Friday, March 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பேஸ்புக்கில் குறிப்பிட்ட ஒருவரது அனைத்து போஸ்ட்களையும் ஒரே இடத்தில் படிக்க…

இணைய உலகில் இன்று சமூக வலை தள ங்கள் இன்று மிகப்பெரிய இடத்தை பிடித் துவிட்டன. சில வருடங்களுக்கு முன்பு வரை இணைய தளத்தில் இருவர் பேசிக் கொள்ள மெயில்கள் பயன்பட்டன. ஆனா ல் இன்று நிலமை வேறு. பெரும்பான்மை யோர் மூக இணைய தளங்களே தஞ்ச மென்று கிடக்கின் றனர்.

ச்மூக இணையதளங்களில் பேஸ்புக்கின் பங்கு மிகப்பெரியது. சிலர் இணைய தளம் பயன்படுத்துவது, பேஸ்புக் பயன்படுத்து வதற்காக தான் என்றாகிவிட்டது. சிலர் பேஸ்புக்கிற்கு அடிமை யாகிவிட்டனர் என் று கூட சொல்லலாம் 🙂

சில நிறுவனங்கள் வே லைக்கு ஆட்களை தேர் வு செய்யும்முன், வே லைக்கு விண்ணப்பித்த வரை பற்றி உண்மை யாக, முழுமையாக தெரி ந்துகொள்ளும் நோக்கில் அவரின் பேஸ்புக் புரொபைலை பார்க்கி ன்றனர். இப்பொழுதெல்லாம் பெண்ணுக்கு மாப்பிளை மாப்பிள் ளைக்கு பெண் பார்க்கும் போது கூட சிலர் இதையே பின்பற்றுகின் றனர்.

இப்படி குறிப்பிட்ட ஒருவரின் போஸ்ட்களை அவரின் புரொபை லில் சென்று தேடிப்பிடித்து படிப்பது சற்று சிரமமாகவே இருந்து வந்தது. அந்த சிரமத்தை போக்க வந்துள்ள இணையதளமே FB TIME MACHINE. இதன் இணையதள முகவரி http://fbtimemachine.appspot.com

நீங்கள் செய்ய வேண்டிய தெ ல்லாம் இந்த இணையதளத் திற்கு சென்று, உங்கள் பேஸ் புக் அக்கவுண்ட் மூலம் லாக்- இன் செய்து கொள்ள வேண் டும். திறந்த பின்பு எந்த நண் பரின் அனைத்து பதிவுகளை யும் படிக்க வே ண்டுமோ, அவரின் பெயரை குறிப்பிட வும். உடனே அவரின் “அனை த்து” பதிவுகளை யும் காட்டும். இது பேஸ் புக் பிரியர்க ளுக்கும், பேஸ்புக் பயன்படுத்தும் “குறிப்பி ட்ட ஒருவரை” பற்றி தெரிந்து கொள்ள விரும்புவர்களுக்கும் பயன்படும் ஒரு இணையதளம் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: