Wednesday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பட்டுப் புடவை பாதுகாப்பது எப்படி?

பண்டிகை சீசன். பட்டுப் புடவை கட்ட வாய்ப்பு அதிகம் இருக்கும். உடு த்தின பிறகு அவற்றை பாதுகாப்பது அவ சியம். இதோ சில ஐடியாக்கள்...

* பட்டுத் துணிகளை சோப்பைப் போட்டு நீண்ட நேரம் ஊற வைப் பதை யும், அலசும்போது முறுக் கிப் பிழிவதையும் தவிர்க்க வேண் டும். அடித்துத் துவைப்பதும் கூடா து.

* துவைத்து உலர்த்தும் போது, வெயி லில் உலர்த்தாமல், நிழலில், காற்றில் படும்படி போடுவது நல்லது.

* பட்டுப் புடவையை இஸ்திரி செய்யும் போது, அதன் மீது சுத்த மான வெள்ளைத் துணியைப் போட்டோ அல்லது புடவையைத் திருப்பி வைத்தோ, மிதமான சூட்டில் இஸ்திரி செய்ய வேண் டும்.

* புதிதாக வாங்கும் பட்டுப் புட வைகளை, ஒரு ஆண்டுக்குள் துவைக்க வேண்டியது அவசி யம். முதலில் துவைக்கும் போ து, சோப்பு போடாமல், நல்ல தண்ணீரில், உடல் பகுதியைத் தனியாகவும், பார்டர் பகுதியை த் தனியாகவும் அலச வேண்டும்.

* பட்டுப் புடவைகளை வாஷிங் மிஷினில் போட்டுத் துவைப்பதை விட, கையால் துவைப்பதே மேல்.

* பட்டுப் புடவைகளை, காற்று புகாத பாலிதின் கவர்களில் வைப்பது நல்ல தல்ல; துணிப்பையில் போட்டு வைப்பது தான் நல் லது.

* பூச்சிகளை விரட்டும் நாப்தலின் உருண் டைகளை, பட்டுப் புடவை களின் மேல் போட்டு வைக்கக் கூடா து. பட்டுப் புடவைகள் கெட்டுப் போக, அது ஒரு கார ணமாக அமைகிறது.

* ஒவ்வொரு முறை உடுத்திய பின்பும், பட்டுப் புட வையைத் துவைக்க வேண்டும் என்பதில்லை. உடு த்திய பின் காற்று படும் இடத்தில் புடவையை வை த்து, பின் இஸ்திரி செய்தால் போதும்.

* ஒரு படி தண்ணீரில், ஒரு தேக்கரண்டி கிளிச ரினை கலந்து, பட்டுத் துணிகளை அலசி உலர்த்தி னால், சுருங்காமல், இழைகள் விலகாமல் இரு க்கும்.

* பட்டுப் புடவையில் எண்ணெய் கறை இருந்தால், சந்தனத்தை கறையின் மீது தடவி, சிறிது நேரம் கழித்து, அந்த இடத்தை மட்டும் நீரில் கழுவவும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply