Saturday, January 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கலச விளக்குகளை வீட்டில் வைத்துப் பூசை செய்யும் முறைகள்

மருவத்தூரிலோ, ஆன்மிக மாநாடுகளிலோ, வார வழிபாட்டு மன்ற ங்களிலோ வேள்விப்பூசைகளில் வைக்கப்பட்ட கலசங்களை வீட் டில் வைத்துப் பூசை செய்யும் முறைகள் வருமாறு

1) கலசம் அல்லது விளக்கு வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வரும்போது நுழை வாயிலில் நின்று யாரேனும் ஒரு சுமங் கலியைக் கொண்டு எலும்மிச்சம்பழம் திருஷ்டி கழிக்க வேண்டும்.

2) எந்த நல்ல காரியத்துக்காக கலச விளக்குகளை வாங்கினோமோ அதனை மனதில் கொண்டு ”அம்மா! இந்த நல்ல காரியத்துக்கு நீ துணை நிற்க வேண்டும் தாயே!” என்று அன்னையை வேண்டிக் கொண்டு, ஓம் சக்தி. பராசக்தி! என்று அன்னையின் மந்திரங்களை உச்சரித்தபடி கலசவிளக்குகளை ஏந்திக்கொண்டு வலது காலை எடுத்து வைத்து வீட்டில் நுழைய வேண்டும்.

3) அன்னையின் படத்திற்கு முன்பாக கலசத்தை வைக்க வேண்டும். அப்படி வைக்கும்போது ஓர் இலையை பரப்பி அதில் கலசத்தோடு வாங்கி வந்த அரிசியைப் பரப்பி அதில் ”ஓம்” என்று எழுதி அதன் மீது கலசத்தை நிறுத்த வேண்டும். தலைவாழை இலை அல்லது பித் தளைத் தாம்பாளத்தினைப் பயன்ப டுத்தலாம்.

4) கலசத்தை நிறுத்தி அருகில் காமாட்சி விளக்கு அல்லது குத்து விளக்கை ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.

5) அக்கலசத்தில் அன்னையின் திரு வருள் சக்தி உறைந்திருப்பதால் அக்கலசத்தின் முன்பாக வெற்றி லை, பாக்கு, வாழைப்பழம், எலுமிச்சைபழம், மஞ்சள் கிழங்கு, புஷ்பம், நைவேத்தியம், வைத் துத் தேங்காயை உடைத்து வைக்க வேண்டும்.

6) பின் கலசத்திற்கு தீபாரதனை செய்து ஒரு எலுமிச்சம்பழத்தைக் கொண்டு திருஷ்டி கழிக்க வேண்டும்.

7) அன்னையின் மூலமந்திரத் துடன் 108 மந்திரம் சொல்ல லாம். (கலசத்திற்கு மலர்க ளால் அர்ச்சனை செய்யலா ம்)  காலை, மாலை இரண்டு வேளை பூசை செய்ய வேண் டும்.

8) மூன்று நாள் கலச பூசை செய்து முடித்த பிறகு அக்கலசத்தில் உள்ள தீர்த்தத்தைக் குடும்பத் தில் உள்ளோர் அனைவரும் ஒரு தேக் கரண்டி அளவு அருந்த வே ண்டும். மீதமுள்ள தீர்த்தத்தை வீட்டின் எல்லாப் பகுதிகளிலும் தெளிக்க வேண்டும்.

9)கலசத்தின் அடியில் உள்ள பச்சரிசியை வெண்பொங்கல் அல்லது சர்க்கரைப் பொங் கல்செய்து அக் குடும்பத்தினர் அனைவரும்  சாப்பிட வே ண்டும்.

10) மூன்று நாள் கலச பூசை முடிந்த பிறகு கலசத்தின் மே லுள்ள தேங்காயை மஞ்சள் துணி, அல்லது சிவப்பு துணியில் கட்டி விட்டு வாயிற்படி மேல் தொங்கவிட வேண்டும். வீட்டில் கலசபூசை செய்யும் போதெல் லாம் கட்டிவிடப்பட்ட இந்தத் தேங்காய்க்கும் தீபாராதனை காட்ட வேண்டும். அல்லது சாம்பிராணிப் புகையைக் காட்ட வேண்டும். இவ்வாறு செய்வதால் மற்ற ர்களின் கண் திருஷ்டி, காழ்ப்புணர்ச்சி, செய்வினை கள் இவற்றால் வரும் பாதி ப்புகளிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.

11) கலச தீர்த்தத்தை வீட்டின் பகுதி, வியாபார நிறுவன ங்கள், தொழிற்கூடங்களில் தெளிப்பதன் மூலமாக நம் கண்கட்குப் புலப் படாத தீய சக்திகள் துர த்தப்படுகின்றன. துர்தேவதைகளின் ஆதிக் கம் அகற்றப்படுகிறது. எனவே கலச தீர்த்தத்தை வீணாக்காமல் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். குடும்பத்தில் யாருக்காவது உயிருக்கு ஆபத்து ஏற்படு கிற காலங்களில் அன்னையின் மூல மந்திரம், 108 மந்திரம் சொல்லி ஒரு தேக்கரண்டி உள் ளுக்குக் கொடுக்க வேண்டும். சாதாரண நோய்கட்குப் பயன் படுத்தி வீண் ஆக்கிவிடாதீர்கள்.

12) கலச சொம்பினைப் பூசை காரியத்துக்கு மட்டுமே பயன் படுத்த வேண்டும்.

13) மூன்று நாட்கள் இவ்வாறு பூசை செய்த பிறகு தொடர்ச்சியாகக் கலசபூசை செய்ய வேண்டும். 108 நாட்கள் அல்லது ஒன்பது பௌர் ணமி, அல்லது ஒன்பது அமாவாசை இவற்றில் எது யாருக்கு எப்படி உசிதமோ அப்படிக் கலசத்திற்குத் தொடர்ந்து பூசை செய்து வர வேண்டும்.

14) நாம் உறுதி செய்து கொண் டபடி இத்தனை முறை என்று பூசையை முடித்த பிறகு அன் னை அருள்வாக்கில் எங்ஙனம் உத்தர விடுகின்றாளோ அதன் படி அக்கலசத்தைப் பயன்படு த்த வேண்டும். அவற்றைக் கட லிலே செலுத்திவிடுமாறு அன் னை ஒரு முறை பணித்தாள். மற்றொரு முறை அவற்றைச் சென்னை ஆன்மிக மாநாட்டு ஊர்வ லத்தில் ஏந்தி வந்து மீண்டும் வீட்டிற்கு எடுத்துச் செல்லுமாறு ஆணை யிட்டாள். அன்னையின் அருள்வாக்கு உத்த ரவு வரும் வரை மேற்கண்ட முறைகளில் 9 அமாவாசை, அல்லது 9 பௌர்ண மி, அல்லது 108 நாள் கலசத்திற்குப் பூசை செய்து வர வேண்டும்.

15) கலச தீர்த்தம் தீர்ந்துவிட்டால் மஞ்சள் நீரையே தீர்த்தமாகப் பயன் படுத்திப் பூசை செய்யலாம். தீர்த்தப் பொடி இருப்பின் தயார் செய்து கொள் ளலாம்.

16) ஒவ்வொரு பௌர்ணமி, அமாவா சை காலங்களில் கலசத்தை முறை ப்படி வைத்து 1008 மந்திரங் களோடு பூசை செய்ய வேண் டும். ஒவ் வொரு முறையும் கலசத் தைச் சுத்தம் செய்து நுால் சுற்றிக் கொ ள்ளலாம். புதிய தேங்காய் வாங்கி மஞ் சள் தட விப்பொட்டு வைத்துக் கலசத் தின் மேல் நிறு த்திப் பூ வைத்துக் கலசம் தயா ரிக்க வேண்டும். கலசத்துக்கு நூல் சுற்றும் போது ஒற்றைப்படை எண்களில் வருமா று பார்த்துக் கொள் ள வேண்டும்.    

முக்கிய குறிப்பு- இவை பொதுவான முறைகள். தனிப்பட்ட முறை யில் சிலருக்கு அன்னை அருள்வாக்கின் போது வேறு சில முறைக ளில் வீட்டில் கலசபூசை செய்து வரும்படிக் கூறியிருக்கலாம். அத்தகையவர்கள் அதன்படியே கலச பூசை செய்து வர வேண்டும்.

நன்றி (அன்னை அருளிய வேள்வி முறைகள்)

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: