Tuesday, August 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கைபேசி (செல்போன்) பற்றிய அரிய தகவல்கள்

இன்று பெரும் தொழிலதிபர்கள் முதல் பூக்காரப் பெண்மணி வரை அனை வர் கையிலும் செல்போன் புழங்கு கிறது. எல்லோருமே அதில் டாக் டர் பட்டம் பெறுமளவுக்கு எந்நேர மும் குடைந்துகொண்டே இருக்கி றார்கள்.

தொலைத்தொடர்பு மட்டுமின்றி, மியூசிக் பிளேயர், காமிரா, டார்ச், கால ண்டர் என்று ஒரு கையடக்கத் தோழனாக செல்போன் உதவுகிறது. செல் போன் இன்றி இனி எவராலும் இயங்க முடியாது. அதன் பல்வேறு அம்சங்கள், பயன்பாடுகள் பற்றி அனைவரும் அறிந்தும் இருக்கிறார்கள். ஆனால் அறிய வேண்டிய அத்தியாவசிய அம்சங் களை அறிந்திருக்கிறார்களா என்பது கேள்விக் குறி. அவை பற்றி…

உயிர்காப்பான்

முதலாவதாக, அவசரநிலைகளில் செல்போன் ஓர் உயிர்காப்பானாகப் பயன்படும் என்பது பலருக்குத் தெரியாது.

அதாவது, செல்போன்களுக்கு என்று உலகளாவிய ஒரு அவசரநிலை எண் இருக்கிறது. அது, 112.

இக்கட்டான நிலையில், உங்களுக்குச் சேவை யை வழங்கும் நிறு வனத்தின் `நெட் ஒர்க்’ கிடைக்காத இடத்தில் நீங்கள் இருந்தால் உங் களால் வெளியிடங்களுக்குத் தொடர்பு கொ ள்ள முடியாது. ஆனால் இந்த அவசர நிலை எண்களை அழுத்தும்போது, வேறு ஏதாவது செல்போன் சேவை நிறுவத்தின் `நெட் ஒர்க்’ இருந்தாலும் அதைத் தேடிக் கண் டு பிடிக்கும். அதன்மூலம் வெளியே `எமர் ஜென்சி’ தகவ லை அனுப்பும். `கீ பேட்’ லாக் செய்யப்பட்டிரு ந்தாலும் இந்த எண்ணை அழுத்த முடியும் என்பது ஆச்சரியமான விஷயம்.

`ரிசர்வ் சார்ஜ்’

இன்று பெரும்பாலானவர்கள், பல்வேறு நவீன வசதிகளைக் கொண்ட `ஸ்மார்ட் போன்களை’ பயன்படுத்து கிறார்கள். கூடுதல் வசதிகளைப் பய ன் படுத்துவதன் காரணமாகவே இத் தகைய செல்போன்களில் சீக்கிரமே `சார்ஜ்’ தீர்ந்துவிடுகிறது. செல்போ ன்களில் `ரிசர்வ் சார்ஜ்’ என்ற ஒன்று இருப்பது நிறையப் பேருக்குத் தெரி யாது. அது, பேட்டரியின் உண்மை யான மின் சேமிப்புத் திறனில் 50 சத வீதமாகும்.

இந்த `ரிசர்வ் சார்ஜை’ பயன்படுத்துவதற்கு நாம், *3370# என்ற `கீ’க்களை அழுத்த வேண்டும். இந்த வகையில் அழுத்தியவுடனே, `சார்ஜ்’ இன்றி முடங்கிய செல்போன் உயிர்ப்பெறும். 50 சதவீத பேட்டரி சார்ஜை காட் டும். அடுத்த முறை நீங்கள் செல் போனை `சார்ஜ்’ செய்யும் போது இந்த `ரிசர்வ்’ இருப்பு, சார்ஜ் ஆகிக் கொள்ளும்.

தொலைந்துபோனால்…

செல்போன் தொலைந்து போனா லோ, திருட்டுப்போனாலோ அ தை முறைப்படி `பிளாக்’ செய்ய வோ, மீட்கவோ வழியிருக்கிறது. இது பற்றிச் சிலர் அறிந்திருப்பார்கள் என்றாலும், முழுமையாகப் பார்க்கலாம்-

ஒவ்வொரு செல்போனுக்கு ஒரு வரிசை எண் உள்ளது. ஐ.எம்.ஈ.ஐ. எண் என்ற அது, ஒவ்வொரு செல்போனுக்கும் தனித்தன்மை யானது ஆகும்.

உங்கள் செல்போனின் ஐ.எம்.ஈ.ஐ. எண்ணை அறிய, *#06# என்ற `கீ’க்களை அழுத்துங்கள். உடனே செல்போன் திரையில் ஒரு 15 இலக்க எண் தோன்றும். இந்த ஐ.எம்.ஈ.ஐ. எண் , ஒவ்வொரு செல்போனுக்கும் வேறு படும். இந்த எண்ணைக் குறித்துவைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் செல்போன் தொலைந்து போனா லோ, திருட்டுப்போனாலோ உங்களுக்கு செல்போன் சேவையை அளி க்கும் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு இந்த எண்ணைக் கொடுங்கள். அவர்கள் உடனே குறிப்பிட்ட செல் போனை `பிளாக்’ செய்வார்கள். செல் போனை யாராவது திருடி அதன் `சிம்கார்டை’ மாற்றினாலும் அவர்களா ல் முற்றிலுமாக செல்போ னை பயன்படுத்த முடியாமல் போகும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: