Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ரஷிய திரைப்படவிழாவில் சிவாஜியின் ‘தில்லானா மோகனாம்பாள்’ – வீடியோ

கடந்த அக்டோபர் 1-ம் தேதி, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் ஆகும். அவரது பிறந்த நா ளை நினைவு கூறும் வகையிலு ம், அவரை கௌரவிக்கும் வகை யிலும் அடுத்த மாதம் ரஷியா வில நடைபெற இருக்கும் சர்வ தேச திரைப்பட விழாவில் சிவா ஜி நடித்த ‘தில்லானா மோகனாம்பாள்’ திரையிடப்படுகிறது.

ரஷியாவின் உக்ளிக் நகரில் அடுத்த மாதம் (நவம்பர் ) நடைபெறும் சர்வ தேச தமிழ் திரைப்பட விழாவில் திரையிடப் படுகிறது.

நான்கு நாட்கள் நடை பெறும் இத்திரைப்பட விழாவை ரஷிய அரசும் இந் திய -சோவியத் வர்த்தக சபையும் இணைந்து நடத்துகின்றன. இதே திரை ப்பட விழாவில் கோ, சிவாஜி, சந்திரமுகி, தென்மேற்கு பருவக் காற்று, பாஸ் என்கிற பாஸ்கரன், அங்காடிதெரு போன்ற படங்களும் திரையி டப்படுகின்றன. சிவாஜி கணேசனுக்கு பெயர் வாங்கித் தந்த படங்களில் ‘தில்லானா மோகனாம்பாள்’ படமும் ஒன்று.

இப்படத்தில் சிக்கல் சண்முகசுந்தரம் என்ற நாதஸ்வர கலைஞராக வருவார். பரதநாட்டியக் கலைஞர் மோகனாம்பாளாக பத்மினி நடித்திரு ப்பார். இவர்களுடன் பழம்பெரும் நடிகர்களான பாலையா, நாகேஷ், எம். என்.நம்பியார், மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருப்பர்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: