Tuesday, August 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஃபார்மசிஸ்ட் படிப்பின் முக்கியத்துவம்

மருத்துவ சுற்றுலாவில் இந்தியா பிரதான இடம் வகிக்கிறது. வெளிநாடு களில் இருந்து மருத்துவ சிகிச்சைக் காக இந்தியா வருபவர்களின் எண்ணி க்கை அதிகரித்திருக்கிறது. சிறு நகரங் களில் கூட பல்நோக்கு மருத்துவ மை யங்கள் வந்து விட்டன.

கிராமங்களுக்கு மிக அருகில் மருத்து வமனைகளும், ஏராளமான மருந்து விற்பனைக் கடைகளும் தோன்றியிரு க்கின்றன.

அதிக மக்கள்தொகை, அதிகரித்திரு க்கும் உடல் நலம் பேணுதல் பற்றிய விழிப்புணர்வு போன்றவற்றால், மருத்துவத்துறை வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கிறது. மருத்துவர் களுக்கான தேவை மட்டுமின்றி மருத் துவம் சார்ந்த பிற துறைகளிலும் வேலைவாய்ப்புகள் ஏராளமாக உள் ளன. அவற்றுள் மருந்தாளுனர் பணி யிடமும் ஒன்று.

பிளஸ் 2வில் கணிதம், உயிரியல், வேதியியல், இயற்பியல் படித்திரு க்க வேண்டும். இத்துறையில் டிப்ள மோ(டிஃபார்ம்) மற்றும் இளநிலைப் படிப்புகள்(பிஃபார்ம்) வழங்கப்படுகி ன்றன. பிஃபார்ம் படிப்புக்கு மாநில அளவிலான நுழைவுத்தேர்வு மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப் படுகின்றனர்.

மருந்தாளுனர் பணி என்பது டாக்டரின் பரிந்துரையின் பேரில் மருந் துகளை தயாரித்தல், மருந்துக் கலவைகளை உருவாக்குதல், மாத்திரை கள், ஊசிமூலம் செலுத்தப்படும் மருந்துகள் தயாரி த்தல், ஆயின்மென் ட்கள், மருந்துப்பொடிகள் தயார் செய்தல் உள்ளிட்ட பணிகளை உள்ளட க்கியது.

மருத்துவமனைகளில் பணிபுரியும் மருந்தாளுன ருக்கு, டாக்டரால் பரிந்துரைக்கப்படும்; வெளிச் சந் தையில் எளிதில் கிடைக்காத சில மருந்து களை கலவைகளின் மூலம் உருவாக்கத் தெரிந்திருக்க வேண்டும். சில அவசர காலகட்டத்தில் டாக்டர் அருகில் இல்லாத போது, நரம்பு வழி மருந்து செலு த்துதல் போன்ற முதலுதவி செய்ய வேண்டும்.

மருந்துகளைப் பயன்படுத்தும் முறை, முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் பற்றி விளக்கத் தெரிய வேண்டும். வேறுபட்ட மருந்துகளின் குணம் பற்றி, டாக்டருக்கு ஆலோசனைகள் வழங்க வேண்டி இருக்கும்.  மருந் துக்கடைகள் பற்றிய அரசு ஆணைகள், நெறி முறைகள் பற்றிய ஆவண ங்களை முறையாக பரமாரித்து வர வேண்டும்.

சில்லறை விற்பனைக் கடைகளில் மருந்து களை விற்பனை செய்பவரா கவும், சொந்தமாக கடை நடத்துபவராகவும் இப்படிப்பு உறுதுணை யாக இருக்கும்.

இதில் உயர்படிப்புகள் படிப்பதன் மூலம், மருந் துகளின் தரம் பற்றி ஆய்வு செய்யும் பணியில் ஈடுபடலாம். மருந்து ஆய்வாளர் பணியிடம், ஆய்வ கங்களில் பரிசோதகர், பயிற்றுனர் போ ன்ற பணிகளையும் செய்யலாம். முதுநிலை, பிஎச்.டி., படிப்புகளும் இதில் உள்ளன. கல்லூ ரிகளில் விரிவுரையாளராகச் சேரலாம்.

மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் பொருட்களை விற்பனை செய்ய, விற்பனைப் பிரதிநிதிகளை நியமனம் செய்கின்றனர். மெடிக்கல் ரெப் எனும் இப்பணியிடத்துக்கு டிஃபார்ம் முடித்தவர் கள் விண்ணப்பிக்கலாம். இத்தகுதி கொண்டவர் களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. கலந் துரையாடும் திறனும், மொழிவளமையும் மிக்க வர்கள் மெடிக்கல் ரெப் பணியிடத்தில் கணிசமா ன வருவாய் ஈட்ட  முடியும்.

அரசு மற்றும் தனியார் துறையில் ஏராளமான பணியிடங்கள் உள்ளன. அரசுத்துறையில் உள் ள சில பணியிடங்கள் மாநில அரசின் தேர்வா ணையத்துறையால் நடத்தப்படும் போட்டித் தே ர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. சில பணி யிடங்கள் வேலைவாய்ப்பக பதிவு மூப்பு அடிப் படையில் நிரப்பப்படுகின்றன. தனியார் துறை யில் வேலைவாய்ப்பை ஊடகங்களில் வெளி யிடப்படும் விளம்பரங்களின் மூலம் அறியலாம். விருப்பமுள்ளவர்கள் சொந்தமாக சில்லறை விற்பனைக் கடைகளை துவக்கி தொழில்மு னைவோர் ஆகலாம்.

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் இதற்கான கல்லூரிகள் உள்ளன. இப்படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் தொடர்பான தகவலுக்கு www.pci.nic.in  என்ற இணைய தளத்தைப் பார்வையிடலாம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: