Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முதல் முதலில் குழல் ஊதி உயிர்களுக்கு இன்பம் தந்தவர் முருகப் பெருமான்.

முதல் முதலில் குழல் ஊதி உயிர்களுக்கு இன்பம் தந்தவர் முருகப் பெருமான். இதைத் திருமுருகாற்றுப்படை எடுத்துக்கூறுகின்றது. பின் முருகனின் தாய் மாமனாகிய கண்ண ன் குழல் ஊதி நம் துன்பம் துடைத்தார். மூன்றாவதாக ஆனா ய நாயனார் குழல் ஊதி சிவ பெரு மானையே கவர்ந்து இழு த்தவர். சிவனைக் கவர்ந்ததால் என்றெ ன்றும் சிவன் அருகி லிருந்து குழல் ஊதும் பாக்கியம் பெற்றவர்.

சோழ நாட்டில் உள்ள ஊர் திரு மங்களம். அந்த ஊரில் ஆயர் குலத் தில் அவதரித்தார் ஆனாயர். தினம் ஈசனை வணங்கி திருநீறு இட்டு, தன்னுடைய குலத் தொழிலான மாடுகளை மேய்க்க செல்வார். அப் போது வகை வகையாக மாடுகளை பிரித்து மேய விட்டுவிட்டு புல லாங்குழல் வாசிப்பார். இசையில் ஓம் நமச்சிவாய எனும் திரு நாமம் கமலும்.

இறைவனை வணங்குவதற்கு பல வழிகள் உண்டு. இங்கு தமது குழல் இசையால் இறைவனை கவர்ந்த ஆனாய நாயனார் பற்றி அறி வோம்.

லால்குடி ரயில் நிலையத்திலிருந்து, பூவாலுர் வழியே வடமேற்க்கில், சுமார் 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருமங்கலம் என்ற திருத்த லம். பரசுராமர் சிவபெருமானை இங்குதான் வழிபட்டு பரசு என்ற ஆயுதத்தைப் பெற்றார். ஆனாய நாயனார் இத்தலத்தில் ஆயர் குலத் தில் அவதரித்தார். ஏராளமான பசு மந்தைகள் இவரிடம் இருந்தன. ஆ என்றால் பசு என்று பொருள்படும். பசுக்க ளை மேய்க்கும் தொழிலை கொண்ட இவர், ஆனாயர் என்ற பெயர் பெற்றார். இவர் சிவனைத் தனது முழுமுதற் கடவுளாக கொண்டிருந்தா ர்.

ஆனாயர் குழல் ஊதுவதில் சிறந்தவராக திகழ்ந்தார். பசு க்கூட்டத்துடன் சென்று அவை மேயும் பொழுது இவர் குழல் ஊதுவார்.

ஒருநாள் திருநீறு அணிந்துகொண்டு பசுக்களுடன் முல்லை நிலத்தி ற்கு செல்கிறார். அப்பொழுது கார் காலம் முல்லை மலர் பூத்து நறு மணம் வீசுகின்றது. அங்கு பூத்துக் குழுங்கும் கொன்றை மலர்களை எல்லாம் பார்த்து அதனுள்ளே சிவபெருமானை காணுகின்றார். எடுக்கின்றார் குழலை, ஐந்தெழுத்து மந்தி ரத்தை நமச்சிவாய என்று குழலோசை யில் தருகின்றார். எங்கும் எதிர்ரொலிக்கி ன்றது. குழல் ஓசையைக் கேட்டு பசுக்கள் அருகில் வந்து நிற்க்கின்றன. இளம் கன்று கள் தாய்மடியில் பால் குடிப்பதை நிறுத்தி விட்டு அப்படியே நிற்க்கின்றன. ஆங்கே காணப் பட்ட எருதுகளும் மான் போன்ற விலங்குகளும் அப்படியே அசையா மல் நிற்கின்றன. ஆடுகின்ற மயில்கள் அப்படியே ஆடாமல் நிற்க் கின்றன. காற்று நிற்க்கின்றது. மலர்கள் அசையாமல் நிற்க்கின்றன. நமச்சிவாய நமச்சிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரம் மண்ணிலும் விண்ணிலும் ஒலிக்கின்றது.

தேவர்களும் அங்கே வந்துவிட்டனர். தில்லை நடராசப்பெருமான் வராமல் இருப்பாரா. அப்பனும் அம்மையும் விசுவ வாகனத்தில் காட்சியளiக்கின்றனர். உன் குழல் இசையை கேட்டேன். என்றும் இந்த இசையின் பத்தை எனக்குத் தரவேண்டும். என்று இறைவன் கேட்க, உடனே இறைவனடி சேர்ந்தார் ஆனாய நாயனார்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: