Tuesday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடிகை சதா: “எவ்வளவு கொடுத்தாலும் கிளாமருக்கு நான் . . . .”

யானைக்கு பசியெடுத்தாலும் என்.வி யை உண்ணாது என்பது போலதான் இருக்கிறது சதாவின் வைராக்கியம். அறிமுகமான முதல் படமான ஜெயம்-ல் போ… போ…. போஓஓஓஓ… என்று டய லாக் பேசி ஆந்திராவையும் தமிழ்நாட்டையும் பித்து பிடிக்க வைத்த சதா, அப்புறம் கற்பூரம் தேய்ந்து காற்றாகி போனது போல ஆகிவிட்டார்.

பாலிவுட்டில் பிஸி, ஆந்திரா வில் ஆல் கிளாஸ் என்றெல் லாம் அவர் பற்றி நியூஸ் பரப்பப் பட்டதே தவிர நிலைமை ஒரு ஸ்டெப் கூட மேலேறவில்லை.

இந்த நேரத்தில்தான் பெரிய மனசு பண்ணி புலி வேஷத்தில் நடிக்க அழைத்து வந்தார் பி.வாசு. இவரால் படத்திற்கும், படத்தால் இவருக்கும் துளி கூட முன்னேற்றம் இல் லாமல் போக, மறுபடியும் சதாவின் ரூட் டில் சரியான இருட்டு.

இந்த நேரத்தில்தான் கதாநாயகி கிடைக்கா மல் கவலைப்பட்ட ஒரு புது இயக்குனர் சதாவை தொடர்பு கொண்டார். நம்ம படத்தில் கொஞ்சம் கிளாமரா நடிக்க வே ண்டியிருக்கும்.

அதுக்கு ஓக்கேன்னா சம்பளம் கூட பெரிய பிரச்சனையில்லை என்று அவர் எடுத்த எடுப்பிலேயே எழுபதில் வண்டியை ஓட்ட, எதிர்முனையில் பலத்த நிசப்தம்.

சில நிமிடங்களுக்கு பிறகு வாய் திறந்த சதா, எவ்வளவு கொடுத்தாலும் கிளாமருக்கு நான் தயாராக இல் லை. வீட்ல சும்மா கூட இருப்பேன். பிரச்சனை இல்ல என்றாராம்.

பூனை கண்ணை மூடுனா? ஃபுல் மீல்சை எலி திங்கும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply