செப்டம்பர் 2011 (இந்த) மாத உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம்
தனியொரு மனிதனால் சமூகத்தை எதிர்த்துப் போராட முடியுமா? தனியொரு மனிதனின் முயற்சிக்கு தேசம் திரண்டெழுமா? தனி யொரு மனிதனின் குரலுக்கு அரசு செவி சாய்க்குமா. . .?
இத்தனை கேள்விகளுக்கும் முடி யும் என்ற முன்னுதாரண பதிலாய் இருக்கிறார் அண்ணலின் அடுத்தப் பிறவியான அன்னா அசாரே!
ஊழலுக்கு எதிராய் அவர் ஊதிய சங்கு ஊரை மட்டுமல்ல உலகத் தையே எழுப்பியிருக்கிறது. கத்தியி ன்றி, ரத்தமின்றி சுதந்திரம் வாங்கித் தந்தார் காந்தியடிகள் என்பதை நம்ப மறுக்கிற இன்றைய இளைய சமுதாயம் அனைத்தும், ஆர்பாட்டமின்றி… ஆள் பிடிப்பி ன்றி… அன்னா ஹசாரே நடத்திய போராட்டத்தைப் பார்த்து பரிம் மித்துப் போனது.
அத்துடன் நிற்காமல் இனிமே நாங்க உங்க பக்கம் என்று தோள் தட்டி அவருக்குப் பின் அணி திரண்டிருப்பதைப் பார்க்கும்போது பாரதி பாடிய ஆஹா! எழுந்தது பார் யுகப் புரட்சி என்று ஆனந்தக் கூத்தாடத் தோன்றுகிறது.
அன்னா ஹசாரே ஒன் றும் பெரும் புள்ளியல் ல• எந்த பண பலமும் சாதிப் பின்னணியும், கட்சி சாயமும் இல்லா த அவர் பின்னா ல் சாதி மத இன வேற்றுமைக ளைக் கடந்து இந்திய தேசமே கைக் கோர்த்தி ருப்பதற்கு என்ன காரணம்?
சிந்தனையில் தெளிவும் செயலில் நேர்மையும் கொள்கையில் உறுதியும் வெளிப்படுத்துவதில் கம்பீரமும் கூடவே தேசப் பற்றும் இருந்தால், சாதாரண மனிதன் கூட இந்த தேசத்தில் சரித்திரம் படைக்கலாம் என்பதுதானே!
இந்த எழுச்சிக்கும் மக்களின் மன வோட்டத்திற்கும் ஆதரவு தந்து ஊக்கப்படுத்திய ஊடகங் களை உரத்த சிந்தனை உச்சி முகர்ந்து பாராட்டுகிறது. ஆனாலும் ஹசா ரே வென்றால். அவர் விரும்பிய ஜன லோக்பால் சட்டமாகுமா? அதுவும் விரைந்து செயல்படுமா? என்ற கவலை அடுத்து வந்துவிட்டது.
தங்களின் சம்பள உயர்வுக்காகவும், சலுகைகளுக்காகவும் கட்சி வேறுபாடின்றி உடனடியாக சட்ட திருத்தம் கொண்டு வர முனை கின்ற அமைத்துக் கட்சிகளும் லோக்பால் மசோதாவை அவசர சட்டமாக கொண்டு வர ஒன்று சேர வேண்டும். அப்போது தான் ஊழல் நாற்றத்தில் மூச்சுத் திணறிக்கொண்டிருக்கும் நம் தேசம் புதிய காற்றை சுவாசிக்கும்.
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.