சடை– பின்னலுடன் அமைந்த தலைமுடி; பின் னிய கூந்தல்; அடர்ந் த கூந்தல்; வேர்; விழுது; திருவாதிரை நாள்; மிதுன ராசி; வேதம் ஓதும் முறைகளுள் ஒன்று; கற்றை; ஆணியின் கொண்டை; அடைப்பு.
நெறி – வழி; சமயம்; வளைவு; சுருள்; விதி; ஒழுக்கம்; செய்யுள் நடை; குலம்; வழிவகை; ஆளுகை; குதிரை முதலியவற்றின் நடை; வீடு பேறு; கோவில்; தாழ்ப்பாள்; கண்மண்டைக் குழி; மனநிலை.
பிரிதல் – விட்டு விலகுதல்; கட்டவிழ்தல்; பகுக்கப்படுதல்; வேறு படுதல்; வகைப்படுதல்; வசூலித்தல்; நினைத்தல்.
ஈர்த்தல் – அறுத்தல்; இழுத்தல்; உரித்தல்; பிளத்தல்; எழுதுதல்.
அப்பு – நீர்; கடல்; பாதிரி என்னும் மரவகை; துடை; கடன்; தந்தை; வேலைக்காரன்; முட்டாள்; பூரா ட நாள்.
உருவம் – வடிவம்; உடல்; அழகு ; நிறம்; வேடம்; சிலை; கூறு; தெய்வத் திருமேனி.
கழை – கரும்பு; மூங்கில்; மூங்கில் குழாய்; வேய்ங்குழல்; ஓடக் கோல்; குத்துக்கோல்; தண்டு; புனர்பூச நாள்.
குமுக்கு – மொத்தம்; பெருந் தொ கை; கூட்டம்; உதவி; ரகசி யம்.
சினப்பு – கோபம்; புண் முதலிய வற்றின் வீக்கம்; வேனல்கட்டி; வெப்பத்தால் உடலில் உண்டா கும் வியர்க்குரு.
திரை–அலை; ஆறு; பூமி;கடல்; திரைச்சீலை; தோல் சுருக்கம்; வெற்றிலை; வெற்றிலைச் சுருள்; வைக்கோல்புரி; பஞ்சுச் சுருள்.
பகுதி – சொல்; முதனிலை; பகுப்பு; வேறுபாடு; திறை; வருவாய்; தன்மை; படை; மந்திரி; கூட்டம்; புத்தகத்தின் வரிசை எண்.
பார் – பரப்பு; தேரின் பரப்பு; வண்டியி ன் நெடுஞ்சட்டம்; பூமி; நாடு; பாறை; தடை; பருமை; வரம்பு; முத்து விளையும் திட்டு; புத்தன்; அடு க்கு; தடவை.
பெட்பு– பெருமை; விருப்பம்; அன்பு; தன்மை; பேணுகை; பாதுகாப்பு.
வயங்குதல் – ஒளிசெய்தல்; விளங் குதல்; தெளிதல்; தோன்றுதல்; மிகு தல்; நடத்தல்.
விடயம்– செயல்; புலன்; புலனால் அறியும் பொருள்; நூல் சொல் லும் பொருள்; காரணம்; நாடு; பயன்; சுக்கிலம்; பாக்குடன் கூடிய வெற்றிலை மடிப்பு; அடைக்கலம்.
கும்பி – குவியல்; சேறு; சுடுசாம்பல்; வயிறு; யானை; நரகம்; கும்ப ராசி; நெருப்பு; மண்பாண்டம்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்