Monday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புஸ்வாணம்!

அக்டோபர் 2011 (இந்த) மாத உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம்

ஜ‌னநாயகம் என்ற பெயரில் நம் நாட்டில் வெடிகுண்டாய்ப் பூகம் பமாய் புறப்படும் சில பிரச்சினைக ளெல்லாம் கடைசியில் புஸ்வாண மாய் முடிவதைப் பார்க் கும்போது, சட்ட‍ம் ஓர் இருட்ட‍றை என்று பேரறி ஞர் அண்ணா ஏன் சொன் னார் என்பது இப்போது தான் புரி கிறது.!

பல குற்ற‍வாளிகள் தப்பிக்க‍லாம், ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்க‍ப்படக்கூடாது என்பதுதான் நமது சட்ட‍த்தின் முக்கிய விதி, சபாஷ்! அதனால்தான் ஒரு சிலரை நிரபராதி ஆக்குவத ற்காகப் பல குற்ற‍வாளிகளைத் தப்பிக்க‍ விடுகிறார்கள்.

அலைக்கற்றை ஊழலும், காமன்வெல்த் விளையாட்டு ஊழலும், கார்கில் தியாகிகள் வீட்டு விஷயத்தில் ஏற்பட்ட‍ ஊழலும் வி ஸ்வரூப தரிசனம் காட்டியபோதும்… ஊடகங்கள் வெளிச்ச‍ம் போட்டுக் காட்டி யபோதும், உச்ச‍நீதிமன்றம் புலனாய்வுத் து றைக்கும் அரசுக்கும் எச்ச‍ரிக்கை விடுத்த‍ போதும், அடடா நீதி பிழை த்த‍து! என்று நம் அப்பாவி இந்தியன் மகிழ்ந்து போனான்.

இராசாவானாலும் கூஜாவானாலும் நம் நாட்டில் தண்டனை கிடைக்குதே… நீதி நிமி ர்ந்து விட்ட‍தே! என்று ஆனந்தக் கூத்தா டினான். ஆனால் இன்று அந்த மகிழ்ச்சி நீடி க்கிறதா?

அலைக்கற்றை ஊழலில் மத்தாப்பு ஒளியாய் மலர்ந்த இந்திய ஜன நாயகம் கடந்த சில நாட்களாக நமுத்துப்போன பட்டாசாய் மாறிப் போனது எதனால்? ஒரு சில பெருந் தலைவர்களைக் காப்பாற்ற‍த்தானே? இனி இந்த வழக்கு என்ன‍ ஆகும்?

போபர்ஸ… சவப்பெட்டி ஊழல்… உர ஊழ ல் பால்டியா… முத்திரை த் தாள் ஊழல்… மாட்டுத்தீவன ஊழல்… இவைகளெல் லாம் அடக்க‍ம் செய்ய‍ப்பட்ட‍துபோல, அலைக்கற்றை ஊழலும், காமன் வெல்த் ஊழல்களும் அடக்க‍ம் செய்ய‍ப்படும் என்பது தெரிகிறது.

குற்ற‍வாளிகளைப் பாதுகாக்க‍வும்… அவ ர்களுக்கு வசதிகளை ஏற்படுத்த‍வும், அவர்களுக்காக நடத்த‍ப்படும் விசார ணை, நீதிமன்ற, காவல்து றைச்செலவுகளெல்லாம் காசைக் கரியாக்கும் தீபாவளி போன்றது தானே!

நம் இந்தியக் குடிமகனின் வியர் வையை உறிஞ்சி அந்த உழைப்பி ல் கிடைக்கும் வரிப்பணத்தையெல் லாம் இப்ப‍டி வீணாக்க‍த்தான் வே ண்டுமா?

இந்தக் கேள்விகளை ஆட்சியாளர் கள் காது கிழியும்படி வெடிக்க‍ச் செய்வோம். புதிய பாரதத்தை நம் விழிப்புணர்வால் ஒளிர வை ப்போம்!

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply