Tuesday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பருப்பு, எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை உயர்த்த நடவடிக்கை

தற்போதைய நிலையில், உள்நாட்டில், பருப்பு வகைகள் மற் றும் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி, தே வையை விட குறை வாக உள்ளது. இவ் விரு பிரிவுகளிலும் தன்னிறைவு காணும் வகையில், தீவிர நடவடிக்கை எடுக்க மத் திய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டின் வேளாண் உற்பத்தி குறித்த ஆய்வுக் கூட் டம், பிரதமர் அலுவலக முதன்மை செய லர் டி.கே.ஏ. நாயர் தலைமையில் நடை பெற்றது. இதில் வேளாண் துறை உள்பட முக்கிய ஆறு துறை களின் செயலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், இர ண்டாவது பசுமை புரட்சி திட்டத்தின் கீழ், பருப்பு வகைகள் மற் றும் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை அதிகரிக்க தீவிர நட வடிக்கை எடுக்க வேண்டும் என, முடிவு செய்யப்பட்டது. பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்து க்கள் உற்பத்தியை அதிக ரிப்பதற்கான திட்டங்களை ஒ ரு மாதத்திற்குள் அளிக்குமாறு வேளாண் அமைச்சக செயல ரை, பிரதமர் அலுவலக முத ன்மை செயலர் நாயர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், அதி க மக‹ல் தரக்கூடிய பருப்பு மற்றும் எண் ணெய் வித்துக் களை, இரண்டு ஆண்டுகளு க்குள் உருவாக்கு மாறு இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக மும் கேட்டுக் கொள்ளப்பட் டுள்ளது. தற்போதைய நிலையில், நெல், கோதுமை, கரும்பு உள்ளிட்ட பல அத்யா வசிய உணவு தானியங்களின் உற்பத்தி, சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது. நடப்பு வேளாண் பரு வத்திலும், மேற்கண்ட உணவு தானியங்களின் உற்பத்தி, நிர்ண யிக்கப்பட்டுள்ள இலக்கை எட்டும் என எதிர்பார்க்கப்படு கிறது. உள்நாட்டில், பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி, தேவையை விட குறைவாக உள்ளது. இத னால், அரசு, மேற்கண்ட உணவு தானியங்களை அதிகளவில், இறக்கு மதி செய்து கொள்ள வேண்டியுள்ளது. எனவே, இவற் றின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், தீவிர கவனம் செலுத்தி வருகிறது. கடந்தாண்டு, நம் நாட்டில் சாதனை அள வாக 1.81 கோடி டன் பருப்பு வகைகள் உற்பத்தி செய்யப்பட்டன. எனினும் இது, நாட்டின் பருப்பு வகைகளுக்கான தேவையை விட 25 லட்சம் டன் குறைவு என்பது குறிப் பிடத்தக்கது. இதனால், பருப்பு வகைக ளை தொடர்ந்து இறக்குமதி செய்யும் ‹ ழல் உள்ளது. எனினும், பருப்பு உற்பத்தி அதிகரித்து வருவதால், இறக்குமதி குறைந்து வருகிறது. செ ன்ற 2010-11ம் நிதியாண்டில், நாட்டின் பருப்பு வகைகள் இறக் குமதி, 26 சதவீதம் சரிவடைந்து, 26 லட்சம் டன்னாக குறைந் துள்ளது. இது, இதற்கு முந்தைய 2009-10ம் நிதியாண்டில், 35 லட்சம் டன்னாக இருந்தது. பருப்பு இறக்குமதியை மேலும் குறைக்கவும், உள் நாட்டில் பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் தன்னிறைவு காண்பதற்கும் மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இதன்படி, பருப்பு வகைகளை அதிகளவில் சாகுபடி செய்து வரும், 60 ஆயிர த்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு ள்ளன. இக்கிராமங் களில் பருப்பு வகைகளின் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற் காக மத்திய அரசு, 300 கோ டி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதே போன்று, எண்ணெய் வித்துக்களின் உற்பத் தியை அதிகரிக்கவும், இதே அளவிற்கான கிராமங்களில், மேம் பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வரும் 2017ம் ஆண் டில், பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் உற்பத் தியில் இந்தியா தன்னிறைவு காண வேண்டும் என்பதே மத்திய அர சின் குறிக்கோ ளாக உள்ளது. தானிய உற்பத்தி அதிகரிக்கும் நிலையில், அவற்றை பாதுகாப்பதற்கான, சேமிப்பு கிடங்கு வசதிகள் போதிய அளவிற்கு இல்லை என்ற நிலையும் தற் போது உள்ளது. இதை நிவர்த்தி செய்யும் வகையில், மத்திய அரசின் முகமை அமைப்பாக செயல்படும், இந்திய உணவுக் கழகம், 19 மாநி லங்களில், 1.50 கோடி டன் தானியங்களை சேமித்து வைக்கும் வகையில், கிடங்கு வசதிகளை உருவா க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதத் திற்குள், 40 லட்சம் டன் உணவு தானியங்களை சேமித்து வைக் கும் வகையில், கிடங்கு வசதிகளை ஏற்படுத்துமாறு இந்திய உணவு கழகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நடப்பு 11வது ஐந்தா ண்டு (2007-12)திட்ட காலத்தில், தேசிய உணவு பாதுகாப்பு திட் டத்தின்கீழ் மேற்கொள்ளப் பட்ட நடவடிக்கைகளால், கூடுதலா க 2 கோடி டன் உணவுப் பொருள்கள் உற்பத்தி செய்யப்பட் டுள்ளது என்பது குறிப்பிட த்தக்கது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply