Monday, August 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இயற்கை முறையில் கத்தரி சாகுபடி

சாகுபடிக்கு முதலில் தேவைப்படுவது நாற்றங்கால். இதன் பரப்பு 25 அடி நீளம். 4 அடி அகலம், 4 அங்கு லம் உயரம் கொண்டதாக இருக்க வேண்டும். நாற்றங்காலுக்கு 500 கி லோ நன்கு மக்கிய தொழு உரம் இட வேண்டும். இதோடு இயற்கை உரங் களான அசோஸ் பைரி ல்லம், பாஸ் போ பாக்டீரியா இவைகளை ஒரு கிலோ வீதம் போட வேண்டும். காய் கறி செடிகளில் தோன்றும் மிகக் கொடிய வாடல் நோயினைக் கட்டுப் படுத்த டிரைக்கோடெர்மா விரிடி என் னும் இயற்கை சம்பந்தப்பட்ட பூசணக்கொல்லி ஒரு கிலோ அளவினை நாற்றங்காலுக்கு இட்டு மண் ணினை நன்கு கொத்திவிட வேண்டும். ஒரு ஏக்கருக்கு 200 கிராம் விதை விதைக்க வேண்டும்.

நடவு வயலில் நல்ல வடிகால் வசதி உண்டாவதற்காக உளி கலப் பை கொண்டு உழவேண்டும். பிறகு நன்கு மக்கிய தொழு உரம் 15 டன் போட்டு நிலத்தை உழுது பார்சால் போட வேண்டும். (இரண்ட ரை x இரண்டு அடி) நாற்றங்காலில் இருந்து நல்ல திடமா ன 28 நாள் வயதுடைய நாற்றினை எடுத்து நடவு வயலில் நடவேண்டும். (பாருக்கு பார் இரண்டரை அடி, செடிக்கு செடி 2 அடி) நடவு நட்ட 21, 42, 63, 84 ஆகிய நாட்களில் ஒவ் வொரு முறையும் ஒரு டன் மக்கிய தொழு உரம், ஒரு கிலோ பாஸ்போ பாக்டீரியா, ஒரு கிலோ டிரை க்கோடெர்மா விரிடி இவைகளைக் கலந்து வயலில் இட்டு பாச னம் செய்ய வேண்டும். செடிகளுக்கு கவன மாக பயிர் பாதுகாப்பு செய்ய வேண்டும். நடவு நட்ட மூன்றுவாரம் கழித்து மாதம் இரு முறை உயிர் பூச்சிக்கொல்லி மருந்துக ளான பவேரியா பாசியானா இத னை ஒரு லிட்டர் தண்ணீருக்கு மூன்று மில்லி அளவு கலந்து தெளி க்க வே ண்டும். வாரம் ஒருமுறை பைட்டோபிராட் என்னும் இயற் கை பூச்சி விரட்டியை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 மில்லி அளவு கலந்து தெளிக்கவும். இந்த இரண்டு இயற்கை மருந்துகளும் வெகு சிறப்பா க செயல்பட்டு விவசாயிகள் விஷ மருந்துகளை உபயோகிப்பதில் இருந்து காப்பாற்றுகின்றன. வளரும் செடிகளுக்கு காலத்தி ல் பாசனம் செய்ய வேண்டும். இயற்கை முறையை அனுசரிக் கும் போது பாசன செலவில் மிச்சம் ஏற்படும். பாசன நீர் கிரகிக்கப்பட்டு பூமி யை தளர கொத்திவிட வேண்டும். உட னே மக்கிய தொழு உரத்தை பூமிக்கு இட்டு பாசனம் செய் யலாம். விவசாயிகள் தாங்கள் சேகரித்துள்ள தொழு உரத்தை அவ்வப் போது மேலே விவரித்தபடி செடி களுக்கு இட்டு வரவேண்டும். இதனா ல் செடிகள் வெகு செழிப் பாக வள ர்ந்து வருகின்றன. மேற் கண்ட பணி களை கவனத்தோடும், நம்பிக்கை யோடும் செய்யும்போது கத்தரி செ டிகள் நட்ட 75வது நாளிலிருந்து 120 நாட்கள் வரை அறுவடை கொடுத் துக் கொண் டிருக்கும். ஒரு ஏக்கரில் 65 கிலோ கொண்ட மூடை 135 கி டைக்கும்.

இயற்கை முறை சாகுபடியில் ஏக்க ருக்கு ஆகும் செலவு ரூ.22,000 ஆகும். காய்கள் விற்பனையில் ரூ.68,000 கிடைக்கும்.

இயற்கை விவசாயம் இளமையை அதிகரிக்கின்றது: மகசூல் கொடு க்கும் நாட்களை அதிகரிக்கின்றது. செடிகள் அதிகம் காய்க்கும். காய் ப்பு சிறிது குறையும்பொழுது செடிகளை மீண்டும் கொத்திவிட்டு, நன்கு மக்கிய தொழு உரம் இட்டு பயிருக்கு இயற்கை முறை உரம் இட்டு பாசனம் செய்தால் செடிகள் வீரியம் கொண்டு காய்க்கும்.
-எஸ்.எஸ்.நாகராஜன்

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: