Saturday, December 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பாபா அணு ஆராய்ச்சி மைய பணிவாய்ப்பு

அணு சக்தியை உபயோகித்து மின் உற் பத்தி செய்வது குறித்த ஆராய்ச்சிகளை ப் பிரதானமாகக் கொண்டு மேலும் பல அணு தொடர்பான ஆராய்ச்சிகளில் பா பா அணு ஆராய் ச்சி மையம் என்ற பார்க் (பி.ஏ.ஆர். சி.,) செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் யூ.டி.சி., என்னும் அப்பர் டிவிசன் கிளரிகல் பிரிவில் 66 காலி இடங்களை நிரப்புவ தற்கா ன அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த இடங்களுக்கு அரசு நிபந்தனைகளுக்கேற்ற இட ஒதுக்கீடு உள்ளது.

தேவைகள் : பாபா மையத்தின் உயர் நிலை உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க 16.09.2011 அன்று குறைந்த பட்சம் 18 வயது நிரம் பியவராக இருக்க வேண்டும். பட்டப்படிப்பில் ஏதாவது ஒரு பிரி வில் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் அங்கீகரி க்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக படிப்பை முடித் திருக்க வேண்டும். ஆங்கில டைப்ரைட்டிங்கில் ஒரு நிமிடத்திற்கு 30 வார் த்தைகளை அடிப்பது, கம்ப்யூட்டரில் திறன் போன்றவை இருந்தால் கூடுதல் தகுதியாகக் கருதப்படும். எழுத்துத் தேர்வு மூலமாக இந்த ப்பதவி நிரப்பப்பட உள்ளது.

இதர தகவல்கள்: பாபா அணு மையத்தின் இந்தப் பதவிகளுக்கு ஆன்-லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் இ-மெயில் அனுப்புவது, பைல்க ளை நிர்வகிப்பது, அஸிஸ்டென்ட் டைரியை வைத்திருப்பது, மூத்த அதிகாரிகளுக்கு இ-மீடியா மூலமாக தகவல் பரிமாறுவது, அறிக் கைகள் மற்றும் தகவல்களை நிர்வகிப்பது போன்ற பணிகளில் ஈடுபட வேண்டியிருக்கும்.

ஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள் : 16.09.2011

இணையதள முகவரி

www.barc.gov.in/recruitment/vacancy76.pdf

Leave a Reply