Friday, August 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தமிழக அரசு விழிக்குமா?

கேரளாவில் வயல்கள் அழிவதை தடுக்க, அம்மாநில அரசு எடுத்த சாது ரிய நடவடிக்கையால் விளை நிலங்கள் காப் பாற்றப்பட்டுள்ளது. இதை பார்த்தாவது தமி ழக அரசு அதிவேக நடவடிக்கை எடுக்க வே ண்டும் என்று விவசாயிகள் விரும்புகின்ற னர்.

ரியல் எஸ்டேட் கோடிக் கணக்கில் பணம் கொழிக்கும் தொழில். ஆனால் இந்த தொழில் நாட்டின் முதுகெலும் பான விவசாயத்தை வேரோடு அழித் துக்கொண்டிருக்கிறது. நல்ல காற் றோட்டம், தண்ணீர், போக்குவரத்து வசதிகள் இப்படிப்பட்ட இடங்களில் தான் மக்கள் வீடு வைக்க விரும்புவர். இதை பயன்படுத்திதான் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் வயல்க ளை அடிமாட்டு விலைக்கு வாங்கி அதில் மண் நிரப்பி பிளாட்டுகளாக பிரித்து கொள்ளை லாபம் சம்பாதிக் கின்றனர். பிற நிலங்களை விட வய ல்களை பிளாட் ஆக்குவதால் 25 முத ல் 100 மடங்கு வரை லாபம் கிடைக்கி றது. விவசாயத்தில் பல சிரமங்கள் உள்ளதால் விவசாயிகளும் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி விலைக்கு கொடுத்து விடுகின்றனர். இதன் கார ணமாக கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயம் செய்திருந்த நிலப் பரப்பு, தற்போது மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகி விட் டது.

தமிழகத்தை பொறுத்த வரை ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்த மாவ ட்டத்தின் நெல் தேவையை 75 சதவீ தம் பூர்த்தி செய்யும் அளவு வயல்கள் இருந்தன. ஆனால் இன்று 25 சதவீத தேவையை கூட பூர்த்தி செய்ய முடி யாத நிலையில் டெல்டா மாவட்டங் களையும், வெளி மாநிலங் களையும் எதிர்பார்த்திருக்க வேண்டிய நிலைக் கு பெரும்பாலான மாவட் டங்கள் தள் ளப்பட்டு விட்டன. இப்படி வயல் வெ ளிகள் வீட்டு மனை களாக மாறுவத ற்கு அரசியல்வாதிகளும் ஒரு முக் கிய காரணமாக இரு ந்து வருகின்றனர்.

பரப்பளவில் சிறிய மாநிலமான கேரளாவிலும் வயல்வெளிகளில் வீடு கள் முளைக்க தொடங்கின. இதனால் விழித்தெழுந்த அப்போதய அச்சுதா னந்தன் அரசு 2008ம் ஆண்டு “தண்ணீர் தடை பாதுகாப்புச் சட்டம்’ என்ற சட்ட த்தை இயற்றியது. இந்த சட்டம் மூலம் தண்ணீர் பாய்ந்து செல்லும் எந்த பூமியி லும், எந்த வயலிலும் வீடு வைக்க முடி யாது. அதற்கு உள்ளாட்சியின் அனுமதி கிடைக்காது. இந்த சட்டத்தில் சில வில க்கு அளிக்கப்பட்டிருந்தது.

அதாவது ஒருவருக்கு ஐந்து சென்ட் வயல் மட்டும் இருக்கும். ஆனால் அவருக்கு வீடு இருக்காது. அப்படிப்பட்டவர் அந்த வயலில் வீடு கட்ட லாம். அவ்வாறு கட்ட வேண்டுமெனில் அந்த வயலுக்கு உட்பட்ட தாலுகாவில் எங்கும் அவ ருக்கோ, மனைவிக்கோ, மகன், மகளுக்கோ வீடு இருக்க கூடாது. அவ்வாறு வீடு இல்லா மல் இருப்பதை அந்த பகுதி ஆர் .டி.ஓ. தலை மையிலான கமிட்டி உறுதி செய்ய வேண்டும். இந்த கமிட்டியில் உள்ளாட்சி மற்றும் விவசாய பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளார்கள். ஆனால் இந்த கமிட்டி கூடி எவருக்கும் வயல் வெளியில் வீடு கட்ட இதுவரை அனுமதி வழங்கியதில்லை.

இந்த கமிட்டி வயல்வெளிகளில் வீடு கட்ட அனுமதி வழங்க கூடாது என் று கூறி விவசாயிகள் சார்பில் கேரள ஐகோர்ட்டில் தடை உத்தரவு பெறப்ப ட்டுள்ளதால், வயல்வெளிகளில் வீடு என்பது கேரளாவில் நடக்காத காரி யமாக மாறிவிட்டது. வயலை ஒட்டி உள்ள பகுதிகளில் பல நீண்ட ஆண்டு களுக்கு முன்னர் தென்னை போன்ற மர ங்கள் நட்டு வைத்தி ருப்பர். இதை “கரைபூமி’ என்று அழைப்பது உண்டு. இங்கு வீடு கட்ட இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனா ல் இந்த கரைபூமி கிராம ரிக்கார்டுகளில் வயல் என்று குறிப்பிட்டிருந் தால் அங்கும் வீடு கட்ட அனுமதி கிடைக்காது.இந்த சட்டம் காரணமாக கேரளாவில் ரியல் எஸ்டேட் வியா பாரம் வயல் வெளிகளுக்கு செல்ல தாதால் அங்கு விவசாயம் காப்பா ற்ப்பட்டுள்ளது. வீடுகள் மலைப் பிர தேசங்களிலும், காலி மனைகக ளில் மட்டுமே கட்டப்படுகிறது.

ஆனால் தமிழ்நாட்டில் அரசியல் வாதிகளே விவசாய நிலங்களை காலி செய்து கொண்டிருக்கிறனர். காந்தியின் கனவு கிராமத்தை பற்றியே இருந்தது. தற்போதைய அரசியல் வாதிகளும் கிராமங்கள் பற்றி பேசுகின்றனர். ஆனால் கிராமங்களின் முதுகெலும்பான விவசாயத்தை அழித்துக் கொண்டிருக்கின்றனர். பல முன்னோடி திட்டங்களை அறி முகப்படுத்துவதில் ஆர்வம் காட்டு ம் முதல்வர், தமிழ்நாட்டில் வயல் வெளிகளில் வீடு கட்ட தடை விதிக் கவும், வயல் வெளிகளில் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்ய தடை விதிக்கவும் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று விவசாயிகளும், பொதுமக்களும், இயற்கை ஆர்வலர்களும் விரும்புகின்றனர்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: