Tuesday, August 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மந்திர வழிபாட்டு முறையும் அதன் சிறப்புகளும்

அன்னையை வழிபட ஆரம்ப நாட்களில் ஆலயத்தில் 108 மந்தி ரங்கள், வேண்டுதற்கூறு, சக்தி வழிபாடு போன்றன கூட்டு வழிபாட்டுக்கு பயன் படுத்தப்பட்டு வந்தன. அன்னைக்கு 1008 போற்றி மல ர்கள் எழுத வேண்டும் என்ற எண்ணம் ஆலயப்புலவர்கள் ஒருவரு க்கு உதிக்க அவர்

அம்முயற்சியில் ஈடுபட்டார்.எந்த சாஸ் திரமும், மந்திரங்களும் தெரியாத அவர் அன்னை விட்ட வழியென சிறுகச் சிறுக இரகசிய மாக எழுதி வந்தார். இவர் மந்தி ரங்களை எழுதிக் கொண்டிருந்த வேளை ஒரு நாள் ஆலயத்திற்குச் சென்றிருந்தார். அன்று அன்னை மந்தி ரிப்பு நல்கிக் கொண்டிருந்தாள். இவரும் அதில் ஒருவராய்ப் போய் நின்றார். அன்னை இவரை நோக்கி மகனே 1008 போற்றியை விரை வில் முடி என்றாள்.

பரமரகசியமாக இருந்த தம் முயற்சியை அன்னை அறிந்து கொ ண்டிருக்கிறாள். எனக் கண்ட அப்புலவ ருக்கோ கரைகாணா ஆனந்த ம். இவ்வா னந்தத்தோடே மிகுதி மந்திரங்களையும் எழுதி முடித்து அன்னையின் திருவடி யில் சமர்ப்பிக்க அன்னையவள் மற் றொரு புலவரையும் அழைத்து “இதில் திருத்தங்கள் சில செய்ய வேண் டியுள்ள து. இருவரும் சேர்ந்து திருத்தங்கள் செ ய்து எடுத்து வாருங் கள்” என்றாள்.

மீண்டும் திருத்தங்கள் செய்யப்பட்டு அன் னையிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அப்புத்த கத்தைப் பிரித்துப் பார்க்காமலேயே அன் னை சில குறிப்பிட்ட எண்ணுக்குரிய மந் திரங்களைப் படிக்கக் கூறி அம்மந்தி ரங்களை அன்னையே திருத்திக் கொடுத்து வேப்பிலையைத் தூவி இம்மந்திரநூலை ஏற் றுக் கொண்டாள்.மற்றுமொரு ஆலயப்புலவர் அன்னைக்காக 1008 போற்றி மந்திர ங்களை எழுதியுள்ளதாகவும், அதற்கு அன்னையின் ஆசி வே ண்டும் என வேண்டி நிற்க அன் னையவள் அதனையும் வேப்பி லையைத் தூவி 1008 போற்றித் திருவுருவாக ஏற்றுக்கொண் டாள்:

எல்லையிலாக் கருணையோடு மானிட குலத்தை உய்விக்க வேண்டி அவதார நோக்கம் கொ ண்டு வந்த அன்னை நாத்திகம் பேசிய இர ண்டு பிள்ளைகளைத் தன் காலடியில் இழுத்துப் போட்டுக் கொண்டு அவர்கள் கைகளாலேயே மந்திரங்கள் எழுத வைத்து, அதற்கான காப்புச் செய்யுளாகத் தன் திருவாயாலேயே வெளியிட்ட மந்திரம் தான் இந்த மூல மந்திரம்!

 “ஓம் சக்தியே பராசக்தியே
  ஓம் சக்தியே ஆதிபராசக்தியே
  ஓம் சக்தியே மருவூர் அரசியே
  ஓம் சக்தியே ஓம் விநாயகா
  ஓம் சக்தியே ஓம் காமாட்சியே 
  ஓம் சக்தியே ஓம் பங்காரு காமாட்சியே”

இதனாலேயே அன்னையவள் புலவர்கள் எழுதிய 1008 போற்றி மலருக்கும் 1008 போற்றித் திருவுருக்கும் காப்புச்செய்யு ளாக இம் மந்திரத்தை அருளினாள். இந் தக்காப்பே மூல மந்திரமாக ஓதப்படுகி றது,இந்த மூல மந்திரம் பரம்பொருளான அன்னை ஆதிபராசக்தி அரு ளிய மூலமந்திரம்! தேவர்க்கும், மூவர்க்கும் யோகிகட்கும் எளிதில் புலப்படாத அவள் மேல்மருவத்தூரில் வந் து கருணையோடு வெளிப்படுத்திய மந்தி ரம் அது!

லட்சக்கணக்கான ஆன்மாக்களோடு உற வாட வேண்டி அருள்வாக்கு அளித்து, மக னே! மகளே! என்று பாசத்தைப் பொழிந்து, ஈர்த்துக் கொண்ட அவள், பிற்காலத்தே தன் பக்தர்கள் உருவேற்றி நலம் பெறவும், தன் அருள் பெறவும், ஆன்மிக சாதனை யில் ஈடுபடவும், ஆபத்துக் காலங்களில் துணைபுரியவும் அருளிய மூல மந்திரம் அது! 

 காப்புச் செய்யுளாக மூல மந்திரத்தை அரு ளிய அன்னை ஓம் பங்காரு காமாட்சியே! என்ற மந்திரத்திற்கு விளக்கம் அளித்தாள். ஆதியில் தான் காஞ்சி யில் காமாட்சியாக இருந்ததையும் பாதியில் தான் பங்காரு காமா ட்சியாகத் தஞ்சையில் எழுந்தருளிய குறிப்பையும் அன்று புலப் படுத்தினாள்.

அன்னையை வழிபட வேண்டுதற்கூறு, 108 போற்றி உரு பாடல் களே இருந்தன. அதன் பின் அம்மா 1008 மந்திரங்களை இயற்ற வைத்தாள்.

அன்னையவள் அருளிய மந்திரங்களுள் விசேட மந்திரங்களாக 1008 போற்றி மலர்களும், 1008 போற்றித் திருவு ருவும் கருதப் படுகின்றன.

அன்னையை வழிபட்டு அருள்பெற வே ண்டி 1008 மந்திரங்கள், 108 மந்திரங்கள் அனைத்தும் தமிழில் உள்ளது மிகப் பெரிய சிறப்பாகும்.

“1008 போற்றி மலர்களை செவ்வாய்க் கிழமை வழிபாட்டுக்கு வைத்துக்கொள்!”

“1008 போற்றித் திருவுருவை வெள்ளிக்கிழமை வழிபாட்டுக்கு வைத்துக்கொள்” என்று அன்னை அருளினாள்.
இவற்றைக் கொண்டு மந்திர வழி பாடு செய்வது எப்படி என்பதை சொ ல்லிக் கொடுத்தாள். 

1008 போற்றித் திருவுருவைப் படிக் கிறவர்களை சந்நிதியின் முன் பாக வடதிசை நோக்கி அமர வைத்தாள். 1008 போற்றி மலர் படிப்பவர்க ளைத் தென் திசை நோக்கி அமர வைத்தாள்.

கருவறையில் சுயம்பின் கீழிருந்து எலுமிச்சம் பழம் எடுத்துவரச் சொல்லி, மந்திரம் படிப்பவர் முன் கற்பூர ஆராதனை காட்டி எலுமி ச்சம் பழம் பிழிந்து திருஷ்டி கழிக்க வேண்டும்.

அன்னை அருளிய மந்திரம் படிக்கும் போது கடை ப்பிடிக்க வே ண்டிய விதிமுறைகள்:

1. ஒவ்வொரு வரிசையிலும் ஒற்றைபடையில் எண் கள் வருமாறு தொண்டர்கள் அமர வேண்டும்.

2. ஒருவர் உடம்பு மற்றொருவர் உடம்பின் மேல் படாதவாறு இடைவெளியிட்டு அமர்தல் வேண்டும்.

3. மந்திரம் படிக்கும் போது முதுகு வளையாமல் உடம்பு ஆடாமல் நிமிர்ந்து உட்கார்ந்தபடி மந்திரம் படிக்க வேண்டும். உடம்பில் எந் தச் சேட்டையும் கூடாது.

4. மந்திர வழிபாட்டுக்கு அனைவரும் அமர்ந்ததும்., அன்னைக்குக் கற்பூர தீபா ராதனை காட்டிப் பின்பு மந்திர வழி பாட்டில் கலந்து கொண்டுள்ளவர்களு க்கு தீபாராதனை காட்டி அவர்களைச் சுற்றி வந்து தீபாராதனை செய்து, அவர் களுக்கும் எலுமிச்சம் பழம் பிழிந்து திருஷ்டி கழிக்க வேண்டும்.

5. மூல மந்திரத்தோடு 1008 மந்திரங்க ளைத் தொடங்க வேண்டும். பின் 108 சொல்லி முடிக்க வேண்டும்.

6. ஒவ்வொரு மந்திரமும் சொல்லி முடி க்கும் போது ‘ஓம்’ என்ற பிரணவ ஒலியுடன் கையால் அடிக்கும் மணி யின் ஒலியும் இணை ந்து முடிய வேண்டும்.

7. ஆயிரம் மந்திரம் வந்ததும் பிரம்மதாளம், மணி ஒலி, மிகுந்த முழக்கத்துடன் ஒலிக்கப்படவேண்டும். 

8. 1008 மந்திரங்களும் சொல்லி முடித்த பிறகு 108 மந்திரம் சொல்ல வேண்டும்.

இறுதியில் மந்திர வழிபாட்டில் கலந்து கொண்ட அன்பர்கள் எல் லோரும் வரி சையாக நின்று,ஒவ்வொருவராக எதி ரில் இருப்பவ ரை நோக்கி, ஓம் சக்தி சொல்லிக் குனிந்து, அவர் காலைத் தொ ட்டு வணங்க வேண்டும். பெண்கள் குனிய வேண்டாம். நின்றபடி ஓம் சக்தி என்று கை கூப்பித் தொழுதால் போதும்.

9. 1008 மந்திரங்கள் சொல்லி வழிபாடு நடக்கிற நேரத்தில் மந்திரம் படிக்கிற சிலருக்குத் தொண்டை கம்மி க் கொள்ளலாம். மந்திர வழி பாட்டில் தொய்வு ஏற்படலாம். அப்படிப்பட்ட நேரங்களில் பூசனி க்காய் திருஷ்டி கழிக்க வேண்டும். இல்லையேல் எலுமிச்சம் பழம் பிழிந்து திருஷ்டி கழிக்க வேண்டும்.

10.”மந்திரங்களை ஒரு மன துடன் படித்து வழிபாடு செய்ய வேண்டும். அவ்வாறு ஒரு ம னத்தோடுபடிகிறபோது நீங்களு ம் சக்தி மயமாக ஆகி விடுகி றீர்கள்  மகனே! “என்பது அன் னையின் அருள் வாக்கு.

11. மந்திரம் படிக்கிறபோது உனக்கு மூக்குக் கண்ணாடி எதற்கு? கை களில் மோதிரம் எதற்கு? என்று சிலரை அன்னை கேட்பது உண்டு. பார்வையில் பழுதுள்ளவர்கள் எழுத்து தெரியாதவர்கள் எப்படிப் படிப்பது என்று கேட்கலாம். அத்தகையவர்கள் வேறு வழியில்லாத நிலையில் மூக்கு க் கண்ணாடி அணியலாம்.

“நீ ஒழுங்காக, ஒருமனத்துடன் மந்திரம் படித்தால் உன் மங்கலான பார்வையும் குணமாகிவிடும்.” என்பதை உணர்த்து வதற்காகவோ என்னவோ, உனக்கு மூக்குக் கண்ணாடி எதற்கு? என்று அன் னை கேட்டாள்.
மந்திரத்தின் முழுமையான பலனைப் பெறவேண்டுமானால்,
“எவன் ஒருவன் இந்த 1008 மந்திரங்களை விடியற்காலை  3 மணி க்குஎழுந்து  இந்த மந்திரங்களைத் தூய்மையுடனும், பயபக்தியு டனும், மன ஒருமைப்பாட்டுடனும், 1008 நாட்கள் தொடர்ந்து படித்து வருகிறா னோ அவனையும் அவனுடைய சந்த தியையும் நான் காப்பாற்றுவேன் மக னே!” என்று சொல்லிக் காட்டினாள் அன் னை.
“இம் மந்திரங்களை எந்த இடத்திலி ருந்து படித்தாலும் அந்த இடம் தூய்மை அடையும்”என்பது அன்னையின் அரு ள்வாக்கு.

அம்மா காட்டும் பாதையில் அனுதின மும் அன்னையின்  “1008, 108 மந்திர ங்களை தினமும் படித்து வழிபட்டு அம்மாவின் அருளைப் பெறு வோமாக!”

ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! 
உலகமெலாம் சக்திநெறி ஓங்க வேண்டும்!!
ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!

ஓம் சக்தி

நன்றி 
ஆதாரம்:சக்தி ஒளி செப்டம்பர்- 2010

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: