தீபாவளிக்கு துணி எடுக்கச் சென்றால் அதிக நேரம் ஆகும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால் துணியைத் தைக் கக் கொடுக்கவும் நேரம் ஆகிறது இப்போதெல்லாம்.
ஏன் என்றால் அத்தனை மாடல்கள் வந்து விட் டன. எந்த மாட லில் சுடிதாரையோ, ஜாக்கெட் டையோ தைப்பது என்று முடி வெடுப்பது என்பது பெண்களுக்கு பெரும் பிரச்சினையா கிறது.
சுடிதார் என்றால் ஒரு டாப்சும், பேண்டும் சேர்ந்து அதனுடன் துப்பட்டாவும் இணை ந்தது என்ற காலம் போய் தற்போது பல வகைகளில் சுடிதார்கள் தைக்கப்படுகின் றன.
பஞ்சாபி, குஜராத்தி, மார்வாடி, ஷாட் டாப்ஸ், சல்வார் கமிஸ், கேதரிங், காலர் டைப், கட் வைத்த டாப்ஸ், ஸ்லீப் லெஸ் (கையில் இல்லாத டாப்ஸ்) என தையல் எந்திரங்கள் முழுத் திறனையும் வெளிப் படுத்துகின்றன சுடிதார்களில்.
ஆயத்த ஆடைகளின் மோகம் மெல்ல மெல்ல குறைந்து, தற்போது சுடிதார் துணிகள் எடுக்கப்பட்டு தங்களுக்கு வேண்டிய வகையில் தைத்து அணிகின் றனர் இளசுகள்.
அதிலும் தையல் கடைக்குச் சென்றால் ஒரு சுடிதார் தைப் பதற்கு எத்தனை விஷயங்களை முடிவு செய்ய வேண்டி இரு க்கிறது.
முதலில் கழுத்து வடிவம். அதில் எத்தனை வடிவங்கள். எல்லாவற் றையும் பார்த்தால் நமக்கு மயக்க மே வருகிறது. அதில் ஏதாவது ஒன்றை முடிவு செய்த பின்னர் கட் வைத்ததா, இல்லையா என்ற கேள்வி. பேண்ட் மாடல் எப்படி என்று அடுக்கடுக்கான கேள்வி களுக்கு பதில் சொல்லி முடிக்கும் போது நாம் எப்படிப்பட்ட உடை யைத் தைக்கச் சொல்லியிருக்கி றோம் என்றே புரியாமல் போய் விடு கிறது.
அத்தனை வகையில் மாடல்களும், வகைகளும் வந்துவிட்டன. புதிதாக வரும் மாடல்களைத்தான் இளசு களும் விரும்பு கின்றனர். அதனால் தாங்கள் தவறாக தைத்து விடும் பேன்டி னைக் கூட மாடல் என்று அறிமுகப்படுத்தி விடுகின்றனர் தையல் காரர்கள்.
தற்போது இளசுகள் விரும்பி அணி யும் வகையில் பஞ்சாபி மாடல்தான் முன்னணியில் உள்ளது. அதாவது இறுக்கமான, நீளம் குறைந்த டா ப்சும், தொள தொள வென்ற பேண் டும் தான் பேஷனாகிவிட்டது.
அதற்கு அடுத்தபடியாக காலர் மாட ல் அதிகரித்துள்ளது. காலர் வைத்த சுடிதாருக்கு என்ன விசேஷம் என்றால் துப்பட்டா அணியத் தேவை யில்லை. மேலும் அதனை ஜீன்ஸி ற்கும் போட்டுக் கொள்ளலாம்.
கைகளிலும், கழுத்தின் முன் அல்லது பின் புறத்தில் முடிச்சுகள் போடும் புதிய வடிவம் தற்போது அதி கரித்துள்ளது. இந்த மோகம் சுடிதார்களையும் தாண்டி பெண்கள் அணியும் ஜாக்கெட்டுக்கும் சென்றுள்ளதுதான் கூடுதல் தகவல்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்