Tuesday, August 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஹெல்த் இன்ஷுரன்ஸ் போர்டபிலிட்டி வருகிறது!

மூணு வருஷமா ஒரு கம்பெனியில் இன் ஷூரன்ஸ் பாலிசி போட்டும் ‘அந்த வியா திக்கு கிளைம் கிடையாது; இந்த வியாதி க்கு கிடையாது’ ன் னு இழுத்தடிக்கிறாங்க. வேறு கம்பெனியில் பாலிசி எடுத்திருந்தா ல், இந்தத் தொந் தரவு இருந்திருக்காதே…” – இப்படி புலம்பு பவர்களின் கவலை இனி போகப் போகிறது. நீண்ட நாட்களாக எதிர் பார் த்துக் காத்திருந்த ஹெல்த் இன்ஷூர ன்ஸ் போர்ட பிலிட்டி வரும் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்குரிய முறையான சுற்ற றிக்கையை இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு அனுப்பி இருக்கிறது காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம். காப்பீட்டு நிறுவனங்களும் இம்முறை இந்தத் திட்ட த்தைச் செயல் படுத்தத் தயார்நிலையில் இருப்பதாகத் தெரிவித்து உள்ளன.

 இன்ஷூரன்ஸ் போர்டபிலிட்டி குறித்து ப்ரகலா வெல்த் மேனே ஜ்மென்ட் நிறுவனத்தின் டைரக்டர் சொக்கலிங்கம் பழனியப் பனி டம் பேசினோம்.

”நம்முடைய செல்போன் நம்பரை மாற்றாமல், சே வை வழங்கும் நிறுவனத் தை மட்டும் மாற்றிக்கொ ள்ளும் மொபைல் போர் டபிலிட்டி சில மாதங்க ளுக்கு முன்பு அறிமுகமா னது. அது போலத்தான் இந்த இன்ஷூரன்ஸ் போர்டபிலிட்டியும். ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்த முதல் வருடமே, ஏற்கெனவே இருக்கும் நோய்களுக்கு முழு க்காப்பீட்டுத் தொகை கிடைப்பது இல்லை. ஒருசில காப்பீட்டு நிறுவனங்களில், மூன் று வருடத்துக்கு குறைத்து,  ஏற்கெனவே இருக்கும் நோய்களுக்கு பாலிசி கவர் ஆகாது. நாலாவது வருட த்தில் இருந்து தான், ஏற்கெனவே இருக்கும் நோய்களு க்கான காப்பீ டு கவராகும். இன்ஷூரன்ஸ் கிளைம் பண்ணினாலும், கைக்கு தொகை வருவதும் தாமதமாகும். அந்த இன்ஷூ ரன்ஸ் நிறுவனத்தின்  சேவையும் திருப்தி யாக இருக்காது. வேறு வழியின்றி அவர்கள் அந்த காப்பீட்டு நிறுவனத்தில் தொடர்ந்து கொண்டிருப்பார்கள்.

ஒருவர் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்து தொடர்ந்து 10 வருடங்களாக புதுப்பித்து வந்தால், அந்த கம்பெனியின் சர்வீஸ் பிடிக் காமல் போனாலும், தொடர்ந்து அதே காப்பீட்டைத் தொடருவ தைத் தவிர வேறு வழியில்லை. வேறு கம்பெனிக்கு போனால், மீண்டும் புதி தாகத்தான் தொடங்கவேண்டும். ஏற்கெனவே இருக் கும் நோய்களும் கவராகாது. திரும்பவும் 3 (அ) 4 வருடங்கள் காத் திருக்கவேண்டும். இவ்வளவு காலம் எடுத்த முழு பாலி சியும் வீணாகிவிடும்.

இந்தப் பிரச்னையைத் தீர்க்கும் வகையில் வந்திருப்பது தான் இன் ஷூரன்ஸ் போர்டபிலிட்டி. உங்கள் மெடிக்ளைம் பாலிசி காலாவதி யாவதற்கு 45 நாட்களுக்கு முன்னதாக, நீங்கள் விரும்பும் வேறு ஒரு நிறுவனத்துக்கு மாற்றிக்கொள்ளலாம்.  விண்ணப்பித்த ஏழு நாட்களில் உங்களைப் பற்றிய முழு விவரத்தையும் புதிய கம்பெ னிக்கு கொடுத்தாக வேண்டும். இந் த மெடிக்ளைம் போர்ட பிலிட்டி மூலமாக, புதிதாக ஒரு கம்பெனி க்கு மாறினால், அந்த புதிய   நிறு வனத்துக்கு தனி நபர் பாலிசி அல் லது குடும்ப பாலிசி ,  ஏற்கெனவே பாலிசிக்ளைம் செய்யப்பட்டு இரு க்கிறதா.. போன்ற விவரங்களை பழைய கம்பெனி கொடுத்தாக வேண்டும். அதை வைத்து புது கம் பெனி, பாலிசியை அப்படியே டேக் ஓவர் செய்யும். இதனால், சலு கைகளில் எந்த இழப்பும் காப்பீட்டாளர் களுக்கு ஏற்படாது. இந்த நன்மை யை  உணர்ந்துதான் மருத்துவக் காப்பீடு களுக்கான இந்த புதிய முறையை அரசு அறிவித்திருக் கிறது.

இதில் கஸ்டமர்கள்தான் பெரிய அளவில் பயன்பெறப் போகிறார் கள். இன்ஷூரன்ஸ் தொகையைப் பெறுவதற்குப் பெரும் பாடுபடும் முதியோர்களுக்கு இனி கவலை யே இல்லை. வாடிக்கையாளர்கள் ஒரே இடத்தில் இருக்க வேண் டும் என்பது கிடையாது. பிடித்த எந்த கம்பெனிக்கு   வேண்டுமானா லும் மாறலாம். விருப்பத்துக்கு ஏற்ப இன்ஷூரன்ஸ் கம்பெனிகளை தேர்ந்தெடுக்க நிறைய சாய்ஸ் கிடைக்கும். ஹெல்த் காப்பீடுக்கான மார்க்கெட்டில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் கம்பெனிக்கான போட்டிகள் அதி கரிக்கும். நல்ல சர்வீஸ் தரும் ஹெல்த் இன்ஷூ ரன்ஸ் கம்பெனிகளுக்கு இன்னும் நிறைய கஸ்ட மர்கள் குவிய வாய்ப்பு உண்டு.

கஸ்டமர்களை விட்டுவிடக் கூடாது என்று இன் ஷூரன்ஸ் கம்பெ னிகளுக்குள் போனஸ், சலுகை கள் எனப்போட்டி வரலாம். இதனால், வாடிக்கை யாளர்களுக்கு நன்மை கிடைக்கும். ஆனால் ,  விண்ணப்பிக்கும்போது, சில காரணங்களைக் காட்டி புதிய கம் பெனி பாலிசியை ஏற்கவோ (அ) நிராகரிக்கவோ செய்யலாம். புதிய நிறுவனத்துக்கு மாறும்போது, எந்த இன்ஷூரன்ஸ் நிறுவனம் நமக்கு உகந்தது என்பதை நிதானமாகவும் பொறுமையாகவும் ஆராய்ந்து, ஆலோசி த்து முடிவெடுப்பது நல்லது!” என்கிறார் பழனியப்பன்.

பி.கு: ஹெல்த் இன்ஷூரன்ஸ் போர்டபி லிட்டி திட்டம் கடந்த ஜூலை மாதமே நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், காப்பீட்டு நிறுவனங்களின் வேண் டுகோளுக்கு இணங்க ஒழுங்கு முறை ஆணை யம் இவ்வளவு நாட்களுக்கு இந்தத் திட்டத்தை ஒத்தி வைத்திருந்தது. பல தடைகளைக் கடந்த பிறகே இந்த நல்வாய்ப்பு கஸ்டமர்களுக்குக் கிட்டி இருக்கிறது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: