Monday, March 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கலைஞர் வழியில் ஜெயலலிதா. . .

மாற்றம் ஒன்றுதான் இந்த உலகத்தில் மாறாதது என்பார்கள். ஆனால், அந்த மாற்றம் கூட ஒரு நாள் மாறிவிடும். மாறவே மாறா த பெருமை எனக்கு மட்டும்தான் என்று இந்த உலகிற்கு பறை சாற்றி உள்ளார் தைரியலட்சுமி ஜெயலலிதா.

இரண்டு நாட்களுக்கு முன்புதான் கூட்டணி என்பது சட்டமன்றத் தேர்தலுக்கும், நாடா ளுமன்றத்தேர்தலுக்கும் மட்டும் தான், உள் ளாட்சி தேர்தலுக்கில்லை என்று சொல்லி காங்கிரஸை கழட்டி விட்டார் கலைஞர். இப்போது ஜெயலலிதாவும் கலைஞரை பின்பற்றி கூட்டணி கட்சி களுக்கு ஆப்படி த்துள்ளார்.

ஆம்….தமிழ்நாட்டில் நடக்கவிருக்கும் உள் ளாட்சி தேர்தலில் 10 மாநகராட்சிக்கும் தன்னிச்சையாக மேயர் வேட்பாளர்களை அறிவித்து கூட்டணியி னருக்கு குறிப்பாக விஜயகாந்திற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித் துள்ளார் ஜெ. இப்படி கூட்டணி கட்சியினரை அவமதிப்பதும், அசிங் கப்படுத்துவதும் ஜெ.,க்கு ஒன்றும் புதிதல்ல… அப்படி செய்வது அவருக்கு அல்வா சாப்பிடுவது போல….

கடந்த சட்டமன்றத்தேர்தலின் போதே கூட்டணி கட்சிகளை ஆலோ சிக்காமலேயே வேட்பாளர்களை அறிவித்தார் ஜெ., இதனால் கடுப் பான கூட்டணி கட்சிகள் விஜயகாந்த் தலைமையில் ஒன்றுகூடி ஜெயாவுக்கு அதிர்ச்சி அளித்தனர். இதனை தன் ஆளுமைக்கு கிடைத்த அவமானமாக கருதிய ஜெ., அதை வெளிக்காட்டிக் கொள் ளாமல், தான் முதல்வராக வேண்டும் என்ற நிர்பந்தத்தால் கொஞ்சம் இறங்கி வந்தார். (கவனிக்க…பணிந்தோ, பயந்தோ அல்ல கொஞ்சம் இறங்கி வந்தார் அவ்வளவுதான்).

கூட்டணி கட்சியினர் கேட்ட தொகுதிகளை ஒதுக்கினார். ஆனால், அப்போதே முடிவு செய்திருப்பார் போல…இவர்களை பழிவாங்க வேண்டுமென்று…இப்போது 10 மாநகராட்சிகளுக்கும் மேயர் வேட்பாளர்களை அறிவித்ததன் மூலம் பழி தீர்த்து கொண்டுள்ளார்.

கடந்த சட்டசபை தேர்தலைப்போல இந்தமுறை  இறங்கிவருவாரா என்றால் சந்தேகமே..கடந்த சட்டமன்றத்தேர்தலின் போதாவது தான் முதல்வராக வேண்டுமென்ற நிர்பந்தம் இருந்தது ஜெயாவி ற்கு… அதன் பிறகு  அசுர பலத்துடன் ஆட்சிக்கு வந்திருக்கும் அவ ருக்கு அப்படி இறங்கி வருமளவிற்கு எந்த நிர்பந்தமும் இப்போது இருப்ப தாக தெரியவில்லை. அதனால் இற ங்கி வரும் சாத்திய கூறு கள் குறை வாகவே இருப்பதாக தோன்றுகிறது.

இப்படி தன்னிச்சையாக வேட்பாளர்க ளை அறிவித்ததன்மூலம் அதிகம் அதிர்ச்சிக்குள்ளாகி இருப்பது விஜய காந்தாகத்தான் இருக்கக்கூடும். பாவ ம் அவர்தான் இந்த உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்துக் கொண் டு ஜெயா அரசை விமர்சனம் செய் யாமல் குழந்தை இப்போதுதானே பிறந்துள்ளது. குழந்தை நடக்க ஆர ம்பிக் கட்டும். பார்க்கலாம்.

அதுவரை பொறுத்திருப்போம் என்று ம், இன்னும் ஆறு மாதம் கழிக்கட்டும் அப்போது பார்க்கலாம் என்றெ ல்லாம் சப்பை கட்டு கட்டிவந்தார்.இப்போது நம்பவைத்து கழுத் தறுக்க பட்டிருக்கிறார். அரசியலில் ஜெயாவை விட சீனியரான வைகோவையே கழுத்த றுத்த ஜெயாவிற்க்கு விஜயகாந்தை கழு த்தறுப்பது அவ்வளவு கஸ்டமானதாக இருக்கவில்லை. ஜெயா விற்கு விஜயகாந்தெ ல்லாம்  ஜுஜுபி.

( ரெண்டுல ஒண்ணு பார்த்திட வேண்டியதுதான்)

இது விஜயகாந்திற்கு ஒருவகையில் நல்லதுதான். இதே கூட்ட ணியில் அவர் நீடித்திருந்தால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 5 அல்லது 6 சீட்களையும், அடுத்த சட்டமன்ற தேர்தலில் 40 அல்லது 45 சீட் வாங்கிக்கொண்டு ஜெயாவை முன்னிறுத்தி அவர் முதல்வ ராக பாடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கும். இந்த கூட்ட ணியை விட்டு விலகினால், மீதமிருக்கும் நாலரை வருட கால இடைவெளியில் தன் கட்சியை இன்னும் அதிகமாக வளர்த்து, தானும் முதல்வர் வேட்பாளராக மாறி ஜெயாவுக்கு தலைவலியை கொடுக்கலாம்.

இனி, சட்டசபையிலிருந்து வெளி நடப்பு செய்வதற்கும், ஜெயா வின் அராஜகம் ஒழிக என்று கோஷமிடுவதற்கும் தி.மு.க., எம்.எல். ஏ-க்களுக்கு  துணையாக நிறைய எம்.எல்.ஏ.,க்கள் கிடைப் பார்கள். குழந்தை நடக்கட்டும் என்று காத்திருந்த விஜயகாந்த் குழந்தை நடக்கும் முன்பே அறிக்கைப்போர் தொடுக்கலாம். தமிழ் நாட்டு அரசியலில் இனி சீரியசிற்கும், காமெடிக்கும் பஞ்ச மிருக்காது.

செய்தி – அரசர் குளத்தான்

Leave a Reply

%d bloggers like this: