Sunday, May 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புகை பிடிப்பதால் விளையும் நன்மைகள் 25

புகை பிடிக்கும் ஒருவரிடம் புகை பிடிப்பதால் உண்டாகும் தீமையை எவ்வளவு எடு த்து சொன்னாலும் எந்த பலனும் உண்டாவதில் லை. அட்வைசுக்கு பயந்து நம்மைக் கண்டா லே மறைந்து நின்று ஒரு சிக ரெட் பற்ற வைப்பார்கள். புகை பிடிப்பது கேடு என் று அவர்களுக்கு நன்றாகத் தெரியும் ஆனால் அந்த கேடு தனக்கு வந்து சேரு ம் வரை தன்னை சிகரெட் ஒன்றும் செய்யாது என்று தான் நினைப்பார்கள். வீணாக நண்பர்களை இழப்பானேன். எனவே புகை பிடிப்பதால் என்ன நன்மைகள் என்று யோசித்தேன். எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.

 1. பிறருக்கு உதவும் சந்தோ சம் கிடைக்கிறது. தினமும் சிகரெட்டுக்கு செலவளிக் கும் பணத்தில் பெட்டிக் கடைகாரர்கள், பீடி, சிகரெ ட், தீப்பெட்டி கம்பெனியின் தொழிலாளர்கள், புகையி லை உற்பத்தியாளர்கள் குடும்பத்துக்கு உணவு கிடைக் கும்.
 2. நாட்டுக்கு உதவுகிறீர்கள். சிகரெட்டுகள் மீது விதிக் கப்படும் கணிசமான வரியால் நாட்டுக்கு நன்மை.
 3. நாற்றம் பிடித்த மோசமான சுற்று சூழலில் இருக்க வே ண்டி வந்தாலும் ஒரு சிக ரெட்டை பற்ற வைத்து புகை யால் எல்லா அசிங்கங்களை யும் மறைத்து புகை மேக த்துக்குள் இருப்பது. தேவ லோகத்தில் இருப்பது போ ல, மேகத்துக்கிடையே சஞ்ச ரிப்பது போன்ற அனுபவம் தரும்.
 4. சிகரெட் நெடியால் மோப்ப சக்தி குறைந்து போவதால் சுற்றுப் புறத்தின் எந்த நாற் றமும் மூக்கை உறுத்தாது. வீட்டு சாப்பாட்டில் குறையி ருந்தாலும் ஒன்றும் பெரி தாக தெரியாது.
 5. சிகரெட் புகைக்குள் எப்போதும் மறைந்திருந்தால் கட ன்காரர்கள் எளிதில் அடையாளம் கண்டு கொள்ள மாட்டார்கள்.
 6. சிகரெட்டைக் கொடு த்து, வாங்கி நட்பை வளர்த்துக் கொள்ள லாம். முன் பின் தெரியாதவர்களுடன் கூட தீப் பெட்டி கேட்டு எளிதில் நட்பு கொள் ளலாம்.
 7. எப்போதும் தீப்பெட்டி அல்லது லைட்டர் வைத்துக் கொண்டிருப்பது இரவு மின்வெட்டு ஏற்படும் போது மிக உதவியாக இருக்கும்.
 8. சுற்றி எப்போதும் புகை பரப்பிக் கொண்டிருப்ப தால் கொசுத்தொல்லை அதிகம் இருக்காது. சிக ரெட் தயாரிப்பாளர்கள் புகையிலையுடன் கொ சு மருந்தையும் கலந்து தயாரித்தால். தனியாக கொசு வர்த்தி வாங்கும் செலவு மிச்சம்.
 9. பிரச்சனைகள் வந்தால் அதை எப்படி எதிர்கொ ள்ள வேண்டும் என்று சிந்தித்து தலையை புண்ணாக்க வே ண்டியதில்ல. டென்சனே தேவையில்லை ஒரு சிக ரெட்டை பற்ற வைத்தால் போதும். தீக்குச்சியை உரசும் போது கோபத்தை வெளிப்படுத்தலாம் , தீக்குச்சி எரிவதை ஒரு வினாடி ரசித் து அதில் எதிரியின் அழிவைக் கற்ப னை செய்து ஆசு வாசப்படலாம், சிக ரெட்டை பற்ற வை த்து ஊதி தள்ளும் போது பிரச்சனைக ளை புகை போல் ஊதித் தள்ளுவதை போல் கற்பனை செய்ய லாம். எஞ்சிய துண்டு சிகரெட்ட நசுக்கித் தள்ளி ஆத்தி ரத்தை தீர்த்துக்கொள்ளலாம்.
 10. சிகரெட் பிடித்து லொக் லொக்கென் று இருமி மற்றவர் களின் அனுதாபத் தை சம்பாதிக்கலா ம். பிறர் கவனத் தை தன் பக்கம் இழுக்கலாம்.
 11. அதிகம் சிகரெட் பிடிப்பதால் சீக்கி ரம் முதுமைத் தோ ற்றம் வந்து விடும். முதியவர் என்றால் அதற்குரிய மரியாதையும் கவுரவுமும் எளிதில் கிடைக்கும் . பஸ் ஸில் இடம் கிடைப்பது கூட எளிது.
 12. தொடர்ந்து புகைப்பதால் சீக்கிரமே உடல் தளர்ந்து கை த் தடியுடன் நடக் கும் நிலை ஏற்ப டும். துரத்தும் தெ ரு நாய்களை விர ட்ட உதவும்.
 13. இரவு முழுதும் இரு மிக் கொண்டிருப்ப தால் வீட்டில் திரு டர்கள் வரும் பய மில்லை. வேறு த னியாக நாய்கள் வளர்த்த வேண்டியதில்லை.
 14. வாய் துர்நாற்றத்தை புகை நாற்றத்தால் எளிதில் மறை த்து விடலாம்.
 15. எப்போதும் புகை அடித்துக் கொண்டிருப்பதால் வாய் மற்றும் நுரையீரல்களில் உள்ள கிருமிகள் செத்துப் போகும் அல்லது வேறு இட ம் பெயர்ந்து போய் விடும்.
 16. வேண்டாத விருந்தாளியை விரட்ட புகையை அவர்கள் முகத்துக்கு நேரே அடிக்கடி ஊதி விட்டால் போதும்.
 17. புகை பிடித்து கேன்சர் வந்து படும் அவஸ்தையை பார்க் கும் போது பிள்ளைகள் அதற்கு எதிராக வைராக்கியம் எடுத்துக்கொண்டு அதன் பக்கமே போகாமல் நல்ல பிள்ளைகளாக வளர உத வும். மிகவும் அத்தியாவ சியமாக இருந்தாலொ ழிய யாரும் அருகில் வ ந்து பேச்சுக் கொடுத்து தொல்லை பண்ன மாட் டார்கள்.
 18. சிகரெட் பிடிப்பதில் பல ஸ்டைகளை கற்றுக் கொள்வது சினிமாத் துறையில் நல்ல எதிர்காலத்தை உருவாக் கித் தரலாம்.
 19. வாழ்வின் பிற்பகுதியில் டா கடர்களுக்கும் மருத்துவம னைகளுக்கும் அள்ளி அள் ளி தந்து வள்ளலாகலாம்.
 20. சிகரெட் பாக்கெட்,காலி தீப் பெட்டி,எரிந்த தீக்குச்சி, சிக ரெட்டின் எஞ்சிய துண்டுகள் போன்றவற்றை அதிக மாக சேர்த்து வைத்து சாதனை ப டைக்கலாம். கலைப் படை ப்புகள் உருவாக்கலாம்.
 21. வீட்டில் இறைந்து கிடக்கும் சிகரெட் துண்டுகளை சின் னக் குழந்தைகள் விரும்பி எடுத்து விளையாடுவதால் அவர்களுக்கு வேறு விளை யாட்டுப் பொருட்கள் வாங் கத் தேவையில்லை.
 22. மக்கள் நெருக்கமாக உள்ள இடங் களில் புகை பிடித்து எல்லோரது கவனத்தையும் ஈர்க்கலாம். கூட்டத்தில் தனியாக தெரியலாம்.
 23. சில்லரைத் தேவைப்பட்டால் சட்டென ஒரு பெட்டிக் கடையில் சிகரெட் வாங்கி சில்லரை பெற்றுக் கொள்ள லாம்.
 24. நாட்டில் பொறுப்பற்ற மக்க ளின் ஆயுளை குறைத்து ம க்கள் தொகை கட்டுப்பாட் டிற்கு உதவுகிறது.
சிகரெட் பிடிப்பதில் இவ்வளவு நன்மைகள் இருப்பதை கருத் தில் கொண்டு புகை பிடிப்பவர்கள் யாரும் இனி யாரைக் கண் டும் சங்கோஜப்படத் தேவையில்லை. நாம் எக்கேடு கெட்டா லும் பிறருக்கு உதவுகிறோமே நிம்மதியுடன் தொடருங்கள் சேவையை.
நன்றி திரு. சாதி அலி

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

most viewed articles

2 Comments

 • lawrence

  அருமையான பதிவு, இப்படி சொன்னாலாவது புகைப்பவர்கள் புகைப்பதை நிறுத்துவார்களா என்ற நன்பர் சாகித் அலி அவர்களின் எண்ணம் போலும். பாராட்டுக்கள்

 • Tamizh Magal

  namma alunga pidikkadhannu sonna pidippanunga, pidinnu sonna . . ..

  pidikkamala iruppanga. ada ponga sir, but idhu vithyasamanadha irukku

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: