Tuesday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆயுள் அதிகரிக்க . . .

தினமும், ஒரு மணி நேரம் தொடர்ந்து, “டிவி’ பார்த்தால், ஒரு வரது ஆயுளில், 22 நிமி டங்கள் குறைந்து விடும். மா றாக, தினமும், 15 நிமிட ங்கள் உடற்பயிற்சி செய்தா ல், அவரது ஆயுள், மூன்று ஆ ண்டுகள் கூடும் என ஆய் வில் தெரிய வந்துள்ளது.

மனித வாழ்க்கையில் பொழுதுபோக்கு சாதனங்களில் மிகப் பெரிய இடத்தை பிடித்துள்ளது, “டிவி!’

“டிவி’ நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்ப்பது எவ்வளவு ஆபத்து என்பது, தொடர்ந்து வெளிவரும் ஆய்வுகள்மூலம் புரிந்து கொள் ள இயலும்.

ஆஸ்திரேலியாவில் உள்ள புக ழ்பெற்ற குயின்ஸ்லேண்ட் பல் கலைக் கழகத்தில் மக்கள் தொகை நலன் குறித்தான பள்ளி ஆய்வு மாணவர்கள், 2000ம் ஆண்டு, 11 ஆயிரம் பேரிடம், “டிவி’ பார்ப்பது குறித்த ஆய்வு நடத்தினர். இவர்கள் அனைவரும், 25 வயதுக்கு மேற்பட்டவர்கள். இ ந்த ஆய்வின் தொடர்ச்சியாக, எட்டு ஆண்டுகளுக்குப் பின் மீண் டும் ஆய்வு நடத்தினர்.

ஆய்வில் இருந்து அவர்கள் எட்டு ஆண்டுகளில், 9.8 பில்லி யன் மணி நேரம், “டிவி’ பார்த் துள்ளதும், அதன் மூலம், இரண் டு லட்சத்து, 86 ஆயிரம் மணி நேரம் அவர்களது ஆயுள் குறை ந்து விட்டதும் தெரிந்தது. இவ் வாறு ஒரு மணி நேரம், “டிவி’ பார்த் ததால், 22 நிமிடங்கள் ஆயுள் குறைந்துள்ளது கண்ட றியப்பட்டது. இது ஒரு மணி நேரத்தில், இரண்டு சிகரெ ட்டுக்கள் புகை த்தால் ஏற்படும் பின் விளைவிற்கு ஒப்பானது.

மேலும், அவர்களுக்கு இதய நோய், நீரிழிவு, உடல் எடை அதி க ரித்தல் போன்ற பல்வேறு உட ல் பாதிப்புக்கள் ஏற்பட்டிருப்பதும் தெரிந்தது. இது தவிர, உரிய கால த்திற்கு முன்பாகவே இறப்பதற் கான வாய்ப்பு, 8 சதவீதம் அதிகரி ப்பதும் தெரிய வந்தது. ஆய்வு நட த்தப்பட்ட ஆண்டுகளுக்கு இடையே, புகை பிடிப்பவ ர்கள் எண் ணிக்கை சரிவு அடைந்துள்ளதும், “டிவி’ பார்ப்பவ ர்களின் எண் ணிக்கை குறையவே இல்லை என்பதும் தெரிய வந்தது.

ஆஸ்திரேலியாவில் அப்படிப்பட்ட ஆய்வு என்றால், தைவான் நாட்டின் தேசிய ஆரோக்கிய ஆய்வு மைய ஆராய்ச்சியாளர் சீ பாங்க் வென் கூறுகையில், “நானும், என் சக மா ணவர்களும், 13 ஆண்டுகளில் நான் கு லட்சத்து, 16 ஆயிரம் பேரை தீவி ரமாக ஆய்வு செய்தோம். ஒவ் வொரு ஆண்டும் அவர்களது உட ல் நலம் பரிசோதிக்கப்பட்டது.

“இதில், ஆண், பெண், குழந்தைகள், முதியவர்கள், ஆரோக்கிய மானவர்கள், உடல்நலம் குன்றியவர்கள் என பலரையும் கண் காணித்தோம். அதன் அடிப்படையில் தினமும், 15 நிமிடங்கள் சுறுசுறுப்பாக நடை பயணம் செய்தால், அவர்களது ஆயுள் மூன் று ஆண்டுகள் அதிகரிப்பது தெரிய வந்துள்ளது…’ என்றார்.
***
அ. சாத்தப்பன்

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply