இது மின்னணு யுகம். எல்லா துறைகளிலும் மின்னணுவியல் புகுந்து விட் டது. குறிப்பாக, இசைத்துறையை இது அதி வேக வளர்ச்சி அடைய வைத் திருக்கிறது.
மின்னணு இசைக்கருவிகளில் உள்ள ஒரு முக்கியமான நன்மை, இம்மிளவு கூட தவ றாத, விலகாத, நெகிழாத தொனி, ஸ்வர தாள சுத்தம் போன்றவை.
கணிதத்துக்கு எப்படி சரியான, முழுமை யான கணக்கீடு தேவையோ அதேபோல் சங்கீதமும் இனிமையும், கணக்கீடும் சேர் ந்த ஒரு துறையாகும். மின்னணுவியலான து இனிமை, சுருதி, லயம் ஆகியவற்றை மிகச் சரியாகப் பிரதிபலிப்பதால் இசைத்துறை வளர்ச்சி அடைந்துள்ளது.
எலக்ட்ரானிக்ஸ் சம்பந்தமான பல இசைக்கருவிகளையும் பொதுவாக`சிந்தசைசர்’ என்ற பெயரில் குறிப்பிடுகின் றனர். இதன் முக்கிய செயல் என்னவென் று பார்ப்போம். ஒலி அதிர்வுகளை ஓர் அணு விடாமல் பரவச் செய்ய வேண் டும். தவறுகளை அல்லது பிசிறுகளை வடி கட் டித் தர வேண்டும். சப்த அலைகளை அதி கரிக்க வேண்டும்.
காந்த நாடாவில் தகவல்களைச் சேகரிக் கும் முறை பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. இதுவும் எலக்ட்ரானிக் அடிப்ப டையில் ஒலி யைப் பரவச் செய்வதே ஆகு ம். ஆனால் சிந்தசைசரின் உபயோகமே தனிச் சிறப்பு வாய்ந்தது.
முதன்முதலில் 1954-ம் ஆண்டு சிந்தசைசர் உருவா னாலும், அது வியாபார ரீதியாக வளர்ச்சி அடைய வில்லை. ஏனெனில் பலவகைத் தொழில் நுட்பங்க ளையும் வெவ்வேறு தடங்களின் மூலமாக இயக்கி இணைத்து பலவித சுவிட்சு போர்டுகள், கட்டுப்படு த்திகளை நேரடியாக இயக்க வேண்டியிருந்தது. பின்னர், `மின் அழுத்தக் கட்டுப்படுத்தி’ (வோல் டேஜ் கண்ட்ரோலர்) முறை அறிமுகமானது. மின்அழுத்தக் கட்டுப்படுத்தி மூலம் ஒலி சமிக்ஞைகள், தடங்கள் ஆகியவை தானாகவே இயங்க முடி ந்தது.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்