Sunday, August 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ராகிங் என்றால் என்ன? அதிலிருந்து தப்பிக்க வழிகள் என்ன?

ராகிங் – இந்த வார்த்தை கல்லூரி மாணவர்கள் மத்தியில் மிக வும் பிரபலம். அதேசமயம் இந்த வார்த்தை யைக் கேட்டு மிரளா த மாணவர்களே இல்லை என் றும் கூற லாம்.

அந்தளவிற்கு, ராகிங் கலாச்சார த்தின் மூலம் மாணவர் சமூகம் சீரழிந்து கிடக்கிறது. இதனா ல், தற்கொலை செய்துகொண்டவர்கள் மற் றும் கொல்லப்பட்டவர் களின் பட்டியல்களும் உள்ளன.

ஏறக்குறைய அனைத்து மாணவ -மாணவிகளும், இந்த ராகிங் கொடுமையிலிருந்து எப்படி யாவது தப்பித்துவிட மாட்டோ மா? என்றே விரும்புகின்றனர். ஆனால் பலருக்கு அதிலிருந்து தப்பிக்கும் வழிமுறைகள் தெரி வதில்லை.

ராகிங் என்றால் என்ன? அதை செய்வதால் கிடைக்கும் தண்ட னைகள் என்ன? மற்றும் அவற்றிலிருந்து தப்பிக்க எங்கே உதவியை நாடலாம் போன்ற விள க்கங்கள் இங்கே வழங்கப்பட்டுள்ள ன. இவற்றைப் படித்து மாண வர்கள் பயன் பெறலாம்.

எவையெல்லாம் கேலிவதை செய ல்பாடுகள்?

* மனம் மற்றும் உடல்ரீதியாக பாலி யல் தொல்லை கொடுத்தல்

* வாய்மொழி பேசி தொந்தரவு கொ டுத்தல்

* தவறாக நடந்துகொள்ளுதல்

* அச்சுறுத்தும் ரீதியில் மிரட்டுதல்

* கல்வி நிறுவன நடவடிக்கைகளிலிருந்து தடை செய்தல்

* கண்ணியக் குறைவாய் நடத்து தல்

* பொருளாதார ரீதியாக சுரண்டு தல்

* பலப் பிரயோகம் மூலம் துன்புறு த்தல்

இத்தகைய செயல்களே பொதுவா க ராகிங் நடவடிக்கைகளாக கொ ள்ளப்படுகின்றன.

கேலிவதை நடவடிக்கையில் ஈடு படுபவருக்கு கிடைக்கும் தண்ட னைகள்

* கல்வி நிறுவனத்திலிருந்து நீக்கப்படுதல்

* கல்லூரி விடுதி மற்றும் உணவகத்திலி ருந்து தடை செய்யப் படுத ல்

* சம்பந்தப்பட்ட மாணவன் அல்லது மாண வியின் கல்வி உதவித்தொகையை திரு ம்பப் பெறுதல்

* தேர்வு எழுதுவதிலிருந்து தடை செய்தல்

* வேறு எந்த கல்வி நிறுவனத்திலும் சேர முடியாமல் தடை செய்த ல்

* கிரிமினல் குற்ற அடிப்படை யில் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாதல்

இதுபோன்ற பலவிதமான தண்டனைகள் ராகிங் நடவடி க்கைகளில் ஈடுபடுவோருக் கு வழங்கப்படுகின்றன. இதன் மூலம் சம்பந்தப்பட்டவரின் எதிர்காலமே முற்றிலும் பா ழாகலாம். இந்த வகையில் தண்டிக்கப்பட்டால், நீதி மன்றங் களின் மூலம் தப்பிக்க நினை த்தாலும் அது மிகவும் கடினம் என்பதை மாணவர்கள் நி னைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

புகார் தெரிவித்தல்

இந்த ராகிங் கொடுமை குறித்து எல்லா நாளும், எந்த நேரத் திலும் 1800-180-5522 அல்லது 155222 என்ற எண்களில் இலவ சமாக தொடர்பு கொண்டு புகார் தெரி விக்கலாம்.

மாணவ-மாணவிகளே, நாகரீகத்திற்கு ஒவ்வாத ராகிங் என்ற கொடும் பழக்கத்திலிருந்து விடுபட இப்போதே உறுதியெடுத் துக்கொள்வீர்!

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: