Sunday, August 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இந்த வேலை நமக்கு வொர்க் அவுட் ஆகும்னு மனசுக்குத் தோணிட்டா…

இந்த வேலை நமக்கு வொர்க் அவுட் ஆகும்னு மனசுக்குத் தோணிட்டா… மத்தவங்க சொன்னாங்களேனு அதை மாத்திக்காம, நம்பிக்கையோட இறங்கி வேலை பார்த்தா, ஏறி வந்துடலாம்!”

– விறுவிறு வார்த்தைகளில் ஆரம்பித்தார் சென்னை, மின்ட் பகுதி யைச் சேர்ந்த இந் திர லட்சுமி.

‘ஃப்ரெண்ட்ஸ் ஸ்டார்ச்’ என்ற பெயரில் இங்கே இயங்கும் இவருடைய புடவை டிரை வாஷ் கடையில், அம்பத்தூர், தி.நகர், பல்லாவரம், த ண்டையார்பேட்டை, பெ ரம்பூர் என சென்னையி ன் சுற்று வட்டாரப் பெண்கள் எல்லாம் தேடி வந்து தங்கள் புடவைகளை ஒப்படைக்கி றார்கள். ஏழு பணியாட்கள், நூற்றுக்கணக்கான நிரந்தர வாடிக்கை யாளர்கள், மாதம் 25 ஆயிரத்துக்கு மேல் லாபம் என்று அசத்திக் கொண்டிருக்கும் இந்திரலட்சுமி… இந்தத் தொழிலில் நிமிர்ந்தி ருக்கும் கதை… ‘என்ன பண்ணலாம்..?’ என்று காத்திருக்கும் இல்லத் தரசிகளுக்கு இன்னுமொரு நம்பிக்கைக் கிளை!

”சின்ன வயசுல இருந்தே நான் துறுதுறு. ஏதாச்சும் வேலை செஞ் சுட்டே இருக்கணும் எனக்கு. பி.எஸ்சி. படிச்சு முடிச்சதும் திரும ணத்தை முடிச்சுட்டாங்க. வீட்டுல சும்மா இருக்கப் பிடிக்காம… கிராஃப்ட், பெயின்ட்டிங்னு பொழுதுகளை சுவாரஸ் யமானதா மாத் திக்கிட்டேன். ரெண்டு குழந்தைகளும் என் வாழ்க் கையை இன்னும் அழகாக்கினாங்க” எனும் இந்திர லட்சுமியின் வாழ்வில் அந்தத் திருப்பம் நிகழ்ந்திருக்கிறது.

”2000-ம் வருஷம் ஒரு மேஜர் ஆபரேஷனுக்குப் பிறகு, சில மாத ங்கள் ஓய்வுல இருந்தப்ப… ‘சும்மா’ இருக்கறோமேங்கற உணர்வு… என்னைப் படுத்துச்சு. புடவை டிரை வாஷ் பண்ணும் என் தோழி ஒருத்தி கிட்ட, ‘எனக்கும் சொல்லிக் கொடு’னு கேட்டு பொழுதுபோக்கா கத்துக்கிட் டேன். பீரோவுல இருந்த புடவைகளு க்கு எல்லாம் கஞ்சிபோட்டு, டிரை வாஷ் செய்றதுனு பொழுது களை ஓட்டினேன்.

டிரை வாஷ் செய்யக் கத்துக்கொடுத்த அந்தத் தோழி, ‘இப்போ டிரை வாஷ் கடைகளைத் தேடிப் போற பெண் களுக்கு ஈடுகொடுக்கற எண் ணிக்கையி ல இங்க கடைகள் இல்லை ’னு ஒரு முறை சொன்னா. ‘அப்படினா… டிரை வாஷ் கடை யை நானும் ஆரம் பிக்கலாமா?’னு கேட்க, ‘கண்டிப்பா!’னு சொன்னவ… எனக்கு நம்பிக் கையும், உத்தர வாதமும் கொடு த்ததோட தொழில் நுணுக்கங்களையும் சொல்லிக் கொடுத்தா.

வீட்டுல என் விருப்பத்தைச் சொன்னதும்… ‘நாம ஆசாரமான குடு ம்பம். ஊர்ல இருக்கறவங்க சேலையை எல்லாம் துவைச்சுக் கொடு க்கற தொழில் நமக்கெதுக்கு?’னு பதறினாங்க. அர்த்த மில்லாத அந்த அட்வைஸ்கள புறந்தள்ளி, ‘இந்த தொழில்ல நான் ஜெயிப் பேன்!’னு உறுதியா நின்னேன். என் கணவர் வாழ்த்து சொல்ல, 14 வருஷத்துக்கு முன்ன ஆரம்பமானதுதான் இந்த ‘ஃப்ரெண்ட்ஸ் ஸ்டார்ச்’!” என்றவர், அசராத உழைப்பால் இத்தொ ழிலில் வென்றி ருக்கிறார்.

”கடை ஆரம்பிச்சபோது, தெரிஞ்ச வங்ககிட்ட வாய்மொழியாப் பேசி ப் பேசித்தான் விளம்பரம் செய்தேன். பெண்கள் விடுதிகள், லேடீஸ் கிளப்கள், கல்லூரிகள்னு நேர்ல கேன்வாஸ் செய்து ஆர்டர்கள் வாங்கினேன். சொன்ன நேரத்துக்கு முன்னதாவே டெலி வரி, திருப்திகரமான ரிசல்ட்னு அவங்ககிட்ட எல்லாம் நல்ல பெயர் கிடைக்க, அடுத்தடுத்த ஆர்டர்கள் சிரமமில்லாம கிடைச்சுது. பாந்தினி சாரி, டிசைனர் சாரி, சில்க் காட்டன், ரா சில்க்னு மார் கெட்டுக்கு புதுசா வர்ற புடவை ரகங்களுக்கு ஏற்ப தொழிலை அப்டேட் செய்ய நான் தவறினதில்ல. அந்த அக்கறைக்கும் உழைப் புக்கும் பரிசாதான்… இப்போ ஏழு பணியாளர்களோட,  சீஸனைப் பொறுத்து மாசம் 25 முதல் 40 ஆயிரம் வரை லாபம் பார்க்கற அளவுக்கு தொழில்ல ஸ்திரமாகி இருக்கேன். கடை ஆரம்பிச்ச நாள்ல இருந்து கடையோட நிர்வாகப் பொறுப்பை ஏத்துக்கிட்டு திறம்பட நடத்தி வர்ற என் தோழி சித்ராவும் இந்த வெற்றிக்கு ஒரு காரணம்” என்று பெருமையோடு குறிப்பிட்டார் அனைவரையும் அறிமுகப்படுத்தியபடியே!

”இந்த சாரி டிரை வாஷ் தொழிலுக்கு கடை வாடகை, சலவைப் பொருட்கள், பணியாளர்னு ஆரம்பகட்ட முதலீடா 20 ஆயிரம் ரூபாய் தேவைப்படும். புடவையின் ரகத்துக்கு ஏற்ப டிரை வாஷ், ஸ்டார்ச் ரேட்-ஐ வசூலிக்கலாம். தொடக்க மாதங்கள்ல சில ஏற்ற இறக்கங்கள் இருக்கும். தொழில் சீரானதுக்கு அப்புறம் போட்ட முத லைவிட மாத லாபத்துக்கு கியாரன்ட்டி!” என்று சொல்லும் இந்திர லட்சுமிக்கு, பி.எஸ்சி படிக்கும் அபிநயா, ஒன்பதாம் வகுப்பு படி க்கும் பாலாஜி என்று இரண்டு குழந்தைகள். கணவர் ஷங்கர், பல விதமான கண்ணாடிகள் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்று மதி செய்யும் தொழிலில் இருக்கிறார்.

‘டிரை வாஷ்’ தொழில் வகுப்புகள் எடுக்கறது என்னோட அடுத்த கட் ட திட்டம். இன்னும் நிறைய பெண்கள் இந்தத் தொழிலுக்கு வரணு ம். என் தோழி எனக்குக் கொடுத்த உத்தரவாதத்தை நான் அவங்களு க்குக் கொடுக்கிறேன்!” – நிறைவாகச் சிரிக்கிறார் இந்திர லட்சுமி!

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: