்பட்டிணத்தில் இந்திர விழாவை எடுப்பித்தார்.

புதுச்சேரிக்கு அருகிலுள்ள ‘உழவர் கரை’யில் ஆசிரமம் அமைத்து வேதபுரி பல்கலைக் கழகத்தில் தமிழை போதித்தார். எனவே அவர் தங்கியிருந்த பகு தி ‘அகத்தீஸ்வரம்’ என்று அழை க்கப்பட்டு அங்கு பெரிய சிவால யம் கட்டப்பட்டது. அதனை அகத் தீஸ்வரமுடையார் ஆல யம் என் றும் கூறுகின்றனர்.

சித்தராய் விளங்கிய அகத்தியரை பற்றிய அகத்தியர் காவி யம் பன்னிரெண்டாயிரம் வாயிலாக சில கருத்துக்களை மட் டுமே தெரிந்து கொள்ள முடிகிறது. அகத்தியர் அனந்தசய னம் என்ற திரு வனந்தபு ரத்தில் சமாதிய டைந்த தாகக் கூறப்படுகிறது.

ஒரு சிலர் அவர் கும்பகோ ணத்தில் உள்ள கும்பேசுவ ரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறு கின்றனர்.

அகத்தியர் தென்நாடு வந் த வரலாற்றை ஆய்வியல் நோக்கில் திரு.N. கந்த சாமி பிள்ளையின் சித்த மருத்துவ வரலாறு நூலில் காண லாம்.

அகத்திய மாமுனி சித்த வைத்தியத்திற்கு செய்த பணி அளவிடற்கரியது. பல நோய்களுக்கும் மருத்துவ சந்தே கங்களுக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளி வாக விளக்கம் கொடுத்துள் ளார். அகத்தியர் பெயரில் வெளியாகியுள்ள சமரச நிலை ஞானம் என்னும் நூலில் உடம் பில் உள்ள முக்கியமான நர ம்பு முடிச்சுகள் பற்றிய விள க்கம் காணப்படுகிறது. அகத் தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்னும் நூலில், பதினெட்டு வகையான மன நோய் பற்றி யும் அதற்குரிய மருத் துவம் பற்றியும் விளக்கப்பட் டிரு க்கின் றன.

அகத்தியர் அஷ்ட மாசத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷ ங்கள் பற்றி கூறியுள்ளார்.

*மேலும் அவர் எழுதிய நூல்களில் கிடைத்தவை:*
**
1. அகத்தியர் வெண்பா
2. அகத்தியர் வைத்தியக் கொம்மி
3. அகத்தியர் வைத்திய ரத்னாகரம்
4. அகத்தியர் வைத்தியக் கண்ணாடி
5. அகத்தியர் வைத்தியம் 1500
6. அகத்தியர் வைத்திய சிந்தாமணி
7. அகத்தியர் கர்ப்பசூத்திரம்
8. அகத்தியர் ஆயுள் வேத பாஷ்யம்
9. அகத்தியர் வைத்தியம் 4600
10. அகத்தியர் செந்தூரம் 300
11. அகத்தியர் மணி 4000
12. அகத்தியர் வைத்திய நூல் பெருந்திரட்டு
13. அகத்தியர் பஸ்மம் 200
14. அகத்தியர் நாடி சாஸ்திரம்
15. அகத்தியர் பக்ஷணி
16. அகத்தியர் கரிசில் பஸ்யம் 200
17. சிவசாலம்
18. சக்தி சாலம்
19. சண்முக சாலம்
20. ஆறெழுத்தந்தாதி
21. காம வியாபகம்
22. விதி நூண் மூவகை காண்டம்
23. அகத்தியர் பூசாவிதி
24. அகத்தியர் சூத்திரம் 30
போன்ற நூலகளை இவர் எழுதியதா கக் கூறப்படுகிறது. மேலும்

25. அகத்திய ஞானம் என்னும் அகத்தியம் என்னும் ஐந்திலக் கணம்
26 அகத்திய சம்ஹிதை என்னும் வடமொழி வைத்திய நூ லும் இவ ரால் செய்யப்பட்டதாகக்கூறப்படுகிறது.

Thanks to Mr. Jagadeeswaran

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

most viewed articles

3 Comments

 • Balu Natarajan

  எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும்
  கண்ணார் அமுதனைக் கண்டறி வாரில்லை
  உண்ணாடி உள்ளே ஒளி பெற நோக்கிடில்
  கண்ணாடி போலக் கலந்து நின்றானே. -திருமூலர்

  திருவடி தீக்ஷை(Self realization)
  இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.
  இது அனைவருக்கும் தேவையானது.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை “நான்” என்று நம்பி இருக்கிறோம்.
  சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.

  http://sagakalvi.blogspot.com/

  Please follow

  (First 2 mins audio may not be clear… sorry for that)
  http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk
  http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
  http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo

  Online Books
  http://www.vallalyaar.com/?p=409

  Contact guru :
  Shiva Selvaraj,
  Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
  17/49p, “Thanga Jothi “,
  Kalaignar kudi-iruppu – Madhavapuram,
  Kanyakumari – 629702.
  Cell : 92451 53454

 • மேலும் அகத்தியர் தேவாரதிரட்டு என்னும் நூலும் உள்ளது .
  ஒரு அருமையான வலைத்தளம் கண்டு இன்பம் அடைந்தேன். தங்களின் சிவ பணி தொடர என் வாழ்த்துக்கள் …நன்றி
  அன்புடன்
  வேல்தர்மா
  ஜெர்மனி

  தேவாரம்,திருவாசகம்,திருமுறை பாடல்கள் முழுவதும் இணையத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய
  முகவரி:
  http://www.devarathirumurai.wordpress.com

  http://www.devarathirumurai.blogspot.com

  தேவாரம்,திருவாசகம்,மற்றும் திருமுறைகளை இலவசமாக இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம், சுமார் 5 GB அளவு பாடல்கள் உள்ளன , மேலும் 63 நாயன்மார்களின் வாழ்கை வரலாறு சித்திர வீடியோ (கார்ட்டூன்) வடிவில் உள்ளது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: