Tuesday, August 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பரமக்குடியில் திடீர் கலவரம் : தீ வைப்பு ; துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலி; டி.ஐ.ஜி., காயம்

பரமக்குடியில் இன்று மதியம் போலீசாருக்கும், ஒரு தரபப்பி னருக்கும் இடையே வெடித்த மோதலில் போலீஸ் வாகனம் தீ வைத்து கொளுத்தப்பட்டது. வன்முறை கும்பலை கலை க்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த மோதலில் 2 பேர் பலியாயினர். முழு விவ ரம் இன்னும் கிடைக்கவில் லை. தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.

இம்மானுவேல் சேகரன் 55 வது நினைவு நாளை ஒரு பிரிவினர் இன்று அனுஷ்டிக்கின்றனர். இதனையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற் றும் பரமக்குடியில் பல் வேறு நிகழ்ச்சிகள் ஏற் பாடு செய்யப்பட்டிருந் தன. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழக மக் கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டி யன் நெல்லையில் இரு ந்து புறப்பட்டு சென்றா ர்.

கம்பு, கல், சோடாபாட்டில் வீச்சு: இவர் தனது ஆதரவாளர்களு டன் வருவதால் இங்கு பதட்டம் ஏற்பட வழிவகுக்கும் என போலீசார் இவரை வல்லநாடு அருகே மறித்து தொடர்ந்து செல் லாதவாறு சிறை வைத்தனர். இந்த தகவல் இவரது ஆதரவா ளர்களுக்கு தெரிய வந்ததும் பரமக்குடியில் 5 முக்கு ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இவர்களை கலைந்து செல்ல போலீசார் வலியுறுத்தினர். இந்நேரத்தில் போலீசார் மீது கம்பு, கல், சோ டாபாட்டில் வீசப்பட்டது .தொடர்ந்து இரு தரப்பினரும் கடுமை யாக மோதிக்கொண்டனர்.

ஒரு கும்பல் போலீசா ரின் 2 வஜ்ரா வாகனத்தி ற்கு தீ வைத்தது. டி.எஸ். பி., மற்றும் போலீசார் காயமுற்றனர். போலீசா ர் வன் முறைக்கும்பலை சமாளிக்க கண்ணீர் புகை மற்றும் துப்பா க்கிச்சூடு நடத்தினர். இந்த மோத லில் டி.ஐ.ஜி., சந்தீப் மி்ட் டல் மற்றும் சப்.இன்ஸ்பெக்டர், போலீசார் காயமுற்றனர். போ லீசார் துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் இறந்து விட்டனர். பலர் காய முற்றனர். இறந்தவர்கள் பெயர் விவரம் இன்னும் அதிகாரப்பூ ர்வமாக வெளியிடப்படவில்லை. இது போல் திருமங் கலத் திலும் மறியல் நடந்தது. மதுரையிலும் சில பகுதிகளில் பதட் டம் நிலவுகிறது.

மதுரை ரிங்ரோட்டில் துப்பாக்கிச்சூடு : சிவகங்கை மாவட்டம் பாட்டம் பகுதியில் இருந்து ஒரு பிரிவினர் திறந்த லாரியில் வந்து கொண்டிருந்தனர்.மதுரை ரிங்ரோட்டில் சிந்தாமணி அவுட்போஸ்ட் அருகே வந்தபோது வாகனத்தை நிறுத்தி தொடர்ந்து செல்ல போலீசார் தடை விதித்தனர். இதனை யடு த்து போலீசாருக்கும், இந்த கும்பலுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதில் ஒரு பெண் போலீசார் தாக்கப்பட்டார். உடனே போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஜெய பிரசாத் ( 19 ) , பாலகிருஷ்ணன் (19 ) ஆகியோர் காயமுற்றனர். தொடர்ந்து 10க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் கல்வீச்சில் சேத மடைந்தன. இதனால் மதுரை ரிங்ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

news in dinamalar

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: