Friday, August 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எழும்பூர் ரெயில் நிலையம் வரலாறு

அன்று முதல் இன்று வரை தமிழ் திரைப்படங்களில், கிராம த்தில் இருந்து கதாநாயகனோ, கதாநாயகியோ சென்னை வந் தால், அவர்கள் முதலில் கால் பதிக்கும் இடம் அநேகமாக எழும்பூர் ரெயில் நிலையமாக த்தான் இருக்கும். சென்னை யின் மையப்பகுதியில் பரந்து விரிந்து, அந்தக் கால கம்பீரத் துடன் ஓங்கி நிற்கும் இந்த ரெயில் நிலையக் கட்டிடத்தி ன் ஒவ்வொரு செங்கல்லும் பல கதைகளை தன்னுள் புதைத்து வைத்திருக்கின்றன.

ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டு இன்றும் பயன்பாட்டில் இருக் கும் மிகச் சில கட்டிடங்களில் முக்கியமானது எழும்பூர் ரெயில் நிலையம். கூவ ம் ஆற்றின் வட பகுதி யில் அமைந்திருந்த எழும்பூர் என்ற கிராமத் தில் ஆங்கிலேயர் வரு கைக்கு முன்பிருந்தே மக்கள் வாழ்ந்துவந்த னர். ஜார்ஜ் கோட்டை யில் குடியேறிய ஆங்கி லேயர்கள், தண்டை யார் பேட்டை, புரசை வாக்கம் என அருகில் உள்ள கிராமங்களை விலைக்கு வாங்கி, மெல்ல மெல்ல தங்கள் குடியிரு ப்பை விஸ்தரி த்தனர். அந்த வகையில் அப்போதைய மெட்ரா சின் ஆளுநர் எலிஹூ யேல் (அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற யேல் பல்கலைக்கழகத்திற்கு இவரது பெயர்தான் வைக்கப்பட்டுள்ளது), நவாப் சூல்பிகர் கான் என்ற முகலாய வைஸ்ராயிடம் இருந்து 1720 ஆம் ஆண்டு விலைக்கு வாங்கிய ஊர் தான் எழும்பூர். இந்த ஊரின் பெயர் ஆங்கிலேயர்களின் வா ய்க்கு நுழைய மறுத்த தால், எழும்பூரை அவர் கள் `எக்மோர்’ ஆக்கி விட்டார்கள்.

இந்த ஊரில் ஆங்கிலேயர்கள் முதலில் கட்டிய பிரம்மாண் டமான கட்டிடம் எழும்பூர் அருங்கா ட்சியகம், அடுத்தது எழு ம்பூர் ரெயில் நிலையம். சென்னை சென்ட்ரல் ரெயில் நிலை யத்தை போன்று எழும்பூரிலும் ஓர் பெரிய ரெயில் நிலையம் கட்ட வேண்டும் என ரெயில்வே நிர்வாகம் முடி வெடுத்ததைத் தொடர்ந்து, 1908ஆம் ஆ ண்டு இது கட்டப்பட்டது.

முதலில் ராயபுரம் ரெயில் நிலையத்தில் இயங்கி வந்த அப் போதைய மெட்ராஸ் மற்றும் தெற்கு மராட்டா ரயில்வேயின் தலை மையகம் பின்ன ர் இங்கு மாற்றப்பட்டு, 1951ஆம் ஆண்டு வரை இங்கு தான் செயல்பட் டது.

இந்திய, முகலாய மற் றும் கோதிக் கட்டிடக் கலைகளை ஒன்று கல ந்து உருவாக்கப்பட்ட இந்தோசாராசனிக் பா ணியில் இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த வரலாற்று சிற ப்புமிக்க கட்டிடத்தை கட்டியவர் சாமிநாதப் பிள்ளை என்ற தமிழ் கான்ட்ராக்டர். ராபர்ட் சிஸ்ஹோம் (Robert Chisho lm) என்ற ஆங்கிலேயர் கட்டிடத்திற்கான வரைபடத்தை வடிவ மைத்துக் கொடுத்தார்.

சாமிநாதப் பிள்ளை அக்காலத்தில் மெட்ராஸ் ராஜ்தானியில் மிகவும் புகழ்மிக்க காண்ட்ராக்டராக விள ங்கி வந்தார். பெங்களூர் நகரில் இவ ர் கட்டிய பல கட்டிடங்கள் மிகவும் சிறப்பாக இருப்பதாக அங்கிருந்த அதிகாரிகள் நற்சான்றிதழ் அளித் ததை அடுத்து, இந்த பணி சாமிநாதப் பிள்ளையிடம் ஒப்படை க்கப்பட்டது. தான் கட்டும் கட்டிடங்களில் பயன்படுத்துவதற் காக பூந்தமல்லியில் தனியாக செங்கல் சூளைகளை வைத்தி ருந்தார் சாமிநாதப் பிள்ளை. இங்கு பிரத்யேகமான முறையில் உறுதியான செங்கல்கள் தயாரிக்கப்பட் டன.

வழக்கமான ஸ்டேஷன் மாஸ்டர் அறை, அலுவலர்களின் அறை களைத் தாண்டி நீண்ட, காற்றோட்டம் மிக்க காத்திரு க்கும் அறைகள், சிற்றுண்டி விடுதி, பயணிகளின் உடமைக ளை வைக்கும் அறை என எழு ம்பூர் ரெயில் நிலையம் நன்கு விஸ்தீரணமாக கட்டப்பட்டது. இதற்கு அக்காலத்திலேயே 17 லட்சம் ரூபாய்க்கு மேல் செல வானதாம்.

அக்காலத்தில் மெரினா கடற்கரை, மூர் மார்க்கெட்டிற்கு அடு த்த படியாக சிறந்த பொழுதுபோக்கு இடமாகவும் இந்த ரெயில் நிலை யம் இருந்திருக்கிறது. மாலை வேளையில் இங்குள்ள சிற்றுண்டி விடுதியில் எதையாவது கொறித்துக் கொண்டு கதை பேச, ஒரு பெரிய கூட் டம் கூடுமாம். கொல்ல ங்கோடு மகா ராஜா உள்பட பல மகா ராஜா க்களும், ஜமீன்தார்க ளும், செல்வச் சீமான்க ளும் இங்கு ள்ள ஓய்வு அறையில், ரெயில் வரு கைக்காக மணிக்கணக் கில் காத்திருந்திருக்கி ன்றனர்.

அக்கால ரெயில்களில் நான்கு வகுப்புகள் இருந்திருக்கின்றன. முதல் வகுப்பு, இந்தியப் பணக்காரர்களுக்கும், ஆங்கிலேயர்க ளுக் குமானது. அடுத்தது இரண்டாம் வகுப்பு, அதற்கடுத்தது இண்டர் கிளாஸ் எனப்படும் இடைப்பட்ட வகுப்பு. இரண்டாம் வகுப்புக்கும், இடைப்பட்ட வகுப்புக்கும் இருக்கைகள் தான் வித் தியாசம். இரண்டாம் வகுப்பில் இருக்கை குஷன் சற்று தடி மனாக இருக்கும், பிந்தையதில் மெல்லியதாக இருக்கும். கடைசியாக பெரும்பாலானோ ர் பயணிக்கும் மூன்றாம் வகுப்பு பெட்டி. இதில் நீளமான மரப் பெஞ்சுகள் போடப்பட்டிருக்கும். இதுதான் அன்றைய ரெயில் பய ணம்.

இங்குள்ள இரண்டு நடைமே டைகளில் மட்டும் நேராக கார்க ளை செலுத்திக் கொண்டு போய், தேவையான கம்பார்ட் மெண்டிற்கு அரு கில் நிறுத்தி பயணிகளை இறக்கிவிடும் வச தி ஒரு காலத்தில் இருந்தது. இந்தியாவிலேயே ஹவுரா ரெயில் நிலையத்திற்கு அடுத்து எழும்பூரில்தான் இந்த வசதி இருந்தது. அகல ரெயில் பாதைகள் வந்த பிறகு இந்த வசதி பறி போய்விட்டது. இப்படி கார்களில் வந்து ரெயில் களுக்கு அரு கில் இறங்குபவர்களை வேடிக்கை பார்க்கவே அக்காலத்தில் எழும்பூர் ரெயில் நிலையத்தில் ஒரு கூட்டம் இரு க்குமாம்.

எழும்பூரில் இருந்து இலங்கையின் கொழும்பு நகருக்கும் ரெயி ல்கள் இயக்கப்பட்டிருக்கின்றன. கொழும்பு செல்லும் பயணி களை ஏற்றிச் செல்லும் எழும்பூர் தனுஷ்கோடி போட் மெயில், அவர்களை தனுஷ்கோடியில் இறக்கிவிட்டு விடும். பின்னர் அவர்கள் அங்கிருந்து படகு மூலம் இலங்கையின் தலை மன் னாருக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். தலைமன்னாரில் இருந்து கொழும்பு செல்ல ஒரு ரெயில் தயாராக காத்திருக்கும். 1964ஆம் ஆண்டு வீசிய புயலில் தனுஷ்கோடி இருப்புப் பாதை முற்றிலுமாக அழிந்துபோனதால், அத்துடன் இந்த ரெயில் சேவை நிறுத்தப்பட்டது.

சிக்காகோவில் உலகப் புகழ்பெற்ற ஆன்மீக உரையை ஆற்றிய சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் இருந்து இலங்கை வழியாக இந்தியா வந்தார். அப்போது கல்கத்தா செல்லும் வழி யில் அவர் சென்னைக்கு வருகை தந்தார். எழும்பூர் ரெயில் நிலையத்தில் அவருக்கு வரலாறு காணாத உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. விவேகானந்தரின் வருகையை ஒட்டி ரெயில் நிலையமே விழாக் கோலம் பூண்டிருந்தது.

இப்படி நிறைய வரலாற்று நிகழ்வுகளுக்கு சாட்சியாய் விள ங்கிய எழும்பூர் ரெயில் நிலையம், இன்றுதானே ஒரு வரலா ற்று பெட் டகமாய் நின்று கொண்டிருக்கிறது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணையத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத் தும் கூகுள் தேடு எந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. யாரு க்கேனும் ஆட்சேபனை இருந்தால், vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு, தங்களது ஆட்சேபனையும், புகைப்படம் இருக்கும் கட்டுரை (இடுகை)யை சுட்டி க்காட்டினால் உடனடியாக அப்புகைப்படத்தை நீக்கி விடுவோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

most viewed articles

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: