Monday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சமையல் குறிப்பு: முள்ளங்கி சப்பாத்தி

தேவையான பொருட்கள்:

முள்ளங்கி – 2
கோதுமை மாவு – 1 கப்
சிவப்பு மிளகாய்த்தூள் – 1 டீ ஸ்பூன்
ஓமம் – 1 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீ ஸ்பூன்
தனியாத் தூள் – 1/2 டீ ஸ்பூன்
எண்ணை – 8 டேபிள் ஸ்பூன்
உப்பு – 1/2 டீ ஸ்பூன்

செய்முறை:

* முள்ளங்கியை நன்கு கழுவி பூத்து ருவலாக துருவிக் கொள்ள வும்.

* வாணலியில் சிறிது எண்ணை ஊற்றி காய்ந்த மிளகாய்த் தூள், ம ஞ்சள் தூள், தனியாத் தூள், ஓமம் சேர்த்து சிறிது பச்சை வாசனை போக வதக்கி கோதுமை மாவுடன் சேர்க் கவும்.

* துருவிய முள்ளங்கி, உப்பு சேர்த்து மாவை நன்கு கலந்து தேவையானால் சிறிது தண்­ணீர் சேர்த்து (முள்ளங்கித் துரு வலிலேயே தண்­ணீர் இருக் குமாதலால் தேவையானா ல் மட்டுமே தண்ணீ­ர் சேர்க் கவும்) சப்பாத்தி மாவு பதத் திற்குப் பிசையவும்.

* பிசைந்த மாவை சிறு உரு ண்டைகளாக்கி சப்பாத்தி யாகத் தட்டி, ஒரு தோசைக் கல் அல்லது நான்ஸ்டிக்த வா வில் போட்டு இரு பக்கமும் எண்ணை ஊற்றி திருப்பி விட்டு எடுத்து பரிமாறவும்.

குறிப்பு:

சப்பாத்தியின் சுவை மற்றும் ஆரோக்கிய சுவையை அதி கரிக்க கேரட் துருவலையும், முள்ளங்கித் துருவலுடன் சேர்க் கலாம்.

முள்ளங்கியையும் ஓமத்தையும் இணைத்து சப்பாத்தி செய் து உடலாருக்கு வழங்குவதானது சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த சமையல்தானே!

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply