Saturday, September 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இளம் பெண்கள் கலக்கும் மாடலிங் துறை

கல்லூரிப் படிப்பு ஒருபக்கம், கேமரா ஃப்ளாஷ்கள் மறுபக்கம் என்று மாடலிங் ஃபீல்டில் கலக்கும் இளம் பெண்களின் காலம் இது! அந்த மாடலிங் துறை, இன்றை ய யுவதிகளின் ஆர்வத்துக்கும், நம்பிக் கைக்கும் உரியதாக எந் தளவுக்கு எளிமையாக மாறி இ ருக்கிறது என்பதை… இதில் கல க்கிக் கொண்டிருக்கும் ஹரி த்தா, கரிஸ்மா, அத்தியா ஆகி யோரிடம் பேசியபோது நன்றா கவே உணர முடிந்தது!

”நம்மளோட சுதந்திரத்துக்கு ஒரு லிமிட் இருக்கு. மாடலிங் துறை க்கு வர்ற பெண்கள் அந்த லிமிட்டை சரியா கடைப் பிடிக்கணும்!” என்று மாடலிங்கின் பாலபாடத்தை கற்பிக்கிற ஹரித்தா, இந்த வருடம் எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் பி.ஏ. சோஷியாலஜி முடித் திருக்கிறார்.

”அப்பா, அம்மா ரெண்டு பேருமே ஜர்னலிஸ்ட். ப்ளஸ் ஒன் படிக்கும் போதே மாடலிங் பீல்டு க்கு வரணும்னு முடி வெடுத்துட்டேன். கா லேஜ்ல சேர்ந்ததுக்கு அப்புறம் அதுக்கான வாய்ப்புகளை உருவா க்கிக் கிட்டேன். ஸ்பெ ஷல் என்னன்னா, என க்கு மாடலிங் துறை யில பிள்ளையார்சுழி போட்டது, 2008-ல ‘அ வள் விகடன்’ அட்டைப் படத்துல வெளியான என்னோட போட்டோ தான். அதைத் தொடர்ந் துதான் பாராட்டுகளும், வாய்ப்புகளும் கிடை ச்சுது.

அழகை முதன்மையா கொண்டாடினாலும், டைமிங், உழைப்பு, ரச னை, அர்ப்பணிப்புனு இதுல நிறைய சென்ஸி ட்டிவான விஷய ங்கள் இருக்கு. படிக்கும்போதே அந்த ஃபீல்டோட நுணுக்கங்கள தெளி வா கத்துக்கிட்டேன். இருபதுக்கும் மேற்பட்ட புராஜெக்ட்கள் முடிச்சா ச்சு. படிப்பும் முடிஞ்சுட்டதால, இனி ஃபுல் டைம் மாடல் நான்!” என்று சந்தோஷப்படுகிறார் ஹரித்தா.

எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரியில் பி.எஸ்சி.,’எலெக்ட்ரானிக் மீடி யா’ முடித்து, பி.ஜி. அட்மிஷனுக்காகக் காத்திருக்கும் கரிஸ்மா, ”என் அப்பா ராம், நிறைய சீரியல்ல, சினிமாவுல நடிச்சவர். இப்போ பிஸினஸ்மேன். அம்மா, பியூட்டி பார்லர் மேனேஜர். அவங்களோட பாதிப்புலதான் நான் மாடலிங் வந்தேன்னு நெனச்சுடாதீங்க. எனக்கு ஃபிலிம் டைரக்டர் ஆகறதுதான் கனவு. அதுக்கான அடிப்படைப் பயிற்சி மற்றும் தொடர்பு கிடைக்குமேனுதான், இதை டிக் பண்ணி னேன்.

 காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் எடுத்த மூணு குறும் படங்கள்ல நடிச்சிருக் கேன். இப்ப பரபரப்பா ஓடிட்டிருக்கற ‘காஞ்ச னா’   படத்தோட தெலு ங்கு வெர்ஷன்ல ஒரு ரோல் பண்ணியிருக் கேன்.

உண்மையைச் சொல்ல ணும்னா, கிளாஸ்ரூம், காபி ஷாப்னு இருந்த என்னை, ஷூட், ஷெட் யூல், பேமென்ட்னு இந் த மாடலிங் கேரியர் தா ன் காலேஜ் நாட்கள்லயே ஒரு கம்ப்ளீட் புரொஃபஷனலா மாத்தி இருக்கு.விருப்பம் இருக்கிற பெண்கள்… தடைகள், தயக்கங் களை தள்ளி வெச்சுட்டு வாங்க… இது நம்ம ஏரியா!” என்று அழைக் கிறார்.

”சென்னை டபுள்யூ.சி.சி. காலேஜ்ல ஃபைனல் இயர் விஸ்காம் படிக் கிறேன்” என்று அறிமுகமாகும் அத்தியா, சிம்பிளாகப் பேசுகிறார். ”எனக்கு அப்பா மட்டும்தான். அவர் டாக்டர். தங்கை, ஸ்கூல் போ யிட்டு இருக்கா. பள்ளிக்கூட நாட்கள்லயே கதைகள் எழுத ஆர ம்பிச்சேன். ஆன்லைன் பத்திரிகைகள்ல சிலது பப்ளிஷ் ஆச்சு. அந்த அங்கீகாரம் தந்த சந்தோஷத்துல, கிரியேட்டிவிட்டியை சார்ந்து சுழல்ற மீடியா ஃபீல்ட்லதான் கெரியர் இருக்கணும்னு முடிவு எடுத்தேன். அதுக்கான ஆரம்பப் புள்ளியாதான் மாடலிங்ல ஆர்வம் காட்ட ஆரம்பிச்சேன். அதுக்கு வாய்ப்பா அமைஞ்சது… சில்க்ஸ் விளம்பரம். அதுல தலைகாட்டினதுக்கு அப்புறம் நிறைய ஷோஸ் நடத்தி கொடுத்தேன்.

தமிழ் சினிமாவுல பெயர் எடுக்கிற ஹீரோயினா ஆகணுங்கறது, என் னோட பெரிய கனவு. இன்னொரு பக்கம், சில ஸ்கிரிப்ட்களும் வெச்சு இருக்கேன். நிறையவே திறமை இருக்குங்கிற நம்பிக்கை இருக்கு. அது போதும்ல?!” என்று அட்டகாசமாக முடித்தார் அத் தியா!

நீங்கள் அழகு ப்ளஸ் அலர்ட்னெஸ் கேர்ளா… மாடலிங் துறை உங்களை வரவேற்கிறது! (இந்த வரியை கிளிக் செய்க‌)

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

most viewed articles

Leave a Reply