Tuesday, August 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கைலாயத்தில் ஒருநாள் . . . .

கைலாயத்தில் ஒருநாள், சிவனாரும் உமையவளும் சதுரங்கம் ஆடத்துவங்கினர். அப்போது, விநாயகரைத் தன் மடியில் அமர்த் திக் கொண்ட உமையவள், ”மகனே! என் ஆட்டத்துக்கு நீயே துணையாக இருப்பா யாக” என்று கூறி, உச்சிமோ ந்து இன்புற்றாள்.

உலக மக்கள் இறை வழிபாட் டின் சிறப்பறிந்து உய்வு பெற வேண்டு ம் என்பதுதான் இந்த விளையாட்டின் நோக்கமாக அமைய வேண் டும் எனத் தீர்மானித்தார் சிவனார். முத லில், உமையவள் வெற்றி பெறுமாறு விட்டுக் கொடுத்து விளையாடினார். வெற்றிக்குப் பரி சாக பல தலங்களையும் அளித்தார்.

ஒரு கட்டத்தில், சிவனாரின் திருவிளையாடல் ஆரம்பமானது. வெற்றி அவர் பக்கம் திரும்பியது. உமையவள் கோபம் கொண்டா ள். இறைவனைப் புகழ்வது போல் இகழ்ந்து (நிந்தாஸ்துதி) குறை ப்பட்டுக்கொண்டாள். இறைவனும் ‘மாடே போ’ என்று கூறி விட் டார். ‘மாடு’ என்றால் ‘அருகில்’ என்றும் பொருள். அதாவது, ‘நீ எப்போதும் நம் பக்கமே அல்லாமல், பிரியும் நிலையை உடைய வள் அல்ல’ என்பதாக பொருள் சொல்வார்கள் பெரியோர்கள். ஆனா ல், உலகத்தவரின் பார்வையில் ‘நீ பசுவாகக் கடவாய்’ என்று பொரு ள்பட்டது. அதன்படி, தேவி பசு உருவம் எடுக்க வேண்டிய தாயிற்று.

விநாயகருடன் தென்திசை நோக்கிப் புறப்படத் தயாரா னாள் அம்பிகை. தந்தை யிடம் ஆசி பெற்ற விநாய கர், அவர் ஆணைப்படி அன் னைக்குத் துணையாக… பசுக்கன்று உருவெடுத்து, அவளைப் பின் தொடர்ந் தார். இன்னும்பிற தேவ மகளிரும் பசுக்க ளாக… அந்தப் பசுக் கூட்டத் துடன் பயணித்து பாலியாறு, பெண்ணை ஆறு, கெடில நதி முத லான நதிக் கரைகளில் அமைந்த சிவத்தலங்களை வழிபட்டாள் அம்பிகை. பின்னர் மணி முத்தாநதிக் கரையில் விருத்தாசல நாதனைத் தொழு து, அங்குள்ள பூஞ்சோலையில் இளைப்பா றினாள்.

அப்போது நாரதர் அங்கு வந்தார். அவர் முன் பிரம்மசாரியாய் உரு வெடுத்து வந்து நின்ற பிள்ளையார், ”நான், இவ்வூர் அரசனின் மகன்; உமது யாழிசையைக் கேட்கவே இங்கு வந்தேன்” என்றார். நாரதரோ, ”உமையம்மை, தன்னுடைய இரண்டு செவிகளாலும் மதுர மான அமுதமாய்க் கேட்கும்படியான இந்த யாழிசையை நீயோ கேட்க வல்லவன்?” என்று இகழ்ந்து கூறினார்.

விநாயக பிரம்மசாரியும் அசரவில்லை; ”உமா தேவியாரின் மதுர மொழியைக் காட்டிலும் உமது யாழிசை சிறப்போ? சரி… இங்குள்ள பசுக் கூட்டம் உமது யாழிசைக்கு செவி சாய்க்குமானால், அந்த உமையம்மையே உமது இசையைக் கேட்டதற்குச் சமமாக எடுத்துக் கொள்கிறேன்!” என்றார்.

அதைக் கேட்டு நாரதர் திகைத்தார். ‘இவர் யார்… சிவனா? விநாயகரா? அல்லது ஆறுமுகனா?’ என்று அவர் யோசிப்பதற்குள், யானை முகத்தானாக காட்சி தந்தார் பிள்ளையார்.

பரவசம் அடைந்த நாரதர், துதிகள் பாடி வழிபட்டார். அவருக்கு வரங்கள் தந்து வாழ்த்திய விநாயகர், அங்கிருந்த பசுக்கள் யாவும் தேவ மகளிர் என்றும், நடுநாயகமாகப் படுத்திருக்கும் பசு, உமைய ம்மையே’ என்றும் விளக்கினார். பசு உருவில் திகழும் அம்பாளை வணங்கி, யாழிசைத்து மகிழ்வித்து, ஆசி பெற்றுச் சென்றார் நாரதர்.

இவ்வாறு பல தலங்களைத் தரிசித்த அம்பிகை, வீரபத்ரரும் விநா யகரும் உடன்வர… திருவாவடுதுறையை அடைந்தாள். அங்கே, காவிரியில் நீராடியவள், சிவனாரைத் தரிசிக்கும் பொருட்டு தெற்கு நோக்கித் திருவடி எடுத்து வைக்க, கால் இடறியது. அம்பிகையின் பசு உருவம் நீங்கும் காலம் கனிந்தது! அங்கே சோலையில் இறை வனுக்கு ஞானபூஜை செய்தாள். மடியிலிருக்கும் பா லை, லிங்கத் திருமேனியில் சொரிந்து அபிஷேகித்தாள்; பூக்கள் சமர்ப்பித்தும் வழி பட் டாள்.

தை மாதம், வளர்பிறை சப்தமி திரு நாளில்… அம்பிகைக்கு காட்சி தந்தார் சிவன்.

அம்பிகையும் தேவமாதரும் சுய உருவைப் பெற்றனர். துணை வந்த விநாயகரும் தாய்- தந்தையை வணங்கி, அங்கேயே (கோபு ரத்தின் தென் பகுதியில்) கோயில் கொண்டார். அம்பிகை ஸ்ரீ ஒப் பிலா முலையம்மையுடன் ஸ்ரீஅணைத்தெழுந்த பெருமானாக (ஸ்ரீமாசிலா மணீஸ்வரர்) அனைவருக்கும் அருளினார் ஈசன்.

இவ்வாறு உமையம்மை பசு வடிவில் வழிபட்ட தலம், திரு வாவ டுதுறை (ஆ-பசு). பசுவை ‘கோ’ என்றும் சொல்வர். எனவே கோகழி, கோமுத்தி எனும் பெயர்களும் உண்டு. ஆவடுதுறை என்ப தற்கு, ‘பிறவி தீர்த்து, பசுத்தன்மை நீங்க வேண்டு வோர் அடையும் இடம்’ என்றும் பொருள் கூறுவர். துறைசை என்றும் ஒரு பெயர் உண்டு!

மயிலாடுதுறை- கும்பகோணம் ரயில் வழிப் பாதையில், நரசிங்கன் பேட்டை நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் தலம். மயிலாடுதுறையிலிருந்து சுமார் 16 கி.மீ. தூரம்!

மூவர் தேவாரமும், மணிவாசகரால் கோகழி எனப் பாடப்பெற்ற சிறப்பும் கொண்ட தலம்; திருமூலர் திருமந்திரம் அருளிய திரு விடம்; திருஞானசம்பந்தருக்குப் பொற்கிழி அளித்த க்ஷேத்திரம்; பராந்தக சோழன் காலத்தில் கட்டப்பட்ட ஆலயம்… என இந்தத் தலத்துக்கு எண்ணற்ற சிறப்புகள் உண்டு. படர்அரசு, இத்தலத்தின் புனித மரம். முற்காலத்தில் ஊரின் பெயர் சாத்தனூர் என்றும், திருவாவடுதுறை என்பது ஆலயத்தின் பெயராகவும் திகழ்ந்ததைக் கல்வெட்டுத் தகவல்கள் விவரிக்கின்றன. பிரசித்தி பெற்ற திருவாவடுதுறை ஆதீனம் இந்தத் தலத்துக்குப் பெருமை சேர் க்கிறது!

அன்னைக்குத் துணையாக வந்து இங்கு கோயில் கொண்ட விநாயகரையும் தலத்தையும்…

சிந்தை நினை உறுதியும் சொற்றமிழ்ச் சுவையும்
பொருட் சுவையும் தெளிவும் பாசப்
பந்த மறுத்திடும் போதப் பரிவு மளித்
துடனிகழ் வென் பாலிற் தோன்றச்
சுந்தரக்கன்றுரு வாகிக் கயிலைவிட்டுத்
தாய்ப்பசுவின் துணையாய்க் கூட
வந்தருள் மும்மதத் துதிக்கை வாரணத்
திருமலர்த்தாள் வழுத்தல் செய்வாம்.

– எனப் போற்றுகிறது துறைசை புராணம். நாமும் கணபதியை வழிபடுவோம்; நம் வாழ்க்கை பயணத்திலும் துணையாய் வருவார் ஆனைமுகன்!

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: