கர்ப்ப காலம் என்பது மாதவிலக்கு நிற்கும் நாளிலிருந்து 9 மாத மும் 7 நாட்களும் என்று கணக் கிடப்படுகிறது. பொதுவாக 40 வாரங்கள் என்று கணக்கிடப்படு கிறது. முதல் ட்ரைமஸ்டர் (முதல் 12 வாரங்கள்) மிக முக்கியமான கர்ப்பகாலம்
1. ஏனென்றால் 35லிருந்து 40வது நாளுக்குள் இவர்களுக்குச் சிறு நீரைப் பரிசோதித்து முதலில் கருவுற்றிருக்கிறார்களா? என்பது உறுதி செய்யப்படுகிறது.
2. அடுத்தபடியாக ‘முத்துப் பிள்ளை’ போன்ற அபாயகரமான, தா யின் உயிருக்குப் பலத்த சேதத் தை விளைவிக்கக் கூடிய கர்ப்ப கால நோய்கள், இந்தச் சிறுநீர் பரி சோதனையின் போது கண்டு பிடி க்கப்பட்டு ஸ்கேன் மூலம் உறுதி செய்து காலிசெய்ய ஏதுவாகிறது .
3. கர்ப்பம் உறுதி செய்யப்பட்டுப் பதிவு செய்யப்படும் போதே அவ ருடைய இரத்தக் கொதிப்பு, எடை ஆகியவை பரிசோதனை செய் யப் பட்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்க ஏதுவாகிறது.
4. சோகையான பெண்களுக்கும், இந்த ஆரம்ப காலப் பரிசோதனை யிலே வார ஊசிகளாகச் சத்து ஊசி களும் போட்டு அவர்களை, இரத்த சோகையின் காரணமாக ஏற்படும் இடர்ப்பாடுகளில் இருந்து ‘வரு முன் காப்போம்’ முறை களை கடைப்பிடித்துக் காப்பாற்ற முடி கிறது.
5. அதிக வாந்தி, மயக்கம், ருசியி ல் மாறுதல் போன்ற ‘மசக்கை’ என் று கூறக்கூடியதானது, சில பெண்களுக்கு இந்த கால கட்டத்தில் அளவுக்கதிகமாகவே இருப்பது ண்டு. அதற்கான மருந்துகள் இருப் பதால் அவர்கள் சோர்வடை யாமலும் அதனால் கருவின் வளர்ச்சி பாதிக்கப்படாமலும் பாது காக்க முடிகிறது.
6. முதல் 12 வாரங்களில் தான், கருவானது குழந்தையாக முழு வளர்ச்சி பெறுகிறது. அதன்பின் அதன் அளவுதான் பெரிதாகிறது. அதனால் வளர்ச்சிப் பரிமாண மானது இந்த 12 வாரங்களுக்குள் நடைபெறுவதால் 1. போதிய கவ னிப்பு, 2. தரமான உணவு, 3. சுகா தாரமான தண்ணீர், 4. நல்ல ஓய்வு, 5. மருத்துவரின் கண்கா ணிப்பு இந்த சமயத்தில் மிகவும் அத்தியாவசியமான ஒன்றா கிறது. கர்ப்ப காலத்தில் பொதுவாக 3 முறை ஸ்கேன் அவசிய மாகின்றது.
மி. 90வது நாள் (முதல் ட்ரைமஸ்டர்) முடியும் பொழுது
1. குழந்தையாக கரு உருப் பெற்றுவிட்டதை உறுதி செய்ய
2. ‘முத்துப்பிள்ளை’ போன்ற உயிரு க்கு ஆபத்தான கரு வளர்ச்சி யைக் கண்டறிய
3. கர்ப்பப்பையிலும், கருவிலும் உள் ள மற்ற குறைபாடுகளைக் கண்டறி ந்து குணப்படுத்த
மிமி. 150வது நாள் (20வது வாரத் தில்)
1. குழந்தை வளர்ச்சியைக் கண்கா ணிக்க
2. பிறப்பிலேயே ஏற்படக்கூடிய கு றை பாடுகளைக் கண்டறிந்து மிக வும் ஆபத்தான குறைகள் என்றால் மருத் துவ முறைப்படி வளர விடாமல் வெளியேற்ற
3. குழந்தை வளரும் கர்ப்பப்பை சூழ்நிலைகளை, தன்மைகளைக் கண்டறிய மிமிமி. 9வது மாதத்தில்
1. குழந்தையின் இ ருப்பிடம், 2. தண் ணீர்ச்சத்து, 3. நஞ் சின் இருப் பிடம், 4. தலை இறங்கியி ருக்கும் அளவு,
5. பிரசவம் ஆகக் கூடிய தேதி 6. குழ ந்தையின் எடை போன்றவற் றைக் கண்டறிவதின் மூலம் குழந்தை பிறக்கும் வழியையும் (Nature of Delivery) தேதியையும் ஓரளவு கணிக்க முடிகிறது.
நவீன மருத்துவக் கருவிகளிலேயே இந்த “ஸ்கேன்”, மகளிர் மகப் பேறு மருத்துவத்தில் ஒரு மிக ப்பெரிய வரப்பிரசாதமாக வே கருதப் படுகிறது.
மிக்ஷி. பிரசவ சமயத்தில் பிர சவம் 12 மணி நேரங்களுக்கு மேல் நீடித்தாலோ, குழந்தையி ன் துடிப்பு உணரப்படவில்லை என்று பெண் மணிகள் கர்ப்பக் காலத்தில் மருத்துவரைச் சந்தி க்க வந்தாலோ, குழந்தைக்கு இருதயத் துடிப்பு இருக்கிறதா என்று இந்த ஸ்கேனர் மூலம் உறுதி செய்து கொள்ளலாம்.
இருதயத் துடிப்பை ஈ.ஸி.ஜி. போன்று ஸ்கேனர் அழகாகப் பதிவு செய்து கொடுக்கும்.
இருதயத் துடிப்பு அதிகரித்தாலோ, மாறுதல்கள் இருந்தாலோ அது குழந்தையின் மூச்சுத் திணறுத லைச் சுட்டிக் காட்டுவதால், உடன டியாக அதற்கான வைத்திய மு றைகளைக் கையாண்டு அறுவை சிகிச்சை செய்தாவது குழந்தை யைக் காப்பாற்ற ஏதுவாகிறது.
முந்தைய காலம் போல் அல்லாது ஒன்றிரண்டு குழந்தைகளே இன் றைய குடும்பம் என்று ஆகிவிட்ட சூழ்நிலையில் அவற்றை நன்மு றையில் கர்ப்பக் காலத்தில் தாய் சேய் நலத்தைப் பேணி, மிகவும் சாதாரண அறுவை சிகிச்சை இல்லாத முறையில் பெற் றெடுப்பதற்கு இந்த கர்ப்பக் கால பராமரிப்பு மிகவும் அத் தியாவசியமான ஒன்றாகிற து.
தொகுப்பாக, இந்த 12 வார ங்களில் கரு குழந்தையாக உருப்பெறு வது நடைபெறு வதால் நல்ல ஊட்டச்சத்தும், ஓய்வும் மருத்துவக் கண்காணிப்பும் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகிறது.
இரண்டாவது ட்ரைமஸ்டர் (இரண்டாவது 12 வாரங்கள்)
கரு குழந்தையான பின் ஏற்படும் வளர்ச் சிதான் இந்த இரண் டாவது 12 வாரங்களி ல் நடை பெறுகிறது. இதில், பொதுவாக மு தல் ட்ரைம ஸ்டரைப் போன்ற மிகவும் ஆபத் தான இடர்ப்பாடுகள் ஏற்படுவ தில்லை.
இந்த இரண்டாவது ட்ரைமஸ்டரில்
1. இரண்டு தடுப்பூசிகளும் போடப்படுகிறது.
18 வது வாரம்
26 வது வாரம்
2. சத்து மாத்திரைகள் இரும்புச் சத்து, கால்சியம் சத்து (சுண்ணா ம்புச் சத்து) போலிக் ஆசிட்.
3. மார்பகத்தைச் சோதனை செ ய்து, உள்ளடங்கிய காம்பு உள்ள வர்களுக்கு எளிய பயிற்சி கொ டுத்து அதை வெளியில் திருப் பினால்தான் பிரசவத்திற்கு பி ன் தாய்ப்பால் கொடுக்கும்பொ ழுது சிரமம் இல்லாமல் இருக் கிறது.
4. மிகவும் இரத்தசோகையுடன் இருப்பவர்களுக்கு 1. இரும்புச் சத்து ஊசிகளும் 2. இரத்தமும் கூட ஏற்றப்பட்டு, அவர்கள் ஆபத்தில்லா பிரசவத்திற்கு தயார் செய்யப்படுகிறார்கள்.
மூன்றாவது ட்ரைமஸ்டர் (24 வது வாரம் முதல் 40வது வாரம் வரை) அதாவது அந்த மூன் றாவது ட்ரைமஸ்டர் என்பது பிர சவத் தின் தன்மையை நிர்ணயி க்கக் கூடிய முக்கியமான கால கட்டமா கும். இந்தக் கட்டத்தில்
1. மூளை வளர்ச்சி அதிகம் ஏற்ப டுகிறது. 1 வயது வரை தொடர்கி றது. 2. குழந்தையின் எடை அதி கரிக்கிறது.
3. நரம்பு மண்டலங்கள் பலப்படுகின்றன. 4. அசைவுகள் அதிகம் ஏற்படுகின்றன 5. இருதயத் துடிப்பு சீராகிறது.
6. கல்லீரல், மண்ணீரல், நுரையீரல் போன்ற முக்கியமான உறுப் புகள் முழுவளர்ச்சி அடைகி ன்றன. 7. பிறப்பு உறுப்புகள் தெளிவாக ஸ்கேனிங்கில் தெ ரிய ஆரம்பிக்கின்றன. 8. எலு ம்பு வளர்ச்சி அடைகிறது செறிவடைகிறது.
9. இரத்த ஓட்டம் சீராகிறது.
10. குழந்தை கருப்பையினுள் சுற்றி வருகின்றது.
40வது வாரம் நெருங்கும் பொழுது
1. குழந்தையின் தலை கீழே, திரும்பி, இடுப்பு எலும்புக் கூட்டுக்குள் இறங்கி விடுகிறது. அவ்வாறு இறங்கினால் தான், இயற்கையான முறையில் பிரசவமாவதற்கு ஏதுவாகிறது.
2. தகுந்த தண்ணீர்ச் சத்து குழந்தை யின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிற து. அது குறையும்பொழுது குழந்தை யின் உயிர்த்துடிப்பிற்கே ஆபத்தாகி றது.
3. தாயின் இரத்த அழுத்தம் இந் தச் சமயத்தில் சீராக 120/80ல் இருக்க வேண்டும். சிலருக்கு 40 வது வாரம் நெருங்கும் பொழு துதான்…
1. அதிகமான வீக்கம், கை, கால், முகங்களில் ஏற்படுகிறது.
2. உப்புச் சத்து அதிகரிக்கிறது.
3. இரத்தக் கொதிப்பு அதிகரிக்கிறது.
4. மூச்சுத் திணறல் உண்டாகிறது.
5. அளவுக்கதிகமான வியர்வை
6. இருதய படபடப்பு.
7. தூக்கமின்மை உண்டாகிறது.
இதைத்தான் (“TOXAEMIA OF PREGNANCY”) கர்ப்ப காலத்தில் உடலில் விஷமாக மாறிவிடக் கூடிய கர்ப்பம் என்று கூறுகிறோம்.
ஆகவே, கர்ப்பகால பராமரிப்புஒவ்வொரு கருவுற்ற தாய்க்கும் மிகவும் இன்றியமையாததாகும்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
Vanakam sir. Enaku married agi 7 yrs achu. Nan ippo than pregnant ta iruken. Nan ippo punjab la iruken. Ennala velai ethum seiya mudiyala. So enaku enga oor ku pogalam pola iruku. Nan travel pannalama. Ippo enaku 3 month aguthu. Nan 4 th month la oor ku pogalam nu irukom nanga oor ku pogalama. Apdiye ponalum ethula travel pannalam train or flill
கர்ப்பிணிகள் பயணம் செய்யலாமா? (CLICK THIS BELOW LINK)
கர்ப்பிணிகள் பயணம் செய்யலாமா? (CLICK THIS LINK)