உலகின் ஆதி காலத்தில் மக்கள் நாடோடி வாழ்க்கை முறையை மேற் கொண்டனர் என்பதை நாமறிவோம். அம்மக்கள் மரங்க ளிலேயே வாழ்ந்தார்கள் என்பதையும் நாமறிவோம். இரவு காலத்தில் பயத்தின் காரணமாக, எப்போது விடியும் என்று காத் திருந்தனர். இரவு காலத்தின் ஒலிகளும் அசைவுகளும் மனிதனுக்கு பேரச்சத்தை உண்டாக்கின. செங்கதிரவன் தோன்றி யதும் அவன் தனது அச்சத்தை மறந்தான் என்பதால், நாளும் கதிரவனை எதிர்நோ க்கி நின்ற மனிதனுக்கு செங்க திரவனே கடவுளாக தோன்றினான். சிவந்த நிறம் கொண்ட கதிரவனை சிவந்தவன் என்ற பொருளில் சிவன் என்றே அழைத்தனர். சிவ வணக்கம் என்பது இயற்கையின் பாற்பட்டது. இயற்கையோடு இணைந்தது.
விலங்குகளின் தாக்குதலிலிருந்து தப்ப நினைத்த மனிதர்கள் இரவு நேரத்தில் மரங்க ளிலேயே குடியிருந்தனர். மரங்களிலும் இரவு காலங்களில் கேட்கப்பட்ட ஒலிகள், அசை வுகள் மக்களை அச்சதுக்குள்ளக்கியதால், தங் களுக்கு பாதுகாப்பாக இரவு காலங்களில், தங் களது கடவுளான சிவனை மரங்களிலேயே வந்து குடியிருக்குமாறு வேண்டிக் கொண்டா ன். மரங்களில் பெருமரங்களே முதல் மனித ர்கள் குடியிருந்த இடங்களா தலால், அப்பெரு மரங்களிலேயே சிவனும் குடியிருப்பதாக எண் ணினர். ஆலமரம் மற்ற மரங் களைக் காட்டிலும் பெரிதாகவும், விரிந்து படர்ந்து விழு துகளை இறக்கி நிலைப்பெற்றிருந்ததால், முதல் மனிதர் கள் தாங்கள் குடியிருந்த ஆலமரதிலேயே சிவ னும் குடியிருப்பதாக எண்ணி ஆல மரத்தையே சிவனுக்குரிய மரமாக கருதினர்.
ஆய் அண்டிரன் என்ற வள்ளல், அவனுக் குக் கிடைக்கப்பெற்ற அரிதான ஆடையை, ஆலமர் செல்வனுக்குச் சாத்தினான் என் று சிறுபாணாற்றுப் படை கூறுகிறது. சிவ ன் ஆலமரத்தில் குடியிருப்பதாக அக நா னூறு கூறு கி றது (அகநானூறு-181 :16 -17 )
“ஆலமர் செல்வன்” – சிறுபாணாற்றுப் படை (97 )
“ஆல்கெழு கடவுள்” – புறநானூறு (198 :9 )
மனித இனத்தின் முதல் கடவுள் சிவனே என்பது இதிலிருந்து தெளிவு. (உலகின் தொன்மையான நாகரிகம் சிந்து சமவெ ளிப் பகுதியில் கண்டெ டுக்கப்பட்ட சிவன் சின்னமும் இதனை உறுதிப்ப டுத்துகிறது.)
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
இக்கட்டுரையில் ‘சிவன்‘ என்ற கடவுள் ஆலமரத்துடன் இணைப்பட்டுள்ளான். ஆனால், சைவசித்தாந்த நூலான ‘சிவஞானபோதம்‘ என்ற நூலின் ஆரம்பத்தில் வைக்கப்பட்டுள்ள பாட்டில், “கல்லால் நிழல் மலைவில்லார் அருளிய பொல்லார் அடியிணை நல்லார் தொழுவரே” எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ‘கல்லால்‘ என்றால் என்ன மரம் என்ற கேள்லி எழுகிறது. சிவஞானபோதம் நூலுக்கு உரைகளை எழுதியிருந்த சிவஞானமுனிவரும், பாண்டிப்பெருமாளும், கல்லால் என்பதைக் ‘கல்லால்‘ என்றுதான் குறிப்பிட்டுள்ளனர், அது என்ன மரம் என்பதைக் கூறவேயில்லை. இந்தநிலையில், ‘சிவஞானபோதம்‘ நூலின் ஆரம்பப்பாட்டில் குறிப்பிடப்பட்டவன் ‘சிவன்‘ இல்லையா? அப்படியாயின், ‘சிவஞானபோதம்‘ என்பது என்ன? சைவம் என்பது என்ன?