Sunday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்கள் காதல் எத்தகையது????

“காதல்” இல்லாமல் இளமை இனிக்காது. காதலுடன் `அவ னும், அவளும்’ பார்க்கும் பார்வையில்தான் எத்தனை அர்த்தங்கள். பிடித்தமான வரை கவர்ந்துவிடுவதற்காக இளமை செய்யும் லீலைகள் தான் எத்தனை எத்தனை?

கூந்தலில் இருந்து தவறி விழும் பூக்களை சேகரிப்பது, குட்டிக் கரணம் அடிப்பது, கலையாத தலையை கலைத்துவிட்டு சீவிக் கொள்வது, சோகமாக இருக்கும் அவன் முகம் அவளைக் கண்டதும் மலர்ந்துவிடுவது என எத்தனை `ரொமான்டிக்’ காட்சிகள் ஒவ்வொரு இளைஞனின் வாழ் விலும்.

அப்படி, நீங்களும் காதல் வயப்பட்டிருக்கலாம். உங்கள் `ரொமா ன்டிக்’ செயல்களை ஆய்வாளர்கள் பட்டியலிட்டு உங்கள் காதல் எத்தகையது என்பதை விவரிக்கிறார்கள் இங்கே…

மன்மதன் காதல்

காதல் பாடல் பாடிக் கொண்டிருக்கிறீர் களா? அதிலும் உணர்ச்சி ஊட்டும் வரி களை அழுத் தமாக உங்கள் உதடுகள் உச்சரிக்கிறதா? அப்படியெனில் உங்களு க்கு காதல் உணர்வுகள் அதிகம். காதல் வசப்பட்டிருக்கும் உங்களுக்குள் அதிக நெருக்கம் இருக்கும் என்று அர்த்தம். உங் கள் கட்டுக்கடங்காத விருப்பத்தை பூர் த்தி செய்வதற்காக காதலியின் விருப்ப த்தை எதிர்பார்த்து பாடலாக பாடி அனு மதி கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த் தம்.

இந்த வகை ரொமான்டிக்கை ஆய்வாளர் கள் `மன்மதன் காதல்’ என்கிறார்கள். இந்த வகையில் உள்ள ஒரே ஒரு குறைபாடு காதலர் இருவரில் ஒருவரது ஆதிக்கம் அதிகமாக இருக்கும். ஆனாலும் உங்களுக்குள் நல்ல புரிதலும், மற்றவர் விருப்பத்துக்கு அப்படியே இணங்கி விட்டுக் கொடுத்தலும் நிகழும். இப்படி தீவிர காதலுணர்வு கொண்ட காதலர்கள் மகிழ்ச்சியாக வும், கவர்ச்சியாகவும் தோன்றுவார் கள்.

கவன ஈர்ப்பு காதல்

நீங்கள் காதலிக்கும் பெண்ணை தின மும் பார்க்கிறீர்கள். ஓரளவுதான் பழ க்கம். ஆனால் நெருக்கமில்லை. மற் றவர்களோடு கூட்டத்தோடு கூட்ட மாக மட்டுமே சந்திக்க முடிகிறது. அப்போது அவளை கவருவதற் காக, அவள் விரும்பும்படியாக அல்லது அவள் கேட்கும் படியாக பாடுவது, பேசுவது என்று கவனத்தை ஈர்க்க முயற்சி செய் கிறீர்களா? உங்கள் பேச்சை அவளும் ரசித்து புன்னகைக்கிறாள். ஆனால் பதில் எதுவும் சொல்வதில்லை. இப்படி இருக்கிறதா? உங் கள் நிலைமை.

ஆராய்ச்சியாளர்கள் இதனை `கவன ஈர்ப் பு காதல்` என்கிறார்கள். இது முழுமை யான காதல் அல்ல. உங்களுக்குள் காதல் உணர்வுகள் நிரம்பி இருக்கிறது. ஆனால் அவளுக்குள் அதுபோன்ற உணர்வு நிறைய இருக்காது. நிலைமை இப்படி இருந்தாலும் இருவருமே ஒருவரை யொ ருவர் ரசிப்பீர்கள். அவள் தனிமையில் சந்திப் பதையோ, நெருக்கத்தை அனும திப்பதையோ விரும்ப மாட்டாள். இது பொழுதுபோக்கு காதலென்கிறார்கள் ஆய் வாளர்கள்.

சேமிப்பு காதல்

அவள் மீது அன்பு, அக்கறை, மரியாதை எல்லாமே இருக்கிறது. இளமையின் குறுகுறுப்பு இல்லாத பார்வையே பார்க்கிறீர்கள். பேசவும் செய்கிறீர்கள். அதில் உள்ளர்த்தமோ, ரகசியமோ எதுவுமி ல்லை. அவளும் அப்படியே பழகுகிறாள். `இது எந்த வகை காதல்?’ என்றுதானே கேட்கிறீர்கள்.

இப்படிப்பட்ட காதலை, ஆய்வா ளர்கள் `சேமிப்பு காதல்’ என்று வகைப்படுத்துகிறார்கள். கிட்டத் தட்ட இது ஆழமான நட்புணர் வே. இருவரும் ஆழமான அன்பு வைத்திருப்பார்கள். காதல் உண ர்வையும் புரிந்து வைத்திருப் பீர்கள். `காதலி கிடைத்தால் இவ ளைப்போல கிடைக்கவேண்டும்’ என்று ஏங்கவும் செய்வீர்கள். ஆனால் அவளிடம் காதலைச் சொல்ல முடியாத, சொல்ல விரும்பாத அளவுக்கு நேசம் வைத்தி ருப்பீர்கள். நீங்கள் விரும்பினால் இந்த நட்பை வாழ்க்கை முழு வதும் நீடிக்கவும் செய்யலாம்.

திட்டக்காதல்

`உங்களை பிடித்திருக்கிறது’ என்று உங்கள் காதலி சொல்லி விட்டாள். உங்களுக்கும் அவளைப் பிடித்திருக்கிறது. நன்றாகவே பேசிக் கொள்கிறீர்கள். ஆனால் எந்த விஷயத்தை எடுத்துக் கொண் டாலும் எல்லை மீறல் இல்லவே இல்லை. காமத்தைப் பற்றியும் பேசுகிறீர்கள் ஆனால் விரசம் இல்லை. பிரச்சினை யைப் பற்றி பேசுகிறீர்கள், உங் கள் குறையை அவளும், அவளது குறையை நீங்களும் சுட்டிக் காட்டி பேசிக் கொள் கிறீர்கள், முரண்பாடு ஏற்பட்டாலும் முட் டிக் கொள்வதில்லை…!

உங்கள் காதல் இந்த நிலையில் இருக்கிறதா?

இது `திட்டக் காதல்’. வாழ்வின் போக்கை புரிந்து கொண்டு ஒன்று  க்கு இரண்டு முறை சிந்தித்து முடிவெடுக்கவும், வாழவும் விரு ம்பும் ஜோடி நீங்கள். உங்கள் உண ர்வுகளும் கூட எல்லைக்கு ட்பட்டது தான். உங்கள் அன்பும் என்றும்  நீடித் திருக்கும்.

இனிப்பு காதல்

அடிக்கடி தீண்டிக் கொண்டும், சீண் டிக் கொண்டும் இருப்பார்கள் சில காதலர்கள். பெரும்பாலும் சீண்டல் கள் எல்லைமீறும். இருந்தாலும் ஒருவரை ஒருவர் தடுப்பதில்லை. அந்த சீண்டலை அனுமதிக்கி றீர்கள்.

– இப்படிப்பட்ட காதலராக நீங்கள் இருந்தால்?

இதனை `இனிப்பு காதல்’ என்று வகைப்படுத்துகிறார்கள் ஆய்வாள ர்கள். இவர்களுக்குள் ஆழமான காத ல் உணர்வு இருக்கும். அதிக உணர் ச்சி கொண்டவராகவும், கொஞ்சம் கூச்சம் உடையவராகவும் இருப்பார் கள். இவர்கள் காதலில் காமம் கலந் திருப்பதால், ஒருவ ரின் தீண்டலை இன்னொருவர் தடுக்கமாட்டார். இவ ர்களுக்குள் தன்னைப்பற்றிய உய ர்வான எண்ணமும், சில ஒளிவு மறைவு ரகசியங்களும் இருக்கும். ஆனால் காதலை கடைசிவரை விட் டுக் கொடுக்க மாட்டார்கள்.

வெற்றிக்காதல்

காதலி போனில் பேசும்போது லேசாக இருமும் சத்தம் கேட்டால் போதும் உடனே ஆபீசுக்கு விடு முறை எடுத்துவிட்டு காதலி யை நேரில் பார்க்க கிளம்பி விடுகிறீர்களா? அவள் விளை யாட்டுக்காக `உடனே பார்க்க வேண்டும் போலிருக்கிறது வரு வாயா?’ என்றால் என்ன வேலை யிருந்தாலும் ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டு அவளிடம் போய் ஆஜராகி விடுகிறீர்களா? இது போன்ற ஆழ்ந்த காதலை அவ ளும் உங்களிடம் வைத்திருக்கிறாளா?

உங்கள் காதல் மற்றவர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு சக்தி வாய் ந்தது. இதனை `வெற்றிக் காதல்’ என்கிறார்கள், ஆய்வாளர்கள். இப் படிப்பட்ட காதலர்கள் ஒருவருக் கொருவர் எதையும் விட்டுக்கொ டுக்க தயாராக இருப்பார்கள். பிரச்சினை என்றால் தன்னையே தர வும் தயாராவார்கள்.

சரி.. இதில் உங்கள் காதல் (காதலி) எந்த வகை என்று நீங்கள் மட்டும் தெரிந்து கொண்டால் போதும்!

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply