Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தீக்காயம் பட்டவருக்கு செய்ய வேண்டிய முதலுதவி

பல வகையில் பயன்படும் நெருப்பு ஆடையில் பற்றிக் கொ ண்டால் ஆபத்துதான். தீ விபத் துகளால் ஏற்படும் சேதங்கள் இன்னும் ஏராளம். இந்த ஆபத் துகளில் இருந்து உங்கள் உட மை, உயிர், உறவினர்கள் யாவ ரையும் காப்பாற்ற அவசியம் அறிய வேண்டிய முதலுதவி முறைகள்….

* நீங்கள் அறிந்து எங்காவது தீப் பற்றிக்கொண்டால் உடனே தீய ணைப்புத் துறைக்கு (போன் எண் 101) தகவல் தெரிவியு ங்கள்.

* எண்ணை மற்றும் அமிலத்தால் ஏற்பட்ட தீ விபத்துகளுக்கு மணலை உபயோகித்து நெருப்பை அணைக்க முயலுங்கள். மற்ற தீவிபத்துகளை நீரூற்றி அணைக்க முய ற்சி செய்யு ங்கள்.

* விபத்தின்போது தீப்பி டித்து எரியும் நபரின் அ ருகில் நீங்கள் இருந்தா ல் உடனே அவரை கீழே தள்ளி கம்பளம் – போர் வை, கோணி இதில் ஏ தாவது ஒன்றினால் அவ ரை இறுகச் சுற்றி னால் தீ பரவாமல் அணைந்து விடும்.

* ஆடையில் தீப்பற்றி விட்டால் பயந்து ஓடக்கூடாது. ஓடினா ல் காற்றின் வேகத்தில் தீ மேலும் வேகமாக பற்றி எரியும். அதனால் தீப்பற்றியவர் கீழே படுத்துக் கொள்ள வேண் டும்.

* சூடான பாத்திரங்களை தொடுவதனாலோ, கொ திக்கும் சூடான எண்ணெ ய் தெறித்து விழுவதினா லோ, சூடான பொருள் உடலின் மீது விழுவத னாலோ ஏற்படும் சிறு புண்கள், கொப்புளங்க ளை கையினால் தேய்ப் பதோ, நகத்தால் கிள்ளு வதோ கூடாது. அப்படி செய்தால் விஷக் கிருமிகள் உள்ளே சென்றுவிட வாய்ப்புகள் அதிகம். அந்தக் கொப்புளங்களின் மீது ‘ஆன்டிசெப்டிக்’ மருந் துகளை வைத்து லேசாக கட்டுப் போட வேண்டும்.

* தீக்காயங்களுக்கு தேன் மிகவும் பயன்தரும். தேனை காய த்தின் மீது தடவலாம். முட் டையின் வெள்ளைக் கரு வை புண்ணின் மீது தடவி னால் எரிச்சல் குறையும்.

* கடுமையான தீக்காயங்க ளுக்கு அதன் மீது காற்றுப்ப டாமல் மூட வேண்டும். இது வலியை குறைக்கும்.

* தீ விபத்தில் உடலின் மீது துணி ஒட்டிக் கொண்டிருந்தால் அவசரப்பட்டு அந்தத் துணி யை அகற்றக் கூடாது.

* இரண்டு கரண்டி சமையல் சோடாவை நீரில் கொதிக்க வை த்து வெதுவெதுப்பானதும் சுத்தமான துணியை அந்த நீரில் நனைத்து தீப்புண்ணை மூட லாம். துணி காய்ந்துபோனால் மீண்டும் அந்த நீரை சொட்டு சொட்டாக விட்டு நனைக்கலா ம்.

* தீக்காயம் பட்டவருக்கு அடிக் கடி உப்பு கலந்த நீர், எலுமிச்சை சாறு கலந்த நீர், வெந்நீர் இவற் றைக் கொடுக்கலாம்.

* தீக்காயங்கள் அதிகம் ஏற்பட்டிருந்தால் பாதிக்கப்பட்டவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண் டும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: