Wednesday, September 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எமனை தொட்டுப்பார்த்து வந்த சிறுவன்: அதிர்ச்சி வீடியோ

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 13 வயதுப் பெடியன் சாவின் விளிம்பில் இருந்து உயிர் தப்பியுள்ளா ன். அதிசயமான இந் நிகழ்வை தொட ரூந்து நிலைய கமராக்கள் துல்லிய மாகப் படம் பிடித்துள்ளது. குறிப்பிட்ட சிறுவன் சம்பவ தினமன்று தொடரூந்து (ரெயில்) எடுப்பதற்காக சீட்டில் அமர்ந் து இருந்திருக்கிறான். அதுமட்டுமா சிக ரெட் ஒன்றையும் பிடித்த வண்ணம் இரு ந்திருக்கிறான். அவன் நின்ற பிளாட் போமுக்கு எதிரே இருந்த பிளட்போமி ல் தனக்கு தெரிந்த பெண் ஒருவர் வர வே அவரைப் பார்க்க தண்டவாளங்களை கடந்து அடுத்த பிளாட் போமுக்கு அவர் தாவ முற்பட்டுள்ளார். நடுத் தண்டவாளத்தில் வைத்து எதிரே ஒரு தொடரூந்து வருவதை அவர் அவதானித்து விட்டு தான் வந்த அதே பக்கத்துக்கு விரைந்து சென்று திரும்பவும் மேலே ஏற முயற்சி செய்துள்ளார். ஆனால் படுவேகமாக வந்த அந் த தொடரூந்து அவரை மோதியுள்ளது. அதிஷ்டவசமாக அவர் கீழே விழுந்து தப்பி விட்டார். ஒரு கையும் ஒரு காலும் உடைந்த நிலை யில் அவர் மீண்டும் தாவி மேலே ஏறி வந்து திரும்பவும் அமரும் காட்சி பாதுகாப்புக் கமராவில் பதிவாகியுள்ளது. சாவையே ஏமாற் றிய சிறுவனின் வீடியோவை பொலிசார் தற்போது வெளியிட்டுள் ளனர்.

புதிய உலகம் சென்றபோது…

Leave a Reply