Friday, August 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அதிரடி சிகிச்சையில் உயிர்பெற்ற‍ ஆறு மாதக் குழந்தை

இதய அறுவை சிகிச்சை என்றாலே சிக்கல் நிறைந்ததுதான். அது வே ஒரு கைக்குழந்தை க்கு அறுவை சிகிச்சை செய்வதாக இருந்தால்… அதிலும் அந்த குட்டி இத யத்துக்குள் நான் கைந்து பிரச்னைகள் இருந்தால் என்ன ஆகும்? ஈராக் நாட் டைச் சேர்ந்த ஸமரா என்ற குழந்தைக்கு அப்படி த்தான் பிரச்னைகள் இரு ந்தன. அந்தக்குழ ந்தைக்கு அறுவை சிகிச் சை செய்து, உயிரைக் காப்பாற்றி சாதனை படைத்து உள்ளனர் சென்னை மருத்துவர்கள். 

இது குறித்து சென்னை, பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனை தலைமை இதய நோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் என். மதுசங்கர் பேசுகிறார். ”கடந்த மாதம் ஈராக் நாட்டைச் சேர்ந்த டாக் ஸி டிரை வர் ஒருவர், அவரது பெண் குழந்தை ஸமராவை இங்கே கொண்டுவந்தார். பிறந்ததில் இருந்து அந்தக் குழந்தை நீல நிறத்தில் இருந்துள்ளது. கார்பன் டை ஆக்ஸைட் அதிகம் கலந்த கெட்ட ரத்தம் ஓடிய காரணத்தால்தான், அந்தக் குழந் தை நீல நிறமாக இருப்பது தெரிய வந் தது. குழந்தையின் தாயாருக்கு முதுகு த்தண்டில் பிரச்னை இருந்த காரணத் தால், அவர் ஈராக் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு இருந்தார். இந்த இக்கட்டா ன நிலையில் குழந்தையின் உயிரைக் காப்பாற்றுவதற்காக மனைவியை அங் கே விட்டுவிட்டு, ஸமராவை சென்னை க்குக் கொண்டுவந்தார்.

குழந்தையின் நுரையீரலில் இருந்து இதயத்துக்கு வரும் ரத்தக் குழாயில், அதாவது நல்ல ரத்தம் வரும் குழாய் சுருங்கி இருந்தது. மகா தமனி வெளியே வந்திருக்க வேண்டிய இடத்துக்கு பதில், இதயத்தின் மற்றோர் அறையில் இருந்து வெளியே வந்திருந்தது. இதயத்தில் ஓட்டையும் இருந் தது. வலது பக்க இதய அறை தடிமனாகி மிகவும் விரிவடை ந்து இருந்தது. இதை டெட்ராலஜி டிஃபெக்ட் என்று கூறுவோம். இப் படி சிக்கலான இதய நோய்களுடன் குழந்தை பிறப்பது மிகவும் அரி து.

அந்தக் குழந்தைக்கு இதயத்தில் இருந்து அசுத்த ரத்தம் நுரையீர லுக்குப் போகாததால், ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு குறை வாக இருந்தது. அதனால், அதிக அளவில் அசுத்த ரத்தம் இருந்தது. ஆக்சிஜன் அளவு குழந்தைக்குச் சாதார ணமாக 100 என்ற அளவில் இருக்க வே ண்டும். ஆனால், இந்தக் குழந்தைக்கு 60 – 70 என்ற அளவில்தான் இருந்தது. இத னால் உடல் வளர்ச்சி குறைபடும், மூளையின் வளர்ச்சியும் பாதிக்கப்படும். இந்தப் பிரச்னைக்கு அறுவை சிகிச்சை ஒன்றே தீர்வு என்பதை முடிவு செய் தோம்.

குழந்தை வளர்ச்சிக்கும், உயிர் வாழவும் தேவையான ஆக்சிஜன் உடல் முழுக்கக் கொண்டுசெல்லப்பட வேண்டியதே முத ல் தேவை. அதற்கான அறுவை சிகிச்சை மிகவும் சிக்கலானது. எங்கள் மருத்துவ மனையின் டாக்டர்கள் மதுசங்கர், கார்த்திக் வைத்தியநாதன், கீர்த் திவாசன், சவுந்தர ராஜன், ராஜா சரவணன் மற்றும் கணேஷ் ஆகி யோர் அடங்கிய டீம் வெற்றிகரமாக சிகிச்சையில் இறங்கியது. பொதுவாக பெரியவர்களுக்கு அறுவை சிகிச்சை என்றால், இதய த்தின் பரப்பளவு பெரியதாக இருக்கும், இது தவிர இத யத்தின் தாங்கும் வலிமையும் அதிகமாக இருக்கும். ஆனால் ஸமரா, ஆறு மாதக் குழந்தை. அந்தக் குழந்தையின் எடையும் ஆறு கிலோ மட்டுமே என்பதால் மிகமிகக் கவனத்துடன் சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது.

மார்பு எலும்பை வெட்டி, இதயத்தை அடைந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதில் ஹார்ட் லங் கருவியைப் பயன்படுத்தாமல், குழந்தையின் இதயத் துடிப்பை நிறுத்தாமல் வலது நுரையீரல் தமனிக்கும், மகா தமனிக்கும் இடையே 6 மி.மீ. தடிமன்கொண்ட பைப் போட்டு அறுவை சிகிச்சை செய்தோம். இது வெறும் உயிர் காக்கும் அறுவை சிகிச்சைதான். இதன் மூலம் குழந்தையின் உட லு க்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்கச் செய்துள்ளோம். குழந் தை இப்போது நல்ல ஆரோக் கியத்துடன் உள்ளது. அறுவை சிகிச்சை முடிந்த ஏழாவது நாளி ல் குழந்தையை டிஸ்சார்ஜ் செய் தோம். உயிருக்கு எந்த ஆபத்தும் இன்றி குழந்தை தனது சொந்த நாட் டுக்குத் திரும்பியது. இன்னும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் கழித்துக் குழந்தை கொஞ்சம் வளர்ந்த பிறகு மேலும் ஓர் அறுவை சிகிச்சையை அந்தக் குழந் தைக்குச் செய்தாக வேண்டும். அதன் பிறகு ஸமரா பூரண குண மடைந்துவிடுவார்…” என்றார்.

ஆபத்தான உடல் நலப் பிரச்னை என்றால், வெளிநாட்டுக்கு ஓடோ டிச் செல்லும் நிலை மாறி, வெளி நாட்டினரும் இங்கே வந்து சிகிச் சை பெறும் நிலை உருவாகி இருப்பது தமிழகத்துக்கே பெருமை!

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: