அம்பாளுக்குரிய பண்டிகைகள் எவ்வளவோ இருந்தாளும், அவற் றுள் முக்கியமானது ஒன்பது நா ட்கள் கொண்டாடப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாதான்.முக்கியமாக பார்க்க போனால் ஒரு வருஷத்தில் நா ன்கு நவராத்திரிகள் உண்டு அவ ற்றில் புரட்டாசி மாதம் அமாவா சை அடுத்த நாள் வரும் நவ ராத்திரியை எல்லோரும் கொண் டாடுகிறார்கள். ஆஷாட நவரா த்திரி ஆடி மாத த்தில் வரும் நவராத்திரியாகும். புரட்டாசி மாதத்தில் சரத்காலம் என்று கூறுவர்.
இந்த சரத்காலத்தில் வரும் நவராத்திரியை சாரதா நவராத்திரி சிறப்பாக கொண்டாடுவார்கள். இந்த ஒன்பது நாட்களுடன் ஒரு நா ளைச் கூடுதலாகச் சேர்த்து தசராகக் கொண்டாடப்படுகிற து. தசம் என்றால் பத்து அத்து டன் ஒரு இரவைச் சேர்த்து (தச+ரா) பத்துநாள் திருவிழா வாக கொண்டாடுகிறார்கள். இந் த பண்டிகை மைசூரி லுள்ள சாமுண்டேஸ்வரி அம்பிகை க்கு சிறப்பாக விழா கொண்டா டப்படுகிறது. சரத் காலத்தின் முக்கிய மாதமாகிய புரட்டாசி மாதத்தின் வளர் பிறையில் பிரதமை திதியில் ஆரம்பித்து ஒன்பது திதியுடன் பத்தாவது திதியான தசமி திதியடன் நிறைவுபெறுகிறது நவராத்திரி விழா.
நவராத்திரி விழா இரவு நேரத்தில் தான் பூஜை செய்யப்படும். இந்த பூஜை தேவர்கள் செய்யப்படுவ தாக கருதப்பட்டு இரவில் நவ ராத் திரியை வழிபடுவார்கள். சரத்காலம் என்று மேலே குறிப் பிட்டுள்ளேன்.
வால்மீகி இராமாயணத்தில் புரட்டாசியில் வரும் தசமி (விஜய தசமி) அன்று இராமன், இராவணனுடன் போர் செய்ய உகந்த நாள் என்று அன்று போ ருக்கு புறப்பட்டதாக இருக்கிறது. பத்தாவது நாளான விஐய தசமி அன்று புதிய கல்வி கற்பதைத் தொடங்குவார்கள். பாண்டவ ர்கள் அஞ்ஞானவாசம் முடிந்து அர்ச்சுனன்தான்
ஒரு ஆண்டு காலமாக கட்டி வைத் திருந்த யுதங்களை எல்லாம் விஜய தசமி அன்று மீண்டும் எடுத்து உயி ர்ப்பித்துகொண்டான்.
சக்தி வழிபாட்டுகுரிய விரதங்களில் வெள்ளிக்கிழமை விரதம், பெளர் ணமி விரதம், நவராத்திரி விரதம் என்பன மிகவும் முக்கிய மானவை.
நவராத்திரி என்பது விரதமிருந்து கொ ண்டாடப்படுகிறது.
சிவராத்திரி: வழிபடத் தகுந்த ஒரு ராத்திரி சிவராத்திரி. சக்தியை வழிபடத் தகுந்த ஒன்பது ராத்திரி நவராத்திரி. நவம் என்பது ஒன்பது.
வீட்டில் பத்து நாட்கள் கொண்டாடப் படும் விழாவாக நவராத்திரி, தவிர வே று விரத விழா இல்லை. வீட்டில் கொண் டாடப்படும் இந்த விழா வீடு என்ற கோ யிலுக்கு ஒரு ’பிரம்மோற்சவம்’ என்று கூட சொல்லாம்.
சித்திரை, புரட்டாசி ஆகிய இரண்டு மாத ங்களை யமனது கோரப் பற்கள் என்று சொல்வார்கள். பிணிகள் உடலை துன் புறுத்தி, பிணித்து நலியும்படி செய்யும்.
சாதாரமாக, உயிரும் உடலும் தாங்கவே முடியாத பல துன்ப ங்களை இறைவன்
அருள்வதில்லை. துன்பங்கள் உடலுக்கு ஏற்படும்போது, அவற் றிலி ருந்து போக்குவாய் சக்தி வழிபாடு.
சக்தியைச் சித்திரை மாதத்தில் வழிபடுவது வசந்த நவராத்திரி எனப்படும். புரட்டாசி மாதத்தில் வழி படுவது பாத்ரபத நவராத்திரி அல்லது சாரதா நவராத்திரி எனப்படும். இவை இரண்டில்’சாரதா நவராத்திரி என்பது புகழ் பெற்றது; எல்லோரும் கொண் டாடடுவது;
தனிச் சிறப்புடையது.
நவராத்திரி வழிபாடு பெண்களுக்கே உரியது. எல்லா வயதுடைய, பருவத்தைச்சார்ந்த பெண்கள் நவரா த்திரி வழிபாட்டில் ஈடுபடலாம். நவராத்திரி வழிபாட்டால் பெண் குழந்தைகள் பெறுவது மகிழ்ச்சியின் பயன். கன்னிகள் பெறுவது திருமணப் பயன்.
சுமங்கலிகள் பெறுவது மாங்கலயப் பய ன். மூத்த சுமங்கலிகள் பெறுவது மன மகிழ்ச்சி, மன நிறைவு; எல்லோரும் பெறுவது பரி பூரண திருப்தி.
புரட்டாசி மாத வளர்பிறைப் பிரதமை யில் தொடங்கி விஜய தசமியில் நவ ராத்திரி முடிகிறது. முதல் ஒன்பது நாட் களில் முப்பெரும் தேவியரை வழி பட வேண்டும்.
முதல் மூன்று நாட்கள் துர்க்கையின் வழி பாடு.
இடை மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடு.
கடை மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு.
துர்க்கை: இவள் நெருப்பின் அழகு. ஆவேசப் பார்வை. வீரத் தின் தெய்வம். சிவபிரியை. இச்சா சக்தி. ”கொற்றவை ” , ”காளி” என்றும் குறிப்பிடுவர். வீரர்களின் தொடக்கத்திலும், முடிவிலும் வழிப்படும் தெய் வம். துர்க்கை, மகிஷன் என்ற அசுரனுடன் ஒன்பது இரவுகள் போரிட்டாள். இவையே ‘ நவ ராத்திரி ‘ எனப்படும்.
அவனை வதைத்த பத்தாம் நாள் ‘ விஜயதசமி’ [ விஜயம் மேலான வெற்றி][மகிஷாசுரமர்த்தினியின் திருக்கோலம் மாமல்லபுரத்தில் சிற்ப வடிவில் நாம்கண்டுள் ளோம்]
வங்காளத்தில் துர்க்கா பூஜை என்ற பெயரோடு கொண் டாடு கிறார்கள்.
நவதுர்க்கை: வன துர்க்கை, சூலினி துர்க்கை , ஜாதவே தோது ர்க்கை, ஜ்வாலா துர்க் கை, சாந்தி துர்க்கை சபரி துர்க் கை, தீப் துர்க்கை, சூரி துர்க்கை லவண துர்க்கை . இவர்கள் துர்க்கையின் அம்சங்கள்.
இலட்சுமி : இவள் மலரின் அழகு. அருள் பார்வையுடன் அழ காக விளங்குகிறாள்.
செல்வத்தின் தெய்வம். விஷ் ணு பிரியை. கிரியா சக்தி.
இலட்சுமி அமுதத்துடன் தோ ன்றியவள். அமுத மயமா னவள்.
பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் வீற்றிருக்கிறாள்.
இவளை நான்கு யானைகள் எப்போதும் நீராட்டுகிறது.
முக்கியமாக, இவள் செல்வ வளம் தந்து வறுமையை அக ற்றி அருள் புரிபவள். இவளு க்குத் தனிக் கோயில் இருக்கு மிடம் திருப்பதியிலுள்ள திருச் சானூர்.
அஷ்ட இலட்சுமி : ஆதி லட்சுமி, மாக இலட்சுமி, தன இலட்சுமி, தானிய இலட்சுமி , சந்தான இலட்சுமி, வீர இலட்சுமி, விஜய இலட்சுமி , கஜ இலட்சுமி . இவர்கள் இலட்சுமியின் அம் சங்கள்.
சரஸ்வதி : இவள் வைரத்தின் அழகு. அமைதிப் பார்வையுடன் அழகாகப் பிரகாசிக்கிறாள்.
கல்வியின் தெய்வம். பிரம்பிரியை. ஞான சக்தி.
தமிழ் நூல்கள் சரஸ்வதியை, ‘ற்றங்க ரை ச் சொற்கிழத்தி ‘ என்று குறிப்பிடுகி றது. இவளுக்குத் தனி கோயில் இருக் குமிடம் ஊர் கூத்தனூர். கம்பருக்காக கொட்டிக் கிழங்கு விற்றவள்.
சரஸ்வதி பூஜை : நவராத்திரியின் ஆறா வது, ஏழாவது நாளில் மூல நட்சத்திரம் உச்சமாக இருக்கும்போது, சரஸ்வதி யை வாகனம் செய்வது முறையாகும். இது தேவியின் அவதார நாள்.
சரஸ்வதி பூஜை சிரவணம் என்ற நட்சத்திரம் உச்சமாகும் நாளில் நிறைவு பெறுகிறது. சிரவணம் – திருவோணம் அன்றே விஜய தசமி.
சமுதாயத்தில் தொழில், புலமை என்ற இரண்டே பிரிவுகளில் அட ங்குகிறது.
ஒன்று புலமை ஞானம், இரண்டு தொழில் ஞானம்.
புலமை பெறுவ தும் ஒரு தொழி ல்தான். இது ஞானத்துடன் தொடர் புடையது.
எனவே, ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியைப் பூஜிப்பது சரஸ் வதி பூஜை.
நவராத்திரியின் எட்டாம் நாளை மகா அஷ்டமி என்றும், ஒன்பதாம் நாளை
மகா நவமி என்றும் குறிப்பிடுவது வழக் கம். இவை மேலான நாட் களாகும்.
விஜய தசமி: ஒன்பது நாட்கள் மகிஷா சுரனுடன் போரிட்ட தேவி , பத்தாம் நாள்
அவனை வென்றாள். இந்நாளே விஜயதசமி – வெற்றி தருகிற நாள்.
பல குழந்தைகள் கல்வியினை இன்றுதான் ஆரம்பிப்பார்கள். இன்று தொடங்கும் அனைத்து நற்காரியங் களும் வெற்றி தரும்.
அஷ்ட சரஸ்வதி: வாகீஸ்வரி, சித்ரே ஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கடசரஸ்வதி, நீலசரஸ்வதி, கினி சரஸ்வதி
ஒன்பது சக்திகள்: முப்பெரும் சக்திக ளில், ஒவ்வொரு சக்திக்கும் மும்மூன்று அம்சங்கள் சிறப்பாக உள்ளன.
துர்க்கை: 1. மகேசுவரி, 2. கெளமாரி , 3. வராகி.
இலட்சுமி: 4. மாகலெட்சுமி 5. வைஷ்ணவி 6. இந்திராணி.
சரஸ்வதி : 7. சரஸ்வதி 8. நாரசிம்மி , 9. சாமுண்டி.
நவராத்திரியின் போது இந்த ஒன்பது தேவியர்களையும் முறை
யாக வழிபடுகிறோம்.
ஒரு தேவியை முதன்மையாகவு ம், மற்றவர்களைப் பரிவார தெய் வங்களாகவும் கொள்ள வேண் டும். நவராத்திரியில் கன்னி வழி பாடு என்பது ஒரு வகை.
நவராத்திரியின் போது ஒவ்வொ ரு நாளும் ஒவ்வொரு கன்னியை ஒவ்வொரு தேவியாக பாவனை செய்து வழிபடுவது ஒரு முறை.
இதனால், நவராத்திரி வழிபாட்டில் மிகப் பலகன்னியர்களும், அவர்க ளின் குடும்பத்தாரும் ஈடுபடுத்தப் படுகிறார்கள்.
இவ்வாறு வழிபாட்டில் பலர் பங்கேற்பது என்பது நவராத்திரியின் விழாவின் குறிக்கோள்களில் ஒன்றாகும்.
எழில் நிலாவில். . .
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்